search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிசர்வ் நாள்"

    • இன்றைய ஆட்டத்தில் வெற்றி வாகை சூடும் அணிக்கு ரூ.20¼ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும்.
    • 2 அணிகளும் குறைந்தது 10 ஓவர்கள் விளையாடினால் மட்டும் தான் ஆட்டத்தின் முடிவு தெரியவரும்.

    9-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 1-ம்தேதி தொடங்கியது. அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்றன.

    லீக் மற்றும் சூப்பர் 8 சுற்று முடிவில் இந்தியா, ஆப்கானிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதியை எட்டின.

    அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா 9 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானையும், இந்திய அணி 68 ரன் வித்தியாசத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்தையும் விரட்டியடித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

    இந்த நிலையில் இன்று இறுதி ஆட்டத்தில் இந்தியாவும், தென் ஆப்பிரிக்காவும் பார்படோஸ் தலைநகர் பிரிட்ஜ்டவுனில் உள்ள கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு பலப்பரீட்சை நடத்துகின்றன.

    2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் கோப்பைக்கு பிறகு இந்தியா எந்த ஐ.சி.சி. கோப்பையும் வென்றதில்லை என்பதால் இந்த இறுதிப்போட்டி மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. அதே போல் முதல்முறையாக டி20 உலகக்கோப்பையை தென் ஆப்பிரிக்கா அணி கைப்பற்றுமா என்று ஆவலும் அதிகரித்துள்ளது.

    இன்றைய ஆட்டத்தில் வெற்றி வாகை சூடும் அணிக்கு ரூ.20¼ கோடி பரிசுத்தொகையாக வழங்கப்படும். 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.10½ கோடி கிடைக்கும்.

    ஆனால், போட்டி நடைபெறும் கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் மழை பெய்வதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஒருவேளை இன்று மழையால் ஆட்டம் கைவிடப்பட்டால் நாளை ரிசர்வ் நாளில் போட்டி விட்ட இடத்தில இருந்து மீண்டும் துவங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. ரிசர்வ் நாளிலும் மழையால் ஆட்டம் ரத்து செய்யப்பட்டால் உலகக்கோப்பை 2 அணிகளுக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.

    2 அணிகளும் குறைந்தது 10 ஓவர்கள் விளையாடினால் மட்டும் தான் ஆட்டத்தின் முடிவு தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×