search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டச்சு தம்பதியர்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 1996-ம் ஆண்டில் ஜோசப் மற்றும் மரியா மார்டென்ஸ் என்ற டச்சு தம்பதியினரால் அவர் தத்தெடுக்கப்பட்டார்.
    • கடந்த ஆண்டு தன்னார்வலர்கள் மார்டென்ஸிடம் அவரது டிஎன்ஏ அவரது பிறந்த தாயான வென்னுடன் பொருந்தியதாகக் கூறினர்.

    கவுமிங் மார்டென்ஸ் என்பவரை அவரது 4 வயதில் சீனாவில் உள்ள ஒரு அனாதை இல்லத்தில் இருந்து டச்சு தம்பதியர் தத்தெடுத்தனர். மார்டென்ஸ் 12 வருட நீண்ட தேடலுக்கு பிறகு இறுதியாக தனது பெற்றோரை கண்டுபிடித்தார்.

    மார்டென்ஸ் 1994-ம் ஆண்டு தனது மூன்று வயதில் கிழக்கு சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள அவர்களது வீட்டிலிருந்து அவரது தாயின் சொந்த ஊருக்கு பெற்றோருடன் பயணிக்கும்போது தொலைந்து போனதாக தெரிவிக்கப்பட்டது.

    கருணை உள்ளம் கொண்டவர்கள் அவரை ஒரு அனாதை இல்லத்திற்கு அனுப்பினர். அங்கு 1996-ம் ஆண்டில் ஜோசப் மற்றும் மரியா மார்டென்ஸ் என்ற டச்சு தம்பதியினரால் அவர் தத்தெடுக்கப்பட்டார்.

    மார்டென்ஸ் வளர்ப்பு பெற்றோர்கள் அவரை பெற்றோரைத் தேடுவதை ஆதரித்தனர். மேலும் 2007-ல் இவர்களது குடும்பம் சீனாவுக்கு சென்று விசாரித்தது. ஆனால் அங்கு அனாதை இல்லம் இல்லை. இருந்தாலும் மார்டென்ஸ் தனது தேடலைத் தொடர்ந்தார். ஐந்தாண்டுகள் மாண்டரின் மொழியைக் கற்றுக்கொண்டு, பகுதிநேர வேலை செய்தார்.

    2012-ல் அவர் தன்னை Baby Come Home-ல் பதிவு செய்தார். இது மக்கள் தொலைந்து போன குடும்பங்களைக் கண்டறிய உதவுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தன்னார்வ நடவடிக்கையாகும். மேலும் தன்னார்வலர்களின் உதவியுடன் தனது பிறந்த பெற்றோரைத் தேடினார்.

    மார்டென்ஸ் நெதர்லாந்தில் உள்ள லைடன் பல்கலைக்கழகத்தில் பட்டமும், கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தில் மொழியியலில் முனைவர் பட்டமும் பெற்றவர். இறுதியாக கடந்த ஆண்டு தன்னார்வலர்கள் மார்டென்ஸிடம் அவரது டிஎன்ஏ அவரது பிறந்த தாயான வென்னுடன் பொருந்தியதாகக் கூறினர்.

    அவரைப் பெற்றெடுத்த பெற்றோர்கள் காவ் யாங் என்ற குழந்தையைத் தேடுவதை ஒருபோதும் நிறுத்தவில்லை. மார்டென்ஸின் வளர்ப்பு தாய் இந்த செய்தி தெரிவதற்கு முன்பு இறந்துவிட்டார். வளர்ப்புத் தந்தை தனக்கு மகிழ்ச்சியாக இருப்பதாக கூறினார்.

    மனநலக்கோளாறால் அவதிப்பட்ட அவரது தாய் வென்னை பார்த்தபோது யாங்யாங் என்ற பெயரில் அழைத்தார். இந்த கதை சமூக வலைதளங்களில் பலரையும் கவர்ந்துள்ளது.

    மார்டென்ஸ் கதை துரதிர்ஷ்டவசமாக ஆரம்பித்த போதிலும், அவரது பிறந்த குடும்பம் மற்றும் வளர்ப்பு குடும்பம் இரண்டும் அன்பால் நிறைந்ததால் இறுதியில் அவர் அதிர்ஷ்டசாலி என்று தெரிவித்துள்ளனர்.

    ×