search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதிய நிபந்தனைகள்"

    • போதை பொருள் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
    • அரசு வழிகாட்டுதல் முறைகளை படக்குழுவினர் கடைப்பிடிக்க வேண்டும்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் போதை பொருள் தடுப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி தலைமையில் நடந்தது.

    போதைப் பொருட்கள் பயன்பாடு குறித்து விரைவான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதற்காக சினிமா துறையை அதிகாரிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    தெலுங்கானா மாநிலத்தில் புதிதாக வெளியாகும் சினிமா டிக்கெட் விலையை உயர்த்த வேண்டுமானால் அரசு வழிகாட்டுதல் முறைகளை படக்குழுவினர் கடைப்பிடிக்க வேண்டும்.

    குறிப்பாக டிக்கெட் விலை உயர்வை உயர்த்த வேண்டும் என கோரிக்கை வைக்கும் முன்னணி நடிகர்கள் 2 குறும் படங்களில் நடிக்க வேண்டும். அதில் ஒன்று சைபர் குற்றம் மற்றொன்று போதைப் பொருள் எதிர்ப்பு குறித்து இருக்க வேண்டும்.

    இந்த 2 குறும்படங்களும் படம் திரையிடப்படுவதற்கு முன்பாக தியேட்டர்களில் ஒளிபரப்ப வேண்டும். இந்த புதிய நிபந்தனைகளை பூர்த்தி செய்தால் மட்டுமே டிக்கெட் விலை உயர்வுக்கு அரசு ஒப்புதல் அளிக்கும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சினிமா டிக்கெட் விலை உயர்த்த நடிகர்கள் விழிப்புணர்வு படங்களில் நடிக்க வேண்டும் என முதல் மந்திரி உத்தரவிட்டுள்ளது சமூக வலைதளங்களில் வரவேற்று பாராட்டி வருகின்றனர்.

    ×