search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மிசைல்கள்"

    • கடற்கரை பகுதியான அல்- மவாசி பகுதியில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள கூடாரங்களின்மீது நேற்று இரவு இஸ்ரேல் குண்டு மழை பொழிந்துள்ளது.
    • சுமார் 2000 பவுண்டுகள் [சுமார் 1000 கிலோ] எடையிலான 10,000 ஆயுதங்களையும், மிசைல்கலையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பிவைத்துள்ளது

    பாலஸ்தீன நகரங்களின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள் ஓய்ந்தபாடலில்லை. இந்த போரில் இதுவரை 37,718 பேர் உயிரிழந்துள்ள நிலையில் காசா நகரம் முற்றிலும் உருக்குலைந்துள்ளது. பாலஸ்தீன மக்கள் அதிகம் வாழும் மற்றொரு நகரமான ரஃபா மீது இஸ்ரேல் தற்போது குறிவைத்து தாக்குதல்களை நடத்திவருகிறது. மக்கள் தஞ்சமடைந்துள்ள முகாம்கள், மருத்துவமனைகள் என வகைதொகை இன்றி கண்மூடித்தனமாக இஸ்ரேல் நடத்தி வரும் இந்த தாக்குதல்களுக்கு உலக நாடுகள் கண்டம் தெரிவித்து வருகின்றன.

    இந்த போரை முடிவுக்கு கொண்டுவருவது எட்டாக்கனியாக இருந்து வரும் நிலையில் ரஃபா நகரில் உள்ள கடற்கரை பகுதியான அல்- மவாசி பகுதியில் பொதுமக்கள் தஞ்சமடைந்துள்ள தற்காலிக கூடாரங்களின் மீது நேற்று இரவு இஸ்ரேல் குண்டு மழை பொழிந்துள்ளது. இந்த தாக்குதலில் 11 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் தாக்குதலுக்குள்ளான  கூடாரங்களில் இருந்த 40 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

     

     

    இஸ்ரேலின் பீரங்கிகள் அப்பகுதியில் முன்னேறிவந்துள்ள நிலையில் அங்குள்ள மக்களிடம் பயத்தையும் பதற்றத்தையும் ஏற்படுத்தவே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது என்று கூறபடுகிறது. இதற்கிடையில் போர் தொடங்கிய கடந்த அக்டோபர் மாதம் முதல் இன்றுவரை அதிக சேதத்தை ஏற்படுத்தும் சுமார் 2000 பவுண்டுகள் [சுமார் 1000 கிலோ] எடையிலான 10,000 ஆயுதங்களையும், மிசைல்கலையும் அமெரிக்கா இஸ்ரேலுக்கு அனுப்பிவைத்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 

     

    ×