என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "ஆம்ஸ்ட்ராங் படுகொலை"
- கொலை வழக்கில் வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரன் உள்பட மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
- 3-வது குற்றவாளியாக நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் பெயர் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி பெரம்பூரில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கடந்த ஆண்டு சென்னை பட்டினப்பாக்கத்தில் கொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷ் கொலைக்கு பழிக்குப்பழி வாங்கும் வகையிலேயே ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டிருப்பதாக முதலில் தகவல்கள் வெளியானது.
இதுதொடர்பாக ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்பட 10 பேர் உடனடியாக கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு பின்னணியில் மிகப்பெரிய சதி திட்டம் தீட்டப்பட்டிருப்பது வெளிச்சத்துக்கு வந்தது.
இதையடுத்து இந்த கொலை வழக்கில் வடசென்னையை சேர்ந்த பிரபல ரவுடி நாகேந்திரன் உள்பட மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 25 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த பெண் தாதா அஞ்சலை, நாகேந்திரனின் மகனான இளைஞர் காங்கிரஸ் பிரமுகர் அஸ்வத்தாமன் ஆகியோர் கைதானவர்களில் முக்கியமானவர்கள் ஆவா்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தூத்துக்குடியை சேர்ந்த ரவுடி சம்பவ செந்தில், வக்கீல் மொட்டை கிருஷ்ணன் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர். இருவரையும் தேடிக் கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். வெளிநாடுகளில் பதுங்கியுள்ள இவர்களை கைது செய்ய தேவையான நடவடிக்கைகளை தனிப்படை போலீசார் மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் எழும்பூர் கோர்ட்டில் 5ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர். அதில் போலீசில் சிக்காமல் தலைமறைவாக உள்ள சம்பவ செந்தில், மொட்டை கிருஷ்ணன் ஆகியோரது பெயர்கள் உள்பட 30 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
முதல் குற்றவாளியாக நாகேந்திரன் சேர்க்கப்பட்டுள்ள நிலையில், 2-வது குற்றவாளியாக சம்பவ செந்தில், 3-வது குற்றவாளியாக நாகேந்திரனின் மகன் அஸ்வத்தாமன் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இது தவிர ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான 28 பேரின் பங்கு என்ன? என்பது பற்றியும் குற்றப்பத்திரிகையில் விரிவான தகவல்கள் இடம்பெற்று உள்ளன.
ஆம்ஸ்ட்ராங்குடன் இளைஞர் காங்கிரஸ் பிரமுகரான அஸ்வத்தாமனுக்கு ஏற்பட்டிருந்த பகை, ஆற்காடு சுரேஷ் கொலையான அவரது தம்பி பொன்னை பாலுவுடன் ஏற்பட்டிருந்த முன் விரோதம், உள்ளிட்ட பல்வேறு தகவல்களும் குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன.
ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பொன்னை பாலு மற்றும் அவனது கூட்டாளிகள் ஓராண்டாக திட்டம் போட்டு செயல்பட்டிருந்தனர். அது தொடர்பான தகவல்கள் முழுமையாக இடம் பெற்றுள்ளன.
இவர்களோடு வடசென்னையை சேர்ந்த பெண் தாதா அஞ்சலை மற்றும் ரவுடிக்கும்பலை சேர்ந்தவர்கள் செய்த பண உதவி மற்றும் ரவுடிகள் வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்தது போன்ற தகவல்களும் உள்ளன.
ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டு 3 மாதங்கள் ஆகும் நிலையில் திட்டமிட்டபடி போலீசார் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்திருக்கிறார்கள்.
இதை தொடர்ந்து வழக்கு விசாரணை எழும்பூர் கோர்ட்டில் தொடர்ச்சியாக நடத்தப்பட உள்ளது.
இந்த விசாரணையை விரைந்து முடித்து குற்றவாளிகளுக்கு உரிய தண்டனையை வாங்கி கொடுக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதனால் ஆம்ஸ்ட்ராங் வழக்கு மீண்டும் வேகமெடுத்துள்ளது.
- ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் கடிதம்.
- புதிய பாரதம், புதிய தமிழகம், வி.சி.க., பி.எஸ்.பி., கட்சியில் இருந்த பிறகு தான் அவர் காங்கிரசில் இணைந்தார்.
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் மிக கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தையை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக இதுவரை 20-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.
மேலும், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்தில் பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு இருப்பதாக பகீர் தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகைக்கு தொடர்புள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் கடிதம் எழுதி இருக்கிறார்.
இதுதொடர்பான அந்த கடிதத்தில், "பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்டிராங் கொலை வழக்கில் தொடர்பு உள்ளதால் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து செல்வப்பெருந்தகையை நீக்க வேண்டும். புதிய பாரதம், புதிய தமிழகம், வி.சி.க., பி.எஸ்.பி., கட்சியில் இருந்த பிறகு தான் அவர் காங்கிரசில் இணைந்தார்."
"ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஏன் கைது செய்யவில்லை என்று பலரும் கேள்வி எழுப்புகின்றனர். காங்கிரசில் உள்ளதால் தான் கைதாகவில்லை என்றும் கூறுகின்றனர். அவரை கட்சியில் இருந்து நீக்கினால் தான், மக்கள் மத்தியில் காங்கிரஸ் நிலைத்து இருக்கும்" என்று அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
- கடந்த 2 மாத காலத்தில் 150 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
- ‘ஏ’ பிளஸ் மற்றும் ‘ஏ’ வகைகளைச் சேர்ந்த 31 குற்றவாளிகளும் 86 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் அடங்குவர்.
சென்னை:
சென்னை போலீஸ் கமிஷனராக அருண் பொறுப்பேற்ற பிறகு பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, கடந்த இரண்டு மாத காலத்தில் 150 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 117 பேர் ரவுடிகள் ஆவர். 'ஏ' பிளஸ் மற்றும் 'ஏ' வகைகளைச் சேர்ந்த 31 குற்றவாளிகளும் 86 சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளும் அடங்குவர். மேலும் 32 கொலை, கொலை முயற்சி குற்றவாளிகள் மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் சம்பந்தப்பட்ட 33 குற்றவாளிகளும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவத்துக்கு பிறகு போலீசார் இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
- சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்கறிஞரை போலீசார் தேடி வருகின்றனர்.
- இயக்குநர் நெல்சனிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பிரபல ரவுடிகளான சம்போ செந்தில், சீசிங் ராஜா ஆகியோரை தனிப்படை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர். இதில் சம்போ செந்திலுடன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக கிருஷ்ணகுமார் என்கிற மொட்டை கிருஷ்ணன் என்ற வழக்கறிஞரையும் போலீசார் தேடி வருகின்றனர். அவர் மலேசியா தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது.
அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவருடன் தொடர்பில் இருந்த பலரையும் போலீசார் அடுத்தடுத்து விசாரித்து வருகின்றனர். இதுஒருபுறம் இருக்க சர்வதேச போலீஸ் உதவியுடன் சம்போ செந்திலுக்கு சென்னை போலீஸ் ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கி உள்ளனர். ஏற்கனவே சம்போ செந்திலுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது ரெட் கார்னர் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மொட்டை கிருஷ்ணன் தொடர்பாக இயக்குநர் நெல்சனின் மனைவி வழக்கறிஞர் மோனிஷாவிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. மொட்டை கிருஷ்ணனும் இயக்குநர் நெல்சனின் மனைவியும் கல்லூரி காலத்தில் இருந்து நண்பர்கள் என்பதால் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
மொட்டை கிருஷ்ணனுடன் இயக்குநர் நெல்சன் மனைவி தொடர்ந்து செல்போனில் பேசிவந்த நிலையில் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்டு வரும் ரவுடி மொட்டை கிருஷ்ணன் குறித்து திரைப்பட இயக்குநர் நெல்சனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
சம்மன் கொடுக்கப்பட்ட நிலையில் அடையாறில் உள்ள நெல்சன் வீட்டிற்கு சென்ற தனிப்படை காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மொட்டை கிருஷ்ணன் குறித்து இயக்குநர் நெல்சனிடம் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது.
- ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்பட 24 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளனர்.
- வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்தவர்களில் ராஜேசும் ஒருவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் போலீசார் தொடர்ச்சியாக கைது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். ஆற்காடு சுரேசின் தம்பி பொன்னை பாலு உள்பட 24 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில் இன்று 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜேஷ், கோபி, குமரன் ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் தலைமறைவாக உள்ள சம்பவ செந்திலின் கூட்டாளிகள் என்று கூறப்படுகிறது. இவர்களில் வெடிகுண்டுகளை வாங்கி கொடுத்தவர்களில் ராஜேசும் ஒருவர் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதானவர்களின் எண்ணிக்கை 27-ஆக உயர்ந்துள்ளது.
- ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் அவருடைய 2 வயது மகளும் கலந்துக் கொண்டனர்.
- அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நேற்று ஆம்ஸ்ட்ராங் கொலையில் உண்மை குற்றவாளிகளை கண்டறியகோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், பகுஜன் சமாஜ் கட்சியினரும், ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தினரும் கலந்து கொண்டனர். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடியும் அவருடைய 2 வயது மகளும் கலந்துக் கொண்டனர். மேலும், இயக்குனர் பா.ரஞ்சித், கட்சி ஆதரவாளர்கள் பலரும் போராட்டத்தில் கலந்துக் கொண்டனர்.
போராட்டத்தின்போது, நீதி வேண்டும் நீதி வேண்டும் ஆம்ஸ்ட்ராங்கின் கொலைக்கு நீதி வேண்டும் னெ பதாகைகளை ஏந்து கோஷமிட்டனர்.
இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி மற்றும் இயக்குனர் பா.ரஞ்சித் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 1500 பேர் மீது நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் அஸ்வத்தாமன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
- இளைஞர் காங்கிரசின் நற்பெயரை பாதுகாக்கும் வகையில் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும்.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் முதன்மை பொதுச்செயலாளர் அஸ்வத்தாமன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் தலைவர் லெனின் பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு இளைஞர் காங்கிரசின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து அஸ்வத்தாமன் நீக்கி வைக்கப்படுகிறது. இந்த அறிவிப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது.
கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகளுக்கு முரணாக அவர் நடந்து கொண்டதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு இளைஞர் காங்கிரஸ் எப்போதும் உயர்ந்த ஒருமைப்பாடு மற்றும் ஒழுக்கத்தை பராமரித்து வருகிறது. இளைஞர் காங்கிரசின் நற்பெயரை பாதுகாக்கும் வகையில் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி ஹரிஹரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
- ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்க்கொடி சேகர் அதிமுக-விலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை:
ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதான ஹரிஹரனை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்கம் செய்து தலைவர் ஜி.கே.வாசன் அறிவித்துள்ளார்.
கட்சிக்கு விரோதமாக செயல்பட்டதால் தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகி ஹரிஹரன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
ஹரிஹரன் ஏற்கனவே தமாகா மாநில மாணவரணி துணைத்தலைவர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டவர். தற்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான நிலையில் கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளார்.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்க்கொடி சேகர் அதிமுக-விலிருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- மலர்க்கொடி சேகரை அதிமுக-விலிருந்து நீக்கம் செய்து பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
- அதிமுக பிரமுகர் மலர்க்கொடி பிரபல தாதாவின் மனைவி ஆனார்.
சென்னை:
பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் திருவல்லிக்கேணி மேற்கு பகுதி அ.தி.மு.க. இணை செயலாளர் மலர் கொடி கைது செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து கட்சியில் இருந்து அவர் நீக்கப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டம், திருவல்லிக்கேணி மேற்கு பகுதி கழகத்தின் கொள்கை, குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் சட்ட திட்டங்களுக்கு மாறுபட்டு, கழகத்தின் ஒழுங்குமுறை குலையும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், தென் சென்னை வடக்கு (கிழக்கு) மாவட்டத்தைச் சேர்ந்த மலர்கொடி சேகர் ( திருவல்லிக்கேணி மேற்கு பகுதிக் கழக இணைச் செயலாளர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் அவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது.
இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
- ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
- ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
சென்னை:
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந்தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றார்கள்.
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.
இந்நிலையில் சென்னை அயனாவரத்தில் உள்ள பகுஜன் சமாஜ் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டிற்கு மத்திய இணை அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சென்றார். ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
மேலும் அங்கிருந்த ஆம்ஸ்ட்ராங் படத்துக்கு மலர் தூவி ராம்தாஸ் அத்வாலே மரியாதை செலுத்தினார்.
- பெரம்பூரில் அவரது வீட்டின் முன்பு படுகொலை செய்யப்பட்டார்.
- 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை:
தமிழக பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5-ந்தேதி பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் முன்பு படுகொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் முக்கிய குற்றவாளியான திருவேங்கடத்தை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றார்கள்.
ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். தமிழகத்திலும் அரசியல் கட்சிகள் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.
இந்த நிலையில் தேசிய பட்டியல் ஆணையமும் இந்த வழக்கை கையில் எடுத்துள்ளது. நேரில் விசாரிப்பதற்காக தேசிய பட்டியல் ஆணையத்தின் மூத்த உறுப்பினர் ராமசந்தர் டெல்லியில் இருந்து சென்னை வந்தார்.
பெரம்பூர் வேணு கோபால்சாமி தெருவுக்கு சென்று கொலை நடந்த இடத்தை பார்வையிட்டார். பின்னர் சம்பவம் நடந்தது பற்றியும், காரணங்கள் பற்றியும் கேட்டறிந்தார்.
அதைத்தொடர்ந்து பிற்பகலில் கலெக்டர், கூடுதல் டி.ஜி.பி. போலீஸ் கமிஷனர், ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகளுடன் பேசுகிறார்.
அப்போது தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பற்றி கேட்டு அறிகிறார். வழக்கின் புலன் விசாரணை, கொலைக்கான சதி பின்னணி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பற்றி ஆய்வு செய்கிறார்.
இந்த ஆய்வை முடித்துக் கொண்டு இன்று இரவே டெல்லி புறப்பட்டு செல்கிறார்.
- திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை.
- ம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான உண்மைகளை மூடி மறைக்கவும் சதி நடந்திருக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியில் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சரண் அடைந்தவர்களில் ஒருவரான திருவேங்கடம் என்பவர் இன்று அதிகாலை மாதவரம் அருகில் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது பல்வேறு ஐயங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சரணடைந்த எதிரிகள் காவல்துறை விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே, அவர்களில் சிலர் காவல் துறையினரால் சுட்டுக் கொல்லப்படுவார்கள் என்ற ஐயம் எழுந்தது. திருவேங்கடம் சுட்டு கொல்லப்பட்டிருப்பதன் மூலம் அந்த ஐயம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படும் காரணங்கள் நம்பும்படியாக இல்லை. மிக முக்கிய கொலை வழக்கில் சரணடைந்த எதிரியை அதிகாலை நேரத்தில் ஆயுதங்களை கைப்பற்றுவதற்காக அழைத்துச் செல்ல எந்த தேவையும் இல்லை.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய திருவேங்கடத்தை சுட்டுக்கொலை செய்திருப்பதன் மூலம் இந்த வழக்கில் தொடர்புடைய சிலரை காப்பாற்றவும், ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான உண்மைகளை மூடி மறைக்கவும் சதி நடந்திருக்கிறதோ? என்ற ஐயம் எழுகிறது.
இன்னொரு புறம் சட்டம் ஒழுங்கு சீர்குலைய அனுமதித்துவிட்டு ஓரிரு ரவுடிகளை காவல்துறை மூலம் சுட்டுக்கொலை செய்வதன் வாயிலாக, சட்டம் - ஒழுங்கு சீரடைந்து விட்டதாக காட்ட முயல்வது மிக மோசமான அணுகுமுறையாகும். இந்த அணுகுமுறை கண்டிக்கத்தக்கது என்று கூறியுள்ளார்.
திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதன் மூலம் ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பான மர்மம் வலுவடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் அரசின் செயல்பாடுகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இல்லை. இது தொடர்பாக எழுந்துள்ள ஐயங்களை அரசுதான் போக்க வேண்டும்.
அதற்காக திருவேங்கடம் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தின் கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும். ஏற்கனவே நான் வலியுறுத்தியவாறு ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற வேண்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்