என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "தலையாமறைவு"
- குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது
- அவர்களை யாரும் எதுவும் செய்யப்போவதில்லை. நாங்கள் தான் கஷ்டத்தை அனுபவிக்க போகிறோம்' என்று பெண்ணின் கணவர் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகம் உள்ள நாடுகளில் ஒன்றான இந்தியாவில் வெளிப்படையாகவே இந்த வித்தியாசத்தை அன்றாடம் நம்மால பார்க்கவும் உணரவும் முடிகிறது. அந்த வகையில் சாலைகளில் பணக்காரர்கள் மற்றும் பெரும் புள்ளிகளின் சொகுசு கார்கள் இடித்து சாமானிய மக்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரிக்க தொடங்கியுள்ளன.
தற்போது மும்பையில் முக்கிய புள்ளி ஒருவரின் மகன் குடிபோதையில் ஓட்டி வந்த பி.எம்.டபில்யூ சொகுசு கார் இடித்து பெண் ஒருவர் 100 மீட்டருக்கு தரதரவென இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முதற்கட்ட விசாரணையில் 24 வயதுடைய அந்த இளைஞர் மிஹிர் ஷாம் என்பதும் மகாராஷ்டிர முதலவர் ஏக்நாத் ஷிண்டேவின் பாஜக கூட்டணி சிவசேனா குழுவில் உள்ள ராஜேஷ் ஷா என்ற தலைவரின் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.
தற்போது மிஹிர் தப்பித்த நிலையில் அவரின் தந்தை ராஜேஷ் ஷாவைவும் குடும்ப டிரைவரையும் போலீசார் கஸ்டடியில் எடுத்துள்ளனர். இந்த சம்பவத்தில் புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் மிஹிர் ஷாமை முக்கிய குற்றவாளியாக குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இன்று அதிகாலை மும்பையின் உரோலி பகுதியில் உள்ள கோலிவாடா பகுதியில் தனது தம்பதி சென்ற இருசக்கரவாகனத்தின்மீது மிஹிர் ஷாம் ஓட்டிவந்த பிஎம்டபில்யூ சொகுசு கார் பின்னால் இருந்து மோதியதில் தூக்கிவீசப்பட்டு கார் பானட்டில் சிக்கி பெண் 100 மீட்டருக்கு இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்தார்.
பெண்ணின் கணவர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது விபத்து குறித்து பேசியுள்ளார். அவர் பேசுகையில், 'கார் மோதியதில் நான் ஸ்கூட்டரில் இருந்து இடது புறமாக விழுந்துவிட்டேன். எனது மனைவி காரின் முன்புறம் சிக்கி இழுத்துச்செல்லப்பட்டு உயிரிழந்துள்ளார். எங்களுக்கு 2 குழந்தைகள் உள்ளது. நான் இப்போது என்ன செய்வேன். இவர்களெல்லாம் [விபத்து ஏற்படுத்திய இளைஞர் மற்றும் அவரது தந்தை] பெரிய ஆட்கள். அவர்களை யாரும் எதுவும் செய்யப்போவதில்லை. நாங்கள் தான் கஷ்டத்தை அனுபவிக்க போகிறோம்' என்று தெரிவித்துள்ளார்.
இந்த விபத்து துரதிஷ்டவசமானது, சட்டம் தன் கடமையைச் செய்யும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார். இதற்கிடையில் தப்பியோடிய மிஹிரை தேடும் பணியில் போலீஸ் இறங்கியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்