என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாலம் இடிந்து விழுந்தது"
- அம்ஹாரா கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பர்மான் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்தது.
- பீகாரில் ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த 15வது பாலம் இதுவாகும்.
பீகார்:
பீகாரில் பாலங்கள் இடிந்து விழுவது தொடர்கதையாகியுள்ளது. அவ்வகையில் நேற்று மாலை மேலும் ஒரு பாலம் இடிந்து விழுந்தது.
அம்ஹாரா கிராமத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் பர்மான் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்தது.
2008ல் கட்டப்பட்ட இந்த பாலம், 2017ல் ஏற்பட்ட வெள்ளத்தில் முற்றிலும் சேதமடைந்து மக்கள் பயன்படுத்த தகுதியற்றது என அறிவிக்கப்பட்டது. அதன்பின் 2021ல் புனரமைக்கப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது.
பீகாரில் ஒரே மாதத்தில் இடிந்து விழுந்த 15வது பாலம் இதுவாகும். ஏற்கனவே பாலம் விபத்துகள் தொடர்பாக 15 பொறியாளர்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர்.
- 2 வாரங்களுக்குள் 5 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்துள்ளது.
- தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது.
பாட்னா:
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள மாதேபூர் நகரில் பூதாஹி ஆற்றின் மீது பாலம் ஒன்று கட்டப்பட்டு வந்தது. மதுபானியை சுபால் மாவட்டத்துடன் இணைக்கும் வகையில் 75 மீட்டர் நீளத்துக்கு பாலம் கட்டப்பட்டு வந்தது.
கடந்த 2021-ம் ஆண்டு முதல் பீகார் அரசின் ஊரகப் பணிகள் துறையின் மேற்பார்வையில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வந்தன.
இந்த நிலையில் இந்த பாலம் நேற்று காலை திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கனமழையால் ஆற்றில் நீர்மட்டம் உயர்ந்து நீரோட்டம் அதிகரித்ததால் பாலம் இடிந்து விழுந்ததாகவும், நீர்மட்டம் குறைந்த பிறகு பாலம் கட்டும் பணிகள் மீண்டும் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். பீகாரில் கடந்த 11 நாட்களில் நடந்த 5-வது சம்பவம் இதுவாகும்.
18-ந் தேதி அராரியா மாவட்டத்தில் ரூ.12 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய பாலம் திறப்பு விழாவுக்கு முன்பே இடிந்து விழுந்தது.
22-ந் தேதி சிவான் மாவட்டத்தில் கண்டக் கால்வாயின் மீது 45 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சிறிய பாலம் இடிந்து விழுந்தது.
23-ந் தேதி, கிழக்கு சம்பாரண் மாவட்டத்தில் கட்டுமான பணிகள் நடந்து வந்த பாலம் இடிந்து விழுந்தது.
26-ந் தேதி கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் மதியா ஆற்றின் மீது கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது.
2 வாரங்களுக்குள் 5 பாலங்கள் அடுத்தடுத்து இடிந்து விழுந்த சம்பவம் பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதனிடையே இந்த விவகாரத்தை சுட்டிக்காட்டி மாநில எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ், நிதிஷ் குமார் அரசை கடுமையாக சாடினார்.
இதுப்பற்றி அவர் கூறுகையில், ''நிதிஷ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியில் ஊழல் தலைவிரித்தாடுகிறது, இதன் விளைவாக மாநிலத்தில் அனைத்து கட்டுமானப் பணிகளிலும் தரமற்ற பொருட்களைப் பயன்படுத்துகின்றனர்" என்று அவர் குற்றம் சாட்டினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்