என் மலர்
நீங்கள் தேடியது "அமெரிக்க தேர்தல்"
- பல விஷயங்களை மாற்றும் வகையில் உள்ளது.
- ஃபெடரல் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற வலியுறுத்தி உள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அந்நாட்டில் தேர்தல் விதிமுறைகளை கடுமையாக்கும் ஆவணங்களில் கையெழுத்திட்டுள்ளார். அதன்படி வாக்காளர் பதிவுக்கு குடியுரிமைக்கான ஆவண சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அனைத்து வாக்குச்சீட்டுகளும் தேர்தல் நாளுக்குள் பெறப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
கூட்டாட்சி தேர்தல்களில் வாக்களிக்கும் தகுதிக்கு பாஸ்போர்ட் போன்ற குடியுரிமை சான்றிதழ் கட்டாயம் இருக்க வேண்டும். தேர்தல் நாளுக்கு பிறகு பெறப்பட்ட தபால் வாக்குச்சீட்டுகளை ஏற்றுக்கொள்ள தடை விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வாக்காளர் பட்டியல்கள் உள்ளிட்ட விவரங்களை கூட்டாட்சி நிறுவனங்களுடன் மாகாணங்கள் பகிர்ந்து கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு தேர்தல் அதிகாரிகள் இணங்க மறுத்தால் மாகாண நிதி நிறுத்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து டிரம்ப் கூறும் போது, "நவீன, வளர்ந்த, வளரும் நாடுகளால் பயன்படுத்தப்படும் அடிப்படை மற்றும் தேவையான தேர்தல் பாதுகாப்புகளை செயல்படுத்த அமெரிக்கா தவறிவிட்டது.
இந்தியாவும், பிரேசிலும் வாக்காளர் அடையாளத்தை ஒரு பயோமெட்ரிக் தரவுத்தளத்துடன் இணைக்கின்றன. அதே நேரத்தில் அமெரிக்கா பெரும்பாலும் குடியுரிமைக்கான சுய சான்றளிப்பை நம்பியுள்ளது. இந்த உத்தரவு மூலம் தேர்தல் மோசடி முடிவுக்கு வரும் என்று நம்புகிறோம்," என்றார்.
கடந்த 2020-ம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்த டிரம்ப், தேர்தலில் மோசடி நடந்ததாக கூறி தனது தோல்வியை ஏற்க மறுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தேர்தலில் இறுதி வரை போட்டியிடுவேன்.
- இந்த பந்தயத்தில் இறுதிவரை ஓடிக் கொண்டு இருப்பேன்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எக்காரணம் கொண்டும் தேர்தலில் இருந்து பின்வாங்க மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் அதிபர் பைடன் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என்று அவரது கட்சியினரே வலியுறுத்தி வருகின்றனர். எனினும், தேர்தலில் இறுதி வரை போட்டியிடுவேன் என்று ஜோ பைடன் தெரிவித்தார்.
இது குறித்து பேசிய அதிபர் பைடன், "டொனால்ட் டிரம்ப்-ஐ தேர்தலில் வீழ்த்த முடியும் என்று முழுமையாக நான் நம்பவில்லை என்றால், மீண்டும் போட்டியிட மாட்டேன். ஊடகம் மற்றும் பல்வேறு தகவல்களுக்கு மத்தியில் இந்த தேர்தலில் போட்டியிடுவதில் தீவிரமாக உள்ளேன். இந்த பந்தயத்தில் இறுதிவரை ஓடிக் கொண்டே இருப்பேன். டொனால்ட் டிரம்ப்-ஐ வீழ்த்துவேன்."
"ஜனநாயக கட்சி சார்பில் இறுதி வேட்பாளர் தேர்வுக்கு இன்னும் 42 நாட்களும், பொது தேர்தல் துவங்க 119 நாட்களும் உள்ளன. எதிர்காலம் பற்றிய தெளிவின்மை மற்றும் தீர்மானங்களில் பலவீனம் ஏற்பட்டால் அது டிரம்ப்-க்கு சாதகமாக மாறி நமக்கு பாதிப்பை ஏற்படுத்திவிடும். இந்த தருணத்தில் நாம் ஒன்றிணைந்து, ஒருங்கிணைந்த கட்சியாக டொனால்ட் டிரம்ப்-ஐ வீழ்த்த வேண்டும்," என்று தெரிவித்தார்.
- ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
- டேவிட் வான்ஸ் "ஹில்பில்லி எலிகி" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் துணை அதிபர் வேட்பாளரை டொனால்டு டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அதிபர் பதவிக்கான தேர்தலில் டிரம்ப் களத்தில் உள்ள நிலையில், துணை அதிபர் பதவிக்கு ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் போட்டியிடுவார் என்று டிரம்ப் அறிவித்தார்.
ஓஹியோவை சேர்ந்த ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் "ஹில்பில்லி எலிகி" என்ற புத்தகத்தை எழுதியுள்ளார். டிரம்ப் ஆதரவாளர்களில் சிலர் பெண் அல்லது சற்றே மாநிறமாக உள்ள நபரை துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்ய வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில், தான் ஜேம்ஸ் டேவிட் வான்ஸ் தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார்.
முன்னதாக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் அதிபர் டிரம்ப் மீது சுப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்றது. துப்பாக்கி சூட்டில் சிக்கிய டிரம்ப் நூலிழையில் உயிர்தப்பினார். இவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய 20 வயதான தாமஸ் மேத்யூ சம்பவ இடத்திலேயே சுட்டு வீழ்த்தப்பட்டார்.
- துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பிறகு டிரம்ப் முதல் முறையாக பொது வெளியில் உரையாற்றினார்.
- பொது வெளியில் உரையாற்றிய டிரம்ப்-க்கு புல்லட் ப்ரூப் பாதுகாப்பு ஏற்பாடு.
முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் வடக்கு கரோலினாவில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். தன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவத்திற்கு பின் முதல் முறையாக பொது வெளியில் உரையாற்றிய டிரம்ப், பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென உரையை நிறுத்திவிட்டு தனக்கு மருத்துவ உதவி தேவைப்படுவதாக தெரிவித்தார்.
துப்பாக்கி சூடு சம்பவத்தில் நூலிழையில் உயிர்தப்பிய டிரம்ப் முதல் முறையாக பொது வெளியில் பேசுவதால், அவரை சுற்றி தோட்டாக்களை தடுத்து நிறுத்தும் புல்லட் ப்ரூப் கண்ணாடி அரண் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டு இருந்தது. கண்ணாடி அரணில் நின்று உரையாற்றிக் கொண்டிருந்த முன்னாள் அதிபர் டிரம்ப்-க்கு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது.
சுதாரித்துக் கொண்ட டிரம்ப் தனக்கு மருத்துவ உதவி வேண்டும் என்று தனது மைக்ரோபோனில் மெல்லிய குரலில் கேட்டார். இதையடுத்து அவரை அங்கிருந்து மீட்ட மருத்துவ குழு அவருக்கு முதலுதவி செய்தது. பின்னர் ஆசுவாசப்பட்டவராக உணர்ந்த டிரம்ப் அங்கு வெப்பம் அதிகமாக இருக்கிறது என்றார்.
தேர்தல் பரப்புரையின் போது துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிர்பிழைத்த டிரம்ப், பொதுவெளியில் பேசும் போது உடல்நலம் பாதிக்கப்பட்டு, உரையை நிறுத்திய சம்பவம் அங்கு கூடியிருந்தவர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.
- அமெரிக்காவில் இந்த ஆண்டு இறுதியில் அதிபர் தேர்தல் நடைபெற இருக்கிறது.
- அமெரிக்க அதிபர் தேர்தலை ஒட்டி, தேர்தல் களம் சூடிபிடித்துள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் அரிசோனா மாகாணத்தில் போட்டியிடுவதாக அறிவித்து இருந்த சுயேட்சை அதிபர் வேட்பாளர் ராபர்ட் எஃப். கென்னடி தேர்தல் போட்டியில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்து இருக்கிறார். இதற்காக ஆவணங்களை அவர் ஏற்கனவே தாக்கல் செய்துவிட்டதாக அரிசோணா மாகாண செயலாளர் அட்ரியன் ஃபோன்டஸ் தெரிவித்தார்.
இன்றிரவு நடைபெற இருந்த தேர்தல் பரப்புரையில் நாட்டு மக்களிடையே உரையாற்ற ராபர்ட் எஃப். கென்னடி முடிவு செய்திருந்தார். ராபர்ட் எஃப். கென்னடிக்கு ஆதரவு தெரிவித்து இருந்த சூப்பர் பேக் அமைப்பு ஒன்று கூறும் போது, கென்னடி மற்றும் டொனால்டு டிரம்ப் இடையே வேலைவாய்ப்பு தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தது.
அந்த ஒப்பந்தத்தின் படி டிரம்ப் தலைமையிலான நிர்வாகத்தில் கென்னடிக்கு பொறுப்பு வழங்க வேண்டும். ஏற்கனவே இது குறித்து பேசிய டிரம்ப், கென்னடி தேர்தல் போட்டியில் இருந்து விலகினால் அவருக்கு தனது நிர்வாகத்தின் கீழ் அமையும் அரசாங்கத்தில் பொறுப்பு வழங்குவதாக தெரிவித்து இருந்தார்.
அதன்படி கென்னடி, தனது கூட்டணியில் உள்ள துணை அதிபருக்கான சுயேட்சை வேட்பாளர் மற்றும் 11 வேட்பாளர்கள் தேர்தல் போட்டியில் இருந்து விலகுவதாக நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளனர் என்று அரிசோனாவின் ஃபாண்டெஸ் தெரிவித்துள்ளார்.
- கொலை முயற்சியில் துப்பாக்கி குண்டு டிரம்பின் காதை உரசி சென்றது.
- துப்பாக்கி வைத்திருந்ததை டொனால்டு டிரம்ப்-இன் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அதிபர் மீது இதுவரை இரண்டு முறை கொலை முயற்சி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. முதல் முறை அரங்கேறிய கொலை முயற்சியில் துப்பாக்கி குண்டு டிரம்பின் காதை உரசி சென்றது.
அப்போது நூலிழையில் உயிர்தப்பிய டிரம்ப் அதன் பிறகு தேர்தல் பரப்புரைகளில் தீவிரம் காட்டினார். இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த இடத்தில் மர்ம நபர் துப்பாக்கி வைத்திருந்ததை டொனால்டு டிரம்ப்-இன் பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதனால் டிரம்ப் மீது நடத்தப்பட இருந்த மற்றொரு துப்பாக்கி சூடு சம்பவம் தோல்வியில் முடிந்தது. அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப் மீது தொடர்ச்சியாக துப்பாக்கி சூடு நடத்தப்படும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.
மேலும், துப்பாக்கி சூடு முயற்சி முடிந்த இரண்டே நாட்களில் டிரம்ப் மீண்டும் தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்ட சம்பவம் அரங்கேறியது. இரண்டாவது முறை துப்பாக்கி சூடு நடத்தப்பட இருந்தது பற்றி பேசிய டிரம்ப், ஜோ பைடன் மற்றும் கமலா ஹாரிஸ் நான் நாட்டை காப்பாற்றி விடுவேன் என்று எண்ணி என்னை சுட்டுத் தள்ள முயற்சிக்கிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.
- துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- கைதானவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் களம் காணும் டொனால்டு டிரம்ப் கலிபோர்னியாவை அடுத்த கோச்செல்லாவில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வந்தார். அங்கு நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்ட டிரம்ப், வாக்காளர்களிடையே உரையாற்றினார்.
டிரம்ப் உரையாற்றிக் கொண்டிருந்த கூட்டத்தில் சட்டவிரோதமாக துப்பாக்கி மற்றும் தோட்டா ஏற்றப்பட்ட கைத்துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
டிரம்ப் பங்கேற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட நபர் ஒருவர் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்ததற்காக கைது செய்யப்பட்டதை ரிவர்சைடு கவுண்டி ஷெரிப் அலுவலகம் உறுதுப்படுத்தி இருக்கிறது.
துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டு இருப்பதை அறிந்திருப்பதாகவும், சனிக்கிழமை நடந்த இந்த சம்பவத்தின் போது டிரம்ப், பேரணியில் கலந்து கொண்ட யாருக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
"கைது செய்யப்பட்ட நபர் சிறையில் அடைக்கப்படவில்லை என்ற போதிலும், தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்று எஃப்.பி.ஐ. மற்றும் அமெரிக்க வழக்கறிஞர் அலுவலகம் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளன.
- டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு 4B இயக்கம் ஆன்லைனில் எழுச்சி.
- பெண்கள் புறக்கணிக்க அழைப்பு விடுக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து அமெரிக்க பெண்கள் மத்தியில்4B என்ற இயக்கம் பிரபலமாகி உள்ளது. இந்த இயக்கதில் இணைவோர் உடலுறவு, டேட்டிங், திருமணம், குழந்தைகள் வேண்டாம் என்று வாதிடுவதை நோக்கமாக கொண்டுள்ளனர்.
தென் கொரியாவில் கடந்த சில காலமாக பிரபலமாக இருந்து வரும் 4B இயக்கம், தற்போது அமெரிக்க பெண்களையும் ஈர்த்துள்ளது. 2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு 4B இயக்கம் ஆன்லைனில் எழுச்சியைக் கண்டது.
டொனல்டு டிரம்பின் வெற்றி- ஆண் வாக்காளர்களால் சாத்தியமாகி இருப்பதாகவும், சில இளம் அமெரிக்க பெண்கள் ஆண்களைப் புறக்கணிப்பதைப் பற்றி பேச துவங்கியுள்ளனர். இந்த விவகாரம் டிக்டாக் மற்றும் ஆன்லைனில் டிரெண்ட் ஆக மாறியுள்ளது. 4B இயக்கம் ஆண்களை பெண்கள் புறக்கணிக்க அழைப்பு விடுக்கிறது.
4B எனப்படும் தென் கொரிய இயக்கமானது ஆண்களை புறக்கணிக்கும் ஒருவகை சத்தியம் செய்வதாகும். அமெரிக்க தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதை அடுத்து, 4பி இயக்கத்தில் இணைவதாக பல அமெரிக்க பெண்கள் சத்தியம் செய்து வருகின்றனர். 4 எண்கள் (bi என்றால் கொரிய மொழியில் "இல்லை"). இது ஆண்களுடன் டேட்டிங் செய்ய மறுப்பது, ஆண்களுடனான பாலியல் உறவுகள், வேற்று பாலின திருமணம் மற்றும் பிரசவம் ஆகியவற்றை மறுப்பது ஆகும்.