என் மலர்
நீங்கள் தேடியது "மனு விசாரணை"
- கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்.
- இந்த வழக்கு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவு.
வெளிநாடுகளில் இருந்து போதைப் பொருள் கடத்தியதாக, ஜாபர் சாதிக் கடந்த மார்ச் 9ம் தேதி மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜாபர் சாதிக் மீது, சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை, வழக்குப் பதிவு செய்தது.
இதைதொடர்ந்து, தன் மீது தவறாகவும், உள்நோக்கத்துடனும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஜாபர் சாதிக் தான் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வழக்கில் கைது செய்த தன்னை 24 மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாததால், தன்னை கைது செய்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரி ஜாபர் சாதிக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த வழக்கு மீதான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி முன் வந்தது.
அப்போது, சட்டவிரோத பணப்பரிமாற்ற சட்டத்தின் கீழ் கைது செய்த உத்தரவை ரத்து செய்ய கோரிய ஜாபர் சாதிக்கின் மனு விசாரைணக்கு உகந்தது அல்ல என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை வாதாடியுள்ளது.
இந்நிலையில், மனு விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்த வாதங்களுக்காக விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.