என் மலர்
நீங்கள் தேடியது "மஹூவா மொய்த்ரா"
- மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
- மசோதா மீதான விவாதம் 12 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.
புதுடெல்லி:
பாராளுமன்ற மக்களவையில் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.
இதையடுத்து, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்குகளும் , எதிராக 232 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், மசோதா நிறைவேற்றப்பட்டது குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா கூறியதாவது:
இங்கு வெறும் ஐம்பது வாக்கு வித்தியாசம் மட்டுமே உள்ளது, இந்த மசோதா எவ்வளவு பிரபலமற்றது மற்றும் பொதுமக்களின் ஆணைக்கு எதிரானது என்பதை நீங்கள் புரிந்துகொள்கிறீர்கள்.
கட்சியின் கொறடா மற்றும் இரு கூட்டாளிகளால் மட்டுமே அவர்களால் இந்த மசோதாவை நிறைவேற்ற முடிந்தது.
இந்தியாவின் மதச்சார்பற்ற ஜனநாயகத்தில் இது மிகவும் இருண்ட நாள். அரசாங்கம் நியாயமற்ற மற்றும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான ஒரு மசோதாவைக் கொண்டு வந்துள்ளது என தெரிவித்தார்.
- ராகுல் சொன்னது போல பயத்தில் இருந்து விடுதலை பெற்றேன்.
- மன்னர் ஆட்சியின் அடையாளம்தான் செங்கோல்.
எம்.பி பதவி பறிக்கப்பட்ட பின் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹூவா மொய்த்ரா மக்களவையில் இன்று பாஜகவுக்கு எதிராக அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.
மக்களவையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹூவா மொய்த்ரா கூறியதாவது:-
கடந்த வருடத்தில் பலர் என்னை பார்த்து மொய்த்ரா நீங்கள் நிறைய இழந்துவிட்டீர்கள் என்றனர். ஆம். நான் என்னுடைய பதவியை இழந்துவிட்டேன். வீட்டை இழந்துவிட்டேன். ஒரு அறுவை சிகிச்சையின்போது எனது கர்ப்பப்பையை இழந்துவிட்டேன்.
நான் எதை பெற்றேன் என தெரியுமா? ராகுல் சொன்னது போல பயத்தில் இருந்து விடுதலை பெற்றேன். உங்களை பார்த்து நான் பயப்பட மாட்டேன்.
இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் | குடியரசுத் தலைவர் செங்கோலுடன் அழைத்து வரப்பட்டார். மன்னர் ஆட்சியின் அடையாளம்தான் செங்கோல். ஜனநாயக நாட்டிற்கு செங்கோல் எதற்கு?"
மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது பிரதமர் மோடி, Musalman, Mulla, Madrasa, Mutton 2 M-ல் தொடங்கும் அனைத்து வார்த்தைகளையும் பயன்படுத்தினார். ஆனால், ஒரு வார்த்தையை மட்டும் அவர் பயன்படுத்தவில்லை. அது MANIPUR".
இவ்வாறு அவர் கூறினார்.