என் மலர்
நீங்கள் தேடியது "உலககோப்பை யூரோ 2024"
- குரேஷியா மற்றும் இத்தாலி அணிகளுக்கு இடையேயான போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
- ஸ்பெயின் 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று குரூப் பி-யில் முதல் இடத்தில் உள்ளது.
யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடைப்பெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடந்த ஆட்டத்தில் குரேஷியா மற்றும் இத்தாலி அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டி 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.
மற்றொரு ஆட்டத்தில் அல்பேனியா மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதின. இந்த போட்டியில் 1-0 என்ற கோல் கணக்கில் ஸ்பெயின் வெற்றி பெற்றது.
இதன் மூலம் ஸ்பெயின் 3 போட்டிகளில் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று குரூப் பி-யில் முதல் இடத்தில் உள்ளது. அடுத்த இடத்தில் இத்தாலி உள்ளது. 3 போட்டிகளில் 1 வெற்றி 1 தோல்வி 1 டையுடன் உள்ளது. அல்பேனியா, குரேஷியா அணிகள் இதுவரை வெற்றி கணக்கை தொடங்கவில்லை.