search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பா.சிதம்பரம்"

    • 'இடைத்தேர்தல் முடிவுகள் மக்களிடம் பாஜகவால் உருவாக்கப்பட்ட அச்சம் மற்றும் குழப்பத்தின் வலையை உடைத்தெறித்துள்ளது'
    • 'பாஜகவின் ஆணவம், முறையற்ற நிர்வாகம் மற்றும் எதிர்மறை அரசியலை மக்கள் முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர்'

    தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதி உட்பட மேற்கு வங்காளம் (4), இமாச்சல பிரதேசம் (3), தமிழ்நாடு (1), பஞ்சாப் (1), உத்தரகாண்ட் (2), பீகார் (1), மத்திய பிரதேசம் (1) ஆகிய மாநிலங்களில் உள்ள 13 தொகுதிகளுக்கு கடந்த 10-ந்தேதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில் 13 தொகுதிகளில் 10 தொகுதிகளை இந்தியா கூட்டணி கட்சிகள் கைப்பற்றுகிறது. இரண்டு இடங்களில் மட்டுமே பாஜக கூட்டணி வென்றுள்ள நிலையில் ஒரு இடத்தில் சுயேச்சை வேட்பாளர் வெற்றிபெற்றுள்ளார்.

    மக்களவைத் தேர்தலில் கணிசமான இடங்களில் வென்று பாராளுமன்றத்தில் குறிப்பிடத்தக்க சக்தியாக உருவெடுத்துள்ள இந்தியா கூட்டணி இடைத்தேர்தலில் பாஜகவை பின்னுக்கு தள்ளி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது பாஜகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த வெற்றி குறித்து காங்கிரஸ் மற்றும் எதிரிகட்சித் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், பாராளுமன்ற எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில்,'7 மாநிலங்களில் நடந்த இடைத்தேர்தல் முடிவுகள் மக்களிடம் பாஜகவால் உருவாக்கப்பட்ட அச்சம் மற்றும் குழப்பத்தின் வலையை உடைத்தெறித்துள்ளது. நாட்டின் விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகியோர் சர்வாதிகாரத்தை அளித்து நியாயத்தின் ஆட்சியை நிலைநாட்ட விரும்புகின்றனர். அந்த வகையில் மக்கள் அவர்களின் வாழ்க்கை மற்றும் அரசியலமைப்பின் பாதுகாப்புக்காக இந்தியா கூட்டணியின் பக்கம் நிற்கின்றனர்' என்று தெரிவித்துள்ளார்.

    இடைத்தேர்தல் வெற்றி குறித்து காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது எக்ஸ் பக்கத்தில், 'இடைத்தேர்தல் முடிவுகள் மோடி மற்றும் அமித் ஷாவின் அரசியல் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளதை நிரூபிக்கும் தக்க சான்றாகும். இந்த வெற்றிக்காக உழைத்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு நன்றி, கடுமையாக சூழல்களையும் முறியடித்த காங்கிரஸ் தொண்டர்களுக்கு தலை வணங்குகிறேன். பாஜகவின் ஆணவம், முறையற்ற நிர்வாகம் மற்றும் எதிர்மறை அரசியலை மக்கள் முற்றிலுமாக புறக்கணித்துள்ளனர் என்பதையே இந்த வெற்றி காட்டுகிறது' என்று தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் மூத்த தலைவர் பா.சிதம்பரம் தனது எக்ஸ் பதிவில், 'இந்த தேர்தல் வெற்றி பாஜகவுக்கு மறக்க முடியாத படத்தை கற்றுக்கொடுத்துள்ளது. பாஜக ஏற்படுத்திய வேலையின்மை, விலைவாசி உயர்வு, வெறுப்பு அரசியல் உள்ளிட்டவற்றால் மக்கள் அதிருப்தியில் உள்ளனர்' என்று தெரிவித்துள்ளார்.

    வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி, 'நிகழ்காலத்தையும் மூலம் வருங்காலத்துக்கான தீர்க்கமான பார்வையையும் கொண்டுள்ள நேர்மறை அரசியலை மக்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இளைய இந்தியாவின் கனவுகளுக்கும் தேவைகளுக்கும் உழைப்பவர்களாக நாங்கள் இருப்போம்' என்று தெரிவித்துள்ளார். 

    • புதிய சட்டங்களில் பெரும்பாலான அம்சங்கள் பழைய சட்டங்களை வெட்டி ஒட்டியதுதான்
    • மற்றங்கள் செய்யப்பட்ட சில அம்சங்கள் அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது.

    இந்திய தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சி.ஆர்.பி.சி.), இந்திய சாட்சியங்கள் சட்டம் உள்ளிட்ட பழைய ஆங்கிலேயர் கால சட்டங்களுக்குப் பதிலாக பாரதிய நியாய சன்ஹிதா (பி.என்.எஸ்.), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பி.என்.எஸ்.எஸ்.), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு அறிமுகப்படுத்திய நிலையில் இன்று முதல் அவை அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் புதிய சட்டங்களில்  பெரும்பாலான அம்சங்கள் பழைய சட்டங்களை வெட்டி ஒட்டியதுதான் என்று காங்கிரஸ் மாநிலங்களவை எம்.பி பா.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

     

    புதிய சட்டங்கள் குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில் கூறியதாவது,

    'இன்று நடைமுறைக்கு வந்துள்ள 3 புதிய சட்டங்களில் 90 முதல் 99 சதவீதம் வரை பழைய சட்டங்களை வெட்டி ஒட்டிய வேலை தான் நடந்துள்ளது. புதிய சட்டங்களில் உள்ள சில அம்சங்களை நங்கள் வரவேற்றோம். இதற்கு பழைய சட்டங்களில் சில திருத்தம் கொண்டு வந்திருந்தாலே போதும். அதை விட்டுவிட்டு புதிதாக 3 சட்டங்களை உருவாக்கியது வீண் வேலை.

    அதுமட்டுமின்றி புதிய சட்ட விதிகளில் சில முன்னுக்குப் பின்னான குழப்பங்கள் உள்ளது. மாற்றங்கள் செய்யப்பட்ட சில அம்சங்கள் அரசியலமைப்புக்கு முற்றிலும் எதிரானது. இந்த அம்சங்கள் குறித்து பாராளுமன்ற நிலைக்குழுவில் உள்ள எம்.பிக்கள் கருத்து வேறுபாடு உள்ளதாக குறிப்பிட்டிருந்தும் அந்த விமர்சனங்களை அரசு கண்டுகொள்ளவில்லை. புதிய சட்டங்கள் குறித்த ஆக்கப்பூர்வமான விவாதம் எதுவும் பாராளுமன்றதில் நடைபெறவில்லை.

    சட்ட வல்லுனர்கள், பார் கவுன்சில் உறுப்பினர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள் என பலர் புதிய சட்டங்களில் உள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டியும் அவற்றை அரசு பொருட்படுத்தவில்லை. இதற்கு நேர் மாறாக எந்த விவாதமும் இன்றி புதிய சட்டங்களை அரசு தன்னிச்சையாக நிறைவேற்றியுள்ளது. இது அரசியலமைப்பின் மீது நேரடியாக நடத்தப்பட்ட தாக்குதல்.

    இந்த புதிய சட்டங்கள் சிறிது காலத்துக்கு நீதிமன்றங்களுக்கு பெரும் சவாலாக இருக்கும். மேலும் வருங்காலத்தில் இந்த புதிய சட்டங்களில் அரசியலமைப்புக்கு எதிராக உள்ள அம்சங்கள் நீக்கப்பட்டு நீதித்துறையின் கொள்கைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார். 

     

    ×