என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடர்"
- 3-வது 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது.
- வருகிற 14-ந்தேதியுடன் ஜிம்பாப்வே தொடர் முடிவடைகிறது.
புதுடெல்லி:
வெஸ்ட் இண்டீசில் சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. அதோடு ரோகித் சர்மா, விராட்கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்காக அறிவித்தனர்.
தற்போது சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை காணப்படுகிறது.
3-வது 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது. வருகிற 14-ந்தேதியுடன் ஜிம்பாப்வே தொடர் முடிவடைகிறது.
இதற்கிடையே இந்திய அணி இந்த மாதம் இறுதியில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.
ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் 20 ஓவர் போட்டியில் மட்டுமே ஓய்வு அறிவித்து இருந்தனர். ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரில் தொடர்ந்து ஆடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, வீராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் ஆடமாட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. 3 பேருக்கும் ஓய்வு கொடுக்கப்படுகிறது.
டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாட உள்ளதால் இலங்கைக்கு எதிரான 3 ஒரு நாள் தொடரில் 3 பேரும் விளையாடவில்லை எனறு கூறப்படுகிறது.
சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் அவர்கள் பயிற்சி பெற போதுமானதாக இருக்கும்.
இந்திய அணி செப்டம்பர்-ஜனவரி இடைவெளியில் 10 டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. வங்காளதேசம் (2 டெஸ்ட்), நியூசிலாந்து (3 டெஸ்ட்) ஆஸ்திரேலியா (5 டெஸ்ட்) ஆகியவற்றுடன் மோத இருக்கிறது.
இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கும்பட்சத்தில் ஹர்திக் பாண்ட்யா அல்லது கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.