search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இயன் ஸ்மித்"

    • நைப் குறித்து தமிழக வீரர் அஸ்வின் கிண்டலடித்துள்ளார்.
    • நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரரும் இவரை கலாய்த்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பையின் இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதின. இதில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் முதல் முறையாக ஐசிசி தொடரின் அரையிறுதிக்கு ஆப்கானிஸ்தான் தகுதி பெற்று புதிய சாதனை படைத்தது.

    முன்னதாக இந்த போட்டியின் 2-வது இன்னிங்சில் மழை அவ்வப்போது வந்து ஆப்கானிஸ்தானுக்கு சோதனை கொடுத்தது. குறிப்பாக 12-வது ஓவர் வீசிக் கொண்டிருக்கும் போது மழை வருவது போல் தெரிந்தது. அப்போது டிஎல்எஸ் விதிமுறைப்படி வங்கதேசத்தை விட ஆப்கானிஸ்தான் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு இருந்தது.

    அதன் காரணமாக பெவிலியனில் இருந்த ஆப்கானிஸ்தான் அணியின் பயிற்சியாளர் எதையாவது செய்து போட்டியை கொஞ்சம் மெதுவாக்குங்கள் என்று சைகை காட்டினார்.

    அதை முதல் ஸ்லிப் பகுதியில் நின்று கொண்டு பார்த்த ஆப்கானிஸ்தான் வீரர் குல்பதின் நைப் உடனடியாக தம்முடைய தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டு காயமடைந்தது போல் அப்படியே களத்தில் விழுந்தார். அதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி மருத்துவ குழுவினர் அவரை சோதித்ததால் சில நிமிடங்கள் ஆட்டம் தடைப்பட்டது.

    குல்பதின் நைப் உண்மையாக காயடைந்துள்ளேன் என்பதை நடுவர்களுக்கு காட்டுவதற்காக பெவிலியன் சென்று அமர்ந்து கொண்டார். ஆனால் ஒரு முடிந்ததும் பின்னர் களத்திற்கு திரும்பினார். அதன் பிறகு 2 ஓவர்கள் பந்து கூட வீசினார்.

    அதை பார்க்கும் ரசிகர்கள் இவருக்கு ஆஸ்கார் விருதை கொடுக்கலாம் போல என்று கிண்டலடிப்பதுடன் நாட்டுக்காக இப்படி ஒரு நடிப்பை வெளிப்படுத்தியதற்கு பாராட்டையும் தெரிவிக்கின்றனர். ரசிகர்கள் தவிர கிரிக்கெட் வீரர்களும் அவரை கலாய்த்து பதிவு செய்து வருகின்றனர்.


    அந்த வகையில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் கூறியதாவது, கால்பந்து போல இவரை சிவப்பு அட்டை கொடுத்து வெளியேற்றுங்கள் என்று எக்ஸ் தளத்தில் கலாய்த்தார்.

    மேலும் இந்த போட்டிக்கு வர்ணனை செய்தவர்களில் ஒருவரான நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் இயன் ஸ்மித் கூறியதாவது,


    எனக்கு 8 மாதங்களாக மூட்டு வலி இருக்கிறது. நான் உடனடியாக ஆப்கன் வீரர் குல்புதினின் மருத்துவரை சென்று பார்க்கப் போகிறேன். அந்த மருத்துவர்தான் உலகின் 8-வது அதிசயம் என நக்கலாக கூறினார்.

    ×