என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஹர்சித் ரானா"
- தற்போது முக்கிய தொடர்களில் அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது புது டிரென்டாக மாறி வருகிறது.
- அறிதாகவே அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
இந்தியா- ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே பாரம்பரியமாக நடைபெற்று வரும் பார்டர் - கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர், இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற இருக்கிறது. இம்முறை பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் முதல்முறையாக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நேருக்கு நேர் மோதவுள்ளனர்.
இந்நிலையில் எதிர்வரும் பார்டர்-கவாஸ்கர் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்தது. தற்சமாயம் அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில் அறிமுக வீரர்கள், அபிமன்யூ ஈஸ்வரன், நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்ஷித் ரானா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுக வீரர் ஹர்சித் ரானா இந்திய அணியில் இடம்பிடித்திருப்பது நல்ல முடிவு என முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
தற்போது முக்கிய தொடர்களில் அறிமுக வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பது புது டிரென்டாக மாறி வருகிறது. இந்தியா வெளிநாடுகளுக்குச் சென்று விளையாடும் ஒவ்வொரு சுற்றுப்பயணத்தையும் நீங்கள் பார்த்தால், அதில் ஏதேனும் ஒரு அறிமுக வீரர் தனது முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடுவார்.
இதனைத் தற்போது எல்லா அணிகளும் செய்து வருகின்றன. அறிதாகவே அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். இருப்பினும், ஹர்சித் ரானா ஆஸ்திரேலிய தொடருக்கு ஒரு நல்ல தேர்வு என்று நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டெல்லி அணிக்காக விளையாடும் ஹர்சித் ரானா அசாம் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- ஹர்சித் ரானா பேட்டிங்கில் 59 ரன்கள் குவித்தார்.
இந்தியா நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில் முதல் 2 போட்டிகளில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இதனையடுத்து இரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி நவம்பர் 1-ந் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டிக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஹர்சித் ரானா இணைந்துள்ளார்.
ரஞ்சி டிராபியில் டெல்லி அணிக்காக விளையாடும் ஹர்சித் ரானா அசாம் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மேலும் பேட்டிங்கில் 59 ரன்கள் குவித்தார். இதன்மூலம் அவர் இந்திய அணியில் இணைந்துள்ளார்.
இதேபோல தான் வாஷிங்டன் சுந்தர் சதம் மற்றும் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் 2-வது டெஸ்ட் போட்டியில் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோருக்கு பதிலாக 3 இளம் வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது.
- ஜிம்பாப்வே அணிக்கு எதிராக முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி நடைபெற உள்ளது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. இந்த தொடரில் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவரது தலைமையின் கீழ் ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடிய இளம் வீரர்கள் இந்த சுற்றுபயணத்தில் விளையாடுகின்றனர். இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை தொடரில் பங்கேற்ற அணியிலிருந்து யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோர் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், துபே ஆகியோர் வெஸ்ட் இண்டீஸில் இருந்து நாடு திரும்ப தாமதமாவதால் அவருக்கு பதிலாக 3 இளம் வீரர்களை இந்திய அணி அறிவித்துள்ளது. அந்த வகையில் தமிழக வீரர் சாய் சுதர்சன் இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். அதை தொடர்ந்து ஜித்தேஷ் சர்மா, ஹர்சித் ரானா ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஜிம்பாப்வேவுக்கு எதிரான முதல் 2 போட்டிகளில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். முதல் டி20 போட்டி வருகிற 6-ந்தேதி ஹராரே மைதானத்தில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்