என் மலர்
நீங்கள் தேடியது "சாம்பவி சவுத்ரி"
- நேற்று பிரதமர் மோடி மற்றும் 279 பேர் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர்.
- சாம்பவி சவுத்ரி தான் பீகார் சமஸ்திபூர் தொகுதியின் முதல் பெண் எம்.பி. ஆவார்.
18-வது மக்களவை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இடைக்கால சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டு அவர் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்து வருகிறார்.
நேற்று பிரதமர் மோடி மற்றும் 279 பேர் எம்.பி.க்களாக பதவி ஏற்றனர். அப்போது, இந்தியாவின் இளம் வயது எம்பிக்களில் ஒருவரான சாம்பவி சவுத்ரி பதவியேற்று கொண்டார்.
26 வயதான சாம்பவி சவுத்ரி சேலை அணிந்து வந்து எந்த பேப்பரையும் பார்த்து படிக்காமல் உறுதிமொழி எடுத்து கொண்டார்.
சிராக் பாஸ்வானின் எல்.ஜே.பி, கட்சியை சேர்ந்த சாம்பவி பீகார் மாநிலம் சமஸ்திபூர் தொகுதியின் முதல் பெண் எம்.பி. ஆவார்.