என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உத்தர பிரதேசம் போலீஸ்"

    • தேவபிரகாஷ் பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக போலீசார் அறிவித்தனர்.
    • தலைநகர் டெல்லியில் இருந்த தேவபிரகாஷை போலீசார் நேற்று நள்ளிரவு கைதுசெய்தனர்.

    லக்னோ:

    உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் அருகே புல்ராய் கிராமத்தில் கடந்த 2-ம் தேதி சாமியார் போலே பாபாவின் ஆன்மிக சொற்பொழிவு நடந்தது. அந்த நிகழ்ச்சி கூட்ட நெரிசலில் சிக்கி 121 பேர் பலியானார்கள்.

    இதுதொடர்பாக சிக்கந்திரா ராவ் போலீசார் பாரதீய நியாய சன்ஹிதா சட்டத்தின் 105 மரணம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த 2 பெண் உள்பட 6 பேர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர்.

    ஆன்மிக சொற்பொழிவுக்கு தலைமை ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட தேவபிரகாஷ் மதுகர் தலைமறைவானார். அவரை பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருவதாக மாநில அரசு உயர் அதிகாரி கூறினார்.

    இதற்கிடையே, தேவபிரகாஷ் பற்றி துப்பு கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்குவதாக உ.பி போலீசார் அறிவித்தனர்.

    இந்நிலையில், தலைமறைவான தேவபிரகாஷ் டெல்லியின் உத்தம்நகரின் நஜப்கார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக உ.பி. போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று நள்ளிரவு அங்கு சென்ற போலீசார் தேவபிரகாஷை கைதுசெய்தனர். தொடர்ந்து தேவபிரகாசை உ.பி. போலீசார் ஹத்ராசுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறனர்.

    ×