என் மலர்
நீங்கள் தேடியது "ரஷியா பயணம்"
- 22-வது வருடாந்திர உச்சி மாநாடு, ரஷியா தலைநகர் மாஸ்கோவில் நடைபெறுகிறது.
- இரு நாடுகளுக்கு இடையே பல்வேறு துறைசார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன.
மாஸ்கோ:
இந்தியா-ரஷியா இடையிலான 22-வது வருடாந்திர உச்சி மாநாடு ரஷியா தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார்.
மாஸ்கோ விமான நிலையத்தில் வந்திறங்கிய பிரதமர் மோடியை ரஷியாவின் முதல் துணை பிரதமர் டெனிஸ் மாந்துரோவ் வரவேற்றார். தொடர்ந்து, ரஷிய படையினரின் சிறப்பு அணிவகுப்பு மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.
இதற்கிடையே, மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். பிரதமர் மோடியை வரவேற்ற ரஷிய அதிபர் புதின் இரவு விருந்து அளித்தார்.
இந்நிலையில், மாஸ்கோவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷிய அதிபர் புதின் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். வணிகம், எரிபொருள், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்ற பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
அப்போது பேசிய பிரதமர் மோடி, குண்டுகள், துப்பாக்கிகள், தோட்டாக்களுக்கு மத்தியில் அமைதி பேச்சுவார்த்தை வெற்றியடையாது என தெரிவித்தார்.
இருநாட்டு உறவுகள் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை மேற்கொள்கின்றனர். இரு நாடுகளுக்கும் இடையே பல்வேறு துறைசார்ந்த ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ரஷியாவின் உயர்ந்த விருதை பிரதமர் மோடிக்கு அதிபர் புதின் அளித்து கவுரவித்தார்.
- இந்த உயர்ந்த விருதை இந்திய மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்றார் பிரதமர் மோடி.
மாஸ்கோ:
இந்தியா-ரஷியா இடையிலான 22-வது வருடாந்திர உச்சி மாநாடு ரஷியா தலைநகர் மாஸ்கோவில் இன்று நடைபெறுகிறது. இதில் பங்கேற்க, டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் பிரதமர் மோடி நேற்று புறப்பட்டுச் சென்றார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மாஸ்கோவில் உள்ள கார்ல்டன் ஹோட்டலுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். பிரதமர் மோடியை வரவேற்ற ரஷிய அதிபர் புதின் இரவு விருந்து அளித்தார்.
இதற்கிடையே, மாஸ்கோவில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ரஷிய அதிபர் புதின் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். வணிகம், எரிபொருள், பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இணைந்து பணியாற்ற பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்நிலையில், ரஷியாவின் உயர்ந்த விருதான ஆர்டர் ஆப் செயிண்ட் ஆண்ட்ரூ த அபோஸ்தல் விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் புதின் அளித்து கவுரவித்தார்.
இந்த உயர்ந்த விருதை இந்திய மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என பிரதமர் மோடி எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
#WATCH | Russian President Vladimir Putin confers Russia's highest civilian honour, Order of St Andrew the Apostle on Prime Minister Narendra Modi. pic.twitter.com/aBBJ2QAINF
— ANI (@ANI) July 9, 2024
- இரு நாட்டு அதிபர்களுடனும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நல்லுறவு இருக்கிறது.
- போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் முன்முயற்சியை உலகமே எதிர்பார்க்கிறது.
புதுடெல்லி:
ரஷியா-உக்ரைன் இடையே 2 ஆண்டுக்கு மேலாக போர் நடந்துவருகிறது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டுவர அமைதிப் பேச்சு வார்த்தையில் இந்தியா, சீனா, பிரேசில் ஆகிய நாடுகள் மத்தியஸ்தர்களாக செயல்பட முடியும் என ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்தார்.
இந்திய பிரதமர் மோடியின் ரஷியா, உக்ரைன் பயணத்துக்கு பிறகு புதின் இந்தக் கருத்தை தெரிவித்தார். இதே கருத்தை உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியும் கூறியுள்ளார்.
இரு நாட்டு அதிபர்களுடனும் இந்தியாவுக்கும், பிரதமர் மோடிக்கும் நல்லுறவு இருக்கும் நிலையில், போரை முடிவுக்கு கொண்டுவர இந்தியாவின் முன்முயற்சியை உலகமே எதிர்பார்க்கிறது.
இந்நிலையில், அமைதிப் பேச்சுவார்த்தையை முன்னெடுக்கும் விதமாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வரும் 10 மற்றும் 11-ம் தேதிகளில் ரஷியாவில் சுற்றுப்பயணம் செய்கிறார். பிரிக்ஸ் மாநாட்டுக்காகச் செல்லும் அவர், ரஷியா மற்றும் சீனா நாடுகளின் உயரதிகாரிகள், அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அஜித் தோவலின் இந்தப் பயணத்தின்போது ரஷிய அதிபர் புதினை அஜித் தோவல் சந்தித்துப் பேசுகிறார். அப்போது ரஷியா-உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாகவும், அமைதிக்கான முயற்சிகள் தொடர்பாகவும் விவாதிக்கலாம் என தகவல் வெளியானது.