என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "50 திருமணம்"

    • ஆனந்த் அம்பானி-ராதிகா மெர்ச்சண்ட் திருமணம் ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ளது.
    • மகாராஷ்டிராவில் ஏழைக்குடும்பங்களைச் சேர்ந்த 50 ஜோடிக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது.

    மும்பை:

    ரிலையன்ஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி–நீடா அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானியின் திருமண கொண்டாட்டங்கள் கடந்த 3 மாதமாக நடந்து வருகிறது.

    இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தில் 50-க்கும் மேற்பட்ட ஏழை ஜோடிகளுக்கு அவர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர்.

    மும்பையில் உள்ள ரிலையன்ஸ் கார்ப்பரேட் பூங்காவில் நடைபெற்ற இந்த விழாவில், மணமக்கள் குடும்பத்தைச் சேர்ந்த 800க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

    இந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர். மணமக்களுக்கு மங்கள சூத்திரம், திருமண மோதிரங்கள், மூக்குத்தி உள்ளிட்ட தங்க ஆபரணங்கள் வழங்கப்பட்டன.

    மணமக்களுக்கு தலா ரூ.1.01 லட்சம் சீதனமாகவும், ஒரு ஆண்டுக்குத் தேவையான மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள், பல்வேறு வகையான 36 அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பாத்திரங்கள், கேஸ் அடுப்பு, மிக்சி மற்றும் மின்விசிறி, அத்துடன் ஒரு மெத்தை மற்றும் தலையணைகள் உள்ளிட்டவை முகேஷ் அம்பானி குடும்பத்தினரால் பரிசாக வழங்கப்பட்டது.

    ×