search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஹிட்மேன்"

    • அதிரடியாக விளையாடிய ரோகித் 41 பந்துகளில் 92 ரன்கள் விளாசினார்.
    • ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டும் ஹசில்வுட் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    டி20 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் - கோலி களமிறங்கினர். தொடக்கமே இந்திய அணிக்கு அதிர்ச்சி காத்திருந்தது. விராட் கோலி 0 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் மீண்டும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய பேட்டிங் சொதப்பலாக இருக்க போகிறது என்று எதிர்பார்த்த நிலையில் ரோகித் ருத்ரதாண்டவம் ஆடினார்.

    இடது கை வேகபந்து வீச்சாளர் ஓவரில் தடுமாடுவார் என்ற நிலை மாறி ஸ்டார்க் வீசிய 3-வது ஓவரில் 29 ரன்களை ரோகித் குவித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 19 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார். நடப்பு டி20 தொடரில் அதிவேக அரை சதம் அடித்த வீரர் மற்றும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்த வீரர், அதிக சிக்சர் அடித்த வீரர் என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.

    அடுத்து வந்த ரிஷப் பண்ட் 15 ரன்னில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோகித் சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 92 ரன்னில் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

    இதனை தொடர்ந்து துபே- சூர்யகுமார் ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 16 பந்தில் 32 ரன்கள் எடுத்த நிலையில் சூர்யகுமார் யாதவ் ஸ்டார்க் பந்தில் நடையைகட்டினார். அதனை தொடர்ந்து துபே மந்தமாக விளையாடி 22 பந்தில் 28 ரன்களுடன் வெளியேறினார். இறுதியில் பாண்ட்யா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி 200 ரன்களை எடுக்க உதவினார்.

    இதனால் இந்திய அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் குவித்தது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், ஸ்டோய்னிஸ் 2 விக்கெட்டும் ஹசில்வுட் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.

    • விராட் கோலி 5 பந்தில் 0 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • இந்திய அணியின் ஸ்கோர் 52- ஆக இருக்கும் போது ரோகித் சர்மாவின் ரன் 50-ஆக இருந்தது

    டி20 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதி வருகின்றனர். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் - கோலி களமிறங்கினர்.

    கோலி டக் அவுட் ஆகி வெளியேறினார். இதனை தொடர்ந்து ரோகித் சர்மா அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். குறிப்பாக ஸ்டார்க் வீசிய 3-வது ஓவரை சிக்சர் பவுண்டரியுமாக பறக்க விட்டார். அந்த ஓவரில் மட்டும் 4 சிக்சர் 1 பவுண்டரி அடங்கும்.

    இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் 200 சிக்சர் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்துள்ளார். இதை தவிர நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் அதிவேக அரைசதம் விளாசிய வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 19 பந்தில் அரை சதம் விளாசி அசத்தி உள்ளார்.

    இந்திய அணியின் ஸ்கோர் 52- ஆக இருக்கும் போது ரோகித் சர்மாவின் ரன் 50-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.

    மேலும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய விராட் கோலி, பாபர் அசாம் ஆகியோரை பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை ரோகித் சர்மா (4165) பிடித்துள்ளார். அடுத்த இரு இடங்கள் முறையே பாபர் அசாம் 4145 ரன்களும் விராட் கோலி 4103 ரன்களும் எடுத்துள்ளனர். 

    ×