search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எப்.ஐ.ஆர்"

    • 80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர்.
    • சம்பவம் நடந்த இடத்துக்கு போலீசார் சென்றபோது போலே பாபா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

    உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 122 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பெண்கள் ஆவர். இந்த நிகழ்ச்சியில் சுமார் 2.5 லட்சம் பக்தர்கள் இந்த சத்சங்க நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அதில் பலர் போலே பாபாவின் நிகழ்ச்சிகளுக்கு தொடர்ந்து வருபவர்கள் ஆவர்.

    80,000 மக்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்ட நிலையில் 2.5 லட்சம் பேரை சட்டவிரோதமாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் அனுமதித்துள்ளனர். சிறிய இடத்தில் இவ்வளவு அதிகமாக மக்களை நெருக்கி அடைத்துள்ளனர். மேலும் நிகழ்ச்சி முடிந்ததும் ஒரு சாரார் வெளியேறும் வாயிலை நோக்கி முன்னேறிய நிலையில் மற்றொரு சாரார் போலே பாபாவின் காலடி மண்ணை எடுப்பதற்காக எதிர்புறமாக முன்னேறியதால் இந்த கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது என்று தெரியவந்துள்ளது.

     

    மேலும் விபத்து ஏற்பட்டதற்கு பிறகு உயிருக்கு போராடி வரும் மக்க்ளுக்கு உதவாமல் தாங்கள் மாட்டிக்கொள்ளக் கூடாது என்று தடயங்களை மறைக்கும் முயற்சியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் ஈடுபட்டிருக்கின்றனர் என்று தெரியவந்துள்ளது. போலே பாபா காரில் ஏறி செல்ல முயன்ற நிலையில் அவரின் காருக்கு பின்னால் ஓடியவர்களை தடிகளால் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தாக்கியுள்ளனர். சம்பவம் நடந்த இடத்துக்கு போலீசார் சென்றபோது போலே பாபா அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இந்த விவகாரம் குறித்து விசாரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

    இந்நிலையில்  இந்த விவகாரம் தொடர்பாக போலே பாபாவின் நெருங்கிய கூட்டாளிகளான நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் மீது உ.பி போலீசாரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.  ஆனால் தற்போது பதியப்பட்டுள்ள எப்.ஐ.ஆரில் போலே பாபாவின் பெயர் சேர்க்கப்படாதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் நஷ்டஈடாக மத்திய அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

     

    ×