என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்மினி செயலி"

    • "யு1 வைப்ஸ்" (#U1vibes) என்கிற ஹேஷ்டேக் சேர்த்து மின்மினியில் பதிவிட வேண்டும்.
    • யுவன் வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையம் எங்கும் வைரலாக பரவி வருகிறது.

    உலகின் முதல் தமிழ் ஹைப்பர் லோக்கல் செயலியான மின்மினி பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் மியூசிக் லேபிள் நிறுவனமான U1 ரெகார்டஸ்-வுடன் இணைந்து ஹேஷ்டேக் "யு1 வைப்ஸ்" (#U1vibes)என்கிற சிறப்பான போட்டியை அறிவித்துள்ளது.

    யுவன் சங்கர் ராஜா வெளியிட்டுள்ள தனிப்பாடலான "ஷி இஸ் எ கில்லர்" (She's a Killer) என்ற பாடலை கொண்டாடுவதற்காக மின்மினி செயலி இந்த சிறப்பான போட்டியை அறிவித்துள்ளது.

    ஜூலை 5 ம் தேதி தொடங்கியுள்ள இந்த போட்டி, ஆகஸ்ட் 4 வரை நடைபெற உள்ளது. "ஷி இஸ் எ கில்லர்" (She's a Killer) என்கிற பாடலுக்கு உங்கள் படைப்பாற்றலை வெளிப்படுத்தும் விதமாக வீடியோக்களை எடுத்து அதை "யு1 வைப்ஸ்" (#U1vibes) என்கிற ஹேஷ்டேக் சேர்த்து மின்மினியில் பதிவிட வேண்டும்.

    இந்த போட்டி குறித்து மின்மினி செயலியின் செயல் துணைத் தலைவர் ஸ்ரீராம் கூறுகையில், "#U1vibes என்கிற இந்த போட்டிக்காக இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவுடன் இணைவது எங்களுக்கு பெரு மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் அளிக்கிறது.

    மேலும், இந்த போட்டி மூலம் தாங்கள் ரசிக்கும் இசைக்கு ஏற்ப தங்களின் படைப்பாற்றலை வெளிப்படுத்தவும், தனித்துவமான ஒரு அனுபவத்தை பெறவும் எங்களது பயனர்களுக்கு வாய்ப்பளிக்கிறோம்.

    இந்த போட்டி குறித்து இசையமைப்பாளர் யுவன் வெளியிட்டுள்ள காணொளி தற்போது இணையம் எங்கும் வைரலாக பரவி வருகிறது.

    அந்தக் காணொளியில் "மின்மினி செயலியின் பயனர்களுக்கு ஆச்சர்யமூட்டும் ஏராளமான பரிசுகள் காத்துக்கொண்டிருக்கிறது எனவே ஷி இஸ் எ கில்லர்"(She's a Killer) பாடலை பயன்படுத்தி வீடியோக்களை உருவாக்கி அதை மின்மினி செயலியில் பதிவிடுங்கள்" என யுவன் சங்கர் ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • வருகிற 21-ந்தேதி உலக சேலை தினம்.
    • வெற்றியாளர்களுக்கு ஆச்சரியமூட்டும் பரிசுகள் வழங்கப்படும்.

    சென்னை:

    மின்மினி செயலி மற்றும் போத்தீஸ் இணைந்து உலக சேலை தின சிறப்பு போட்டியை நடத்துகிறது.

    நம் பண்பாட்டின் அடையாளமாகவும், பெண்களின் வாழ்வின் அங்கமாகவும் விளங்குவது சேலை. ஆடை வகை என்பதையும் தாண்டி நேர்த்தியான உழைப்புக்கும், கலை நயத்திற்கும் எடுத்துக்காட்டாக இருப்பது சேலை.

    அப்படிப்பட்ட பெருமை வாய்ந்த உடையாகிய சேலையை கவுரவிக்கும் விதமாக வருகிற 21-ந்தேதி 'உலக சேலை தினம்' கொண்டாடப்பட இருக்கிறது.


    இந்த சேலை தினத்தை முன்னிட்டு ஆடை ரகங்களின் தன்னிகரற்ற அடையாளமான போத்தீஸ் மற்றும் மின்மினி செயலி இணைந்து பெண்கள் மட்டும் கலந்துகொள்ளும் போத்தீஸ் சேலை தினச் சிறப்பு 'ஹேஷ்டேக்' போட்டியை அறிவித்து உள்ளார்கள்.

    இந்த போட்டியில் 18 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் அனைவரும் கலந்துகொள்ளலாம். போட்டியில் பங்கேற்க விருப்பும் பெண்கள் சேலை அணிந்துகொண்டு அதை புகைப்படமாகவோ அல்லது சுவாரசியமான ரீல்ஸ்களாவோ எடுத்து அதை அவர்களது சொந்த இன்ஸ்டாகிராம் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட வேண்டும்.

    அப்படி பதிவிடும்போது தவறாமல் ஹேஷ்டேக் போத்தீஸ் சேலை தினம் அதாவது #PothysSareeDay என்பதை இணைத்து பதிவிட வேண்டும். மேலும் அவர்களது புகைப்படம் மற்றும் ரீல்ஸ்களை பதிவிடும் போது மறக்காமல் போத்தீஸ் மற்றும் மின்மினி செயலியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை 'டேக்' செய்ய வேண்டும்.

    போட்டியில் கலந்துகொள்ள நினைக்கும் பெண்கள் வருகிற 17-ந்தேதிக்குள் தங்களது பதிவுகளை மேலே குறிப்பிட்ட விதத்தில் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட வேண்டும்.


    நம் பண்பாட்டின் மேன்மையை வெளிப்படுத்தும் சேலையைக் கொண்டாடும் விதமாக போத்தீஸ் மற்றும் மின்மினி செயலி இணைந்து நடத்தும் இந்தப் போட்டியில் கலந்துகொண்டு அட்டகாசமான போட்டோ மற்றும் சுவாரசியமான ரீல்ஸ்களை பதிவிடும் பெண் போட்டியாளர்களின் சிறப்பான பதிவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வெற்றியாளர்களுக்கு ஆச்சரியமூட்டும் பரிசுகள் வழங்கப்படும்.

    வெற்றியாளர்களின் தேர்வு நடுவர் குழு மற்றும் நிர்வாகத்தின் நிபந்தனைகள் மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்டதாகும். மேலும் விவரங்களுக்கு 85915 85915 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    • மின்மினி செயலியும், போத்தீஸ் நிறுவனமும் இணைந்து சேலைகள் தின கொண்டாட்டத்தை நடத்தியது.
    • 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு...' என்று எல்லோரது கண்களும் அவர்களை நோக்கித்தான் திரும்பும்.

    சென்னை:

    மின்மினி செயலியும், போத்தீஸ் நிறுவனமும் இணைந்து சேலைகள் தின கொண்டாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தன.

    மேகம் சூடி இருள் கவிழ்ந்த நேரத்தில் ஒன்றிரண்டு மின்மினி பூச்சிகள் வட்டமிட்டு கண் சிமிட்டினாலே பார்க்க பரவசமாக இருக்கும்.

    நூற்றுக்கணக்கான மின் மினி பூச்சிகள் ஒரே நேரத்தில் பரவசப்படுத்தினால் எப்படி இருக்கும்?

    அப்படி ஒரு ரம்மியமான சூழலில் நூற்றுக்கணக்கான இளம் பெண்கள் சேலை கட்டி மின்மினி பூச்சிகள் போல் ஒரே இடத்தில் வட்டமிட்டால் மனதுக்கு எப்படி இருக்கும்? பார்த்தவர்கள் இதயமெல்லாம் பட்டாம் பூச்சிகள், மின்மினி பூச்சிகள் தான் நினைவுக்கு வந்திருக்கும்.

    மீனம்பாக்கம் ஏ.எம்.ஜெயின் கல்லூரி வழக்கமாக மேற்கத்திய உடைகளிலும், சுடிதார், ஜீன்ஸ் போன்ற நாகரீக உடைகளில் மட்டுமே மாணவிகளை பார்த்து ரசித்த கல்லூரி, இன்று காலை சேலைகளில் கண்டு மகிழ்ந்து ஆச்சரியப்பட்டது.

    மின்மினி செயலியும், போத்தீஸ் நிறுவனமும் இணைந்து சேலைகள் தின கொண்டாட்டத்தை நடத்தியது. இதையொட்டி கல்லூரி மாணவிகள் மட்டும் பங்கு பெற்ற பல்வேறு விதமான போட்டிகள் சென்னையில் உள்ள 20 கல்லூரிகளில் நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு கல்லூரியில் இருந்தும் தலா 50 பேர் வீதம் 1000 பேர் இறுதிப் போட்டியில் கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டார்கள். அந்த இறுதிப் போட்டிதான் இன்று ஏ.எம். ஜெயின் கல்லூரியில் நடைபெற்றது.

    சேலை கட்டி கல்லூரி வளாகத்துக்குள் வந்து குவிந்த மாணவிகள் கூட்டத்தை பார்த்து கல்லூரிக்கு வந்திருந்த மாணவிகளும், நாமும் சேலை கட்டி வந்திருக்கலாமோ, அவர்களெல்லாம் எவ்வளவு அழகாக இருக்கிறார்கள் என்று பார்த்து பொறாமைப்பட்டார்கள்.

    இதுவரை மேற்கத்திய உடைகள் மட்டுமே அணிந்து பழக்கப்பட்டவர்கள், சேலை கட்டினால் நடப்பது கூட சிரமம் என்று நினைத்தவர்கள் இன்று சேலையிலும் அசத்தினார்கள்.

    8 முழம் சேலையை எடுத்து முன்பக்கமாக ஒரு முகப்பை சொருகிவிட்டு உடலை ஒரு சுற்று சுற்றுவார்கள். அதன் பிறகு 5 முதல் 6 மடிப்புகள் வரை ஒரே அளவில் மடித்து சொருகிய பிறகு, முந்தானையை தோள் மீது போட்டு ஒரு முந்தியை வலப்பக்கமாக எடுத்து கொசுவத்தை இடுப்பில் சொருகுவார்கள். பின்னர் மடிப்பை ஒழுங்காக எடுத்து நேர்த்தியாக்கி சேலை கட்டி வரும் அழகே தனி அழகாக இருக்கும்.

    விதவிதமான உடைகளில் எத்தனை பெண்கள் சென்றாலும், அவர்களுக்கு இடையே இவ்வாறு சேலை கட்டி, தலையில் பூச்சூடி வலம் வரும் பெண்களை பார்த்தால் 'சேலை கட்டும் பெண்ணுக்கொரு வாசம் உண்டு...' என்று எல்லோரது கண்களும் அவர்களை நோக்கித்தான் திரும்பும்.

    அதே போலத்தான் இன்றைய ஏ.எம்.ஜெயின் கல்லூரி காட்சியும் அமைந்திருந்தது. மேகம் சூழ்ந்து இருண்ட மாலைப் பொழுதைப் போல் காலை நேரம் காட்சியளித்தது. அப்போது போட்டியில் கலந்து கொண்ட அத்தனை மாணவிகளும் முதல் நிகழ்ச்சியாக நடந்து வரும் 'வாக்கத்தான்' நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார்கள்.

    நடிகை சனம் ஷெட்டி மற்றும் கல்லூரி டீன் ரம்யா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள். கொடியிடை அசைய மாணவிகள் தழைய தழைய சேலை கட்டி நடந்த காட்சி பார்வையாளர்களை கண் சிமிட்டாமல் பார்க்க வைத்தது. அந்த நிகழ்ச்சி நிறைவடைந்ததும் மொத்த மாணவியர் கூட்டமும் போட்ட துள்ளல் நடனம் கல்லூரி வளாகத்தையே களை கட்ட வைத்தது.

    அதன் பிறகு கலையரங்கத்துக்குள் போட்டிகள் தொடங்கியது. முதல் போட்டியாக நடனப் போட்டி நடந்தது. இதில் 50-க்கும் மேற்பட்ட குழுக்கள் கலந்து கொண்டனர். முதலில் ஆடிய மாணவிகள் "ஜெமினி ஜெமினி ஜெமினி... கவனி கவனி கவனி... ஓ போடு" என்ற பாடலுக்கு போட்ட ஆட்டம் கூட்டத்தில் இருக்கும் அனைவரையும் கவனிக்க வைத்தது.

    நடுவராக இருந்த நடிகை சுஜா வருணியே வியந்து போனார். சேலை கட்டிக் கொண்டு இவ்வளவு அழகாக ஆடுவது சாதாரண மானதல்ல என்று பாராட்டினார். ஆர்.ஜே.ஆனந்தியும் இந்த போட்டிக்கு நடுவராக இருந்தார்.

    அதைத் தொடர்ந்து "பஞ்சு மிட்டாய் சேல கட்டி... பட்டு வண்ண ரவிக்கை போட்டு... கஞ்சி கொண்டு போறவளே" என்ற பாடலுக்கும் அவர்கள் போட்ட ஆட்டம் நிஜத்திலும் சேலை கட்டி ரவிக்கை அணிந்து ஆடியது ஆச்சரிய மூட்டியது.

    நடனத்தை தொடர்ந்து ஆடை - அலங்கார போட்டி நடந்தது. சேலையில் கைவண்ணம் காட்டியது நெசவாளர்கள். அந்த சேலையிலேயே தங்கள் கை வண்ணத்தை காட்டினார்கள் மாணவிகள்.

    அதாவது சாதாரணமாக சேலை கட்டுவதில் இருந்து வித்தியாசமான முறையில் சேலைகளை கட்டி இப்படியும் அசத்த முடியும் என்று அசத்தி காட்டினார்கள். அதைத் தொடர்ந்து குழு விவாதப் போட்டி அட்டகாசமாக அரங்கேறியது.

    'சேலை கட்டியதும் செம அழகாக மகாலட்சுமியாட்டம் தெரிவது எந்த தலைமுறை பெண்கள்? 2000-க்கு பிறகு பிறந்தவர்களா, 1980-90களில் பிறந்தவர்களா? என்ற தலைப்பில் சுமார் 30 மாணவிகள் பங்கேற்று விவாதம் செய்தார்கள். இதற்கு நடுவராக சுமையாநாஸ் இருந்தார்.

    இந்த நிகழ்ச்சிகளில் மின்மினி விற்பனைப் பிரிவு தலைமை அதிகாரி வெங்கட் சுந்தர்நாத், டி.ஜே.தீபிகா ஆகியோர் பங்கேற்றனர். ராஸ்மட்டாஸ் நிறுவனர் ஜோமைக்கேல் பிரவீன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

    நேரம் போவதே தெரியாமல் தொடர்ந்து போட்டிகள் களை கட்டிக் கொண்டிருந்தது. அரங்கத்தில் திரண்டிருந்த மாணவிகளும் உற்சாக குரலில் அரங்கத்தையே அதிர வைத்துக் கொண்டிருந்தார்கள். அவ்வப்போது தங்கள் செல்போன்களை ஒளிர விட்டு ஆரவாரம் செய்தார்கள்.

    'நீ கட்டும் சேல மடிப்புல நா கசங்கி போனேன்டி... என் எலுமிச்சம் பழ நிற இடுப்புல கிறங்கி போனேன்டி' என்ற புதிய மன்னர்கள் பாடலுக்கு ஏற்ப சேலையில் புதிய மாணவிகளாக தெரிந்தவர்களை பார்த்து கிறங்கித்தான் போனார்கள்.

    ×