என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மழைநீர் தேக்கம்"

    • மழை நீர் தேங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
    • இப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளதால் மிகவும் தவித்து வருகிறோம்.

    டெல்லியில் இன்றும், நாளையும் கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் கனமழைக்கான ஆர்ஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

    டெல்லி மற்றும் அண்டை மாநிலங்களான பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் வெயில் சுட்டெரித்த நிலையில், கடந்த சில நாட்களாக டெல்லி மற்றும் புறநகரில் வரலாறு காணாத மழை கொட்டித் தீர்த்தது. அதேபோல அண்டை மாநிலங்களிலும் கனமழை பெய்தது.

    மழை காரணமாக உத்தரபிரதேசம் மாநிலத்தின் முரதாபாத் மாவட்டத்தில் போலாநாத் காலனியில் மழை நீர் தேங்கி உள்ளது. போலாநாத் காலனி பகுதியில் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும் மழை நீர் தேங்கி உள்ளதால் அப்பகுதி மக்கள் படகுகளை பயன்படுத்தி வருகின்றனர்.

    அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த பகுதியில் மழை நீர் வடிகால் இல்லை. இங்கு தேங்கி இருக்கும் நீரில் மூழ்கவும் வாய்ப்பு உள்ளது. நாங்கள் 3 நாட்களாக இங்கு அடைபட்டிருக்கிறோம். நேற்று மட்டும் ஒரு படகு வந்தது. ஒவ்வொரு வருடமும் இப்பகுதியில் இப்படிதான் நடக்கும் என்றார்.

    இந்த பகுதியில் நிலைமை மோசமாக உள்ளது. நாங்கள் படகை பயன்படுத்தி வருகிறோம். இப்பகுதி முழுவதும் தண்ணீர் தேங்கி உள்ளதால் மிகவும் தவித்து வருகிறோம். படகு நேற்றுதான் வந்தது. இந்த தண்ணீரில்தான் பயணிக்க வேண்டும் என்று கூறினார்.

    ×