search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லைஃப்ஸ்டைல்"

    • தற்போதைய காலக்கட்டத்தில் பலர் உடல் பருமனுக்கு ஆளாகிறார்கள்.
    • ஒரு பிடித்த உணவை சாப்பிட எண்ணம் வந்தாலும், இது போன்ற நபர்கள் கூறிய வீடியோக்கள் கண் முன்னே வந்துப் போவதால்

    தற்போதைய காலக்கட்டத்தில் பலர் உடல் பருமனுக்கு ஆளாகிறார்கள். இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. வாழ்க்கை முறை, தரம் கெட்ட உணவுகள், வேலை பளு, மனச் சோர்வு என்று ஏகப்பட்ட காரணங்களை கூறிக் கொண்டே இருக்கலாம்.

    இதனால் பலர் உடற்பயிற்சி, யோகா என அவரவர் விரும்பிய பயிற்சிகளை செய்கிறார்கள். அவர்களால் முடிந்த உடற்பயிற்சியில் ஈடுப்படுகின்றனர். இதனால் இன்ஸ்டாகிராமில் ஃபிட்னஸ் சார்ந்த கிரியேட்டர்ஸ் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றனர். ஒவ்வொருவரும் தனக்கு தோன்றியதை கருத்தாக கூறி வருகின்றனர். ஒருவர் கூறும் தகவல்கள் குறித்து அறிவியல் ஆராய்ச்சி எதுவும் செய்யாமல் மேம்போக்காக வீடியோவில் கூறி விடுகின்றனர்.

    சமூக வலைதளங்களில் இப்படியொரு வழக்கம் இருப்பதைத் தொர்ந்து இன்ஸ்டாகிராமில் யாரை நம்புவது, எந்த தகவல் உண்மை என்பதை குழம்பி தவித்து வருகின்றனர். ஒரு பிடித்த உணவை சாப்பிட எண்ணம் வந்தாலும், இது போன்ற நபர்கள் கூறிய வீடியோக்கள் கண் முன்னே வந்துப் போவதால் அதை சப்பிட்டப் பின் இத்தனை கலோரிகள் கூடிவிடும் என்பதால் அவர்களுக்கு பிடித்த உணவுகளை கூட சாப்பிட முடியாமல் குற்ற உணர்ச்சியில் தவிக்கின்றனர்.

    அப்படி சமீப காலமாக ஃபிட்னஸ் செய்யும் நபர்களில் சிலர், நாம் சாப்பிடும் உணவின் கலோரியை உடலில் எரிக்க எத்தனை மணி நேரம் உடற்பயிற்சி செய்தால் அந்த உணவின் கலோரியை எரிக்க முடியும் என்று கூறிவருகிறார்கள். இந்த தகவல்களை முற்றிலும் மறுக்கும் கருத்துக்களை முன்னணி உடற்பயிற்சி நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

    இது குறித்த வீடியோவில் ஜார்டன் யோ ஃபிட்னஸ் கூறும் போது, உதாரணமாக நாம் சாப்பிடும் 1 சமோசாவில் 550 கலோரிகள் உள்ளன. அதன் கலோரியை எரிக்க வேண்டுமென்றால் நாம் 30 நிமிடம் ஓட வேண்டும் அல்லது 30 நிமிடம் நீச்சல் பயிற்சி வேண்டும் அல்லது 1 மணி நேரம் தீவிர உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    ஆனால் மக்கள் தினசரி அவர்கள் பார்க்கும் வேலைக்கு ஏற்ப கலோரி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொண்டு வருகின்றனர். சராசரி மனிதன் தினசரி 1500 முதல் 2000 கலோரிகளை உணவாக உட்கொள்கிறார்கள். ஆனால் இவை அனைத்தும் நம்மால் உடற்பயிற்சியின் மூலம் எரிக்கவே முடியாத காரியம்.

    நாம் சாப்பிடும் பெரும்பாலான கலோரிக்கள் பிஎம்ஆர் என சொல்லப்படும் பேசல் மெடபாலிக் ரேட்டில் (Basal Metabolic Rate) தான் 60 சதிவீததுக்கும் மேற்பட்ட கலோரிக்கள் எரிக்கப்படுகிறது. 20 சதவீத கலோரி NEAT என கூறப்படும் நாட் எக்சர்சைஸ் ஆக்டிவிட்டி லெவல் (Not Exercise Activity Level) உதவியுடன் நாம் கலோரிக்களை எரிக்கிறோம்.

    அந்த வகையில் ஒருவர் தனது உடல் எடையை குறைக்க அதிகளவு உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடுகளை பின்பற்றாமல், பிஎம்ஆர் அடிப்படையில் அவரவர் உடலுக்கு தேவையானதை விட குறைந்த அளவு கலோரி கொண்ட உணவுளை உட்கொண்டாலே நாளடைவில் உடல் எடை தானாக குறையும்.

    இதனால் மக்களுக்கு கூற வருவது என்னவென்றால், மனதுக்கு பிடித்திருப்பதை சாப்பிடுங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு உடற்பயிற்சி செய்யுங்கள். உடல் எடை கூடி இருந்தாலும், உடல் எடை குறைந்து இருந்தாலும் கவலைப்படாமல் மனதில் தைரியத்துடன் எல்லாம் விஷயத்தையும் அணுகுங்கள், என்று தெரிவித்தார்.

    இந்த வீடியோவை பார்த்த பலரும் இவருக்கு நன்றியும், இது தொடர்பான சந்தேகங்களையும் கமென்ட் செய்து வருகின்றனர்.

    ×