search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்பிரித் சிங்"

    • டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது.
    • அப்போது ஹாக்கி இந்திய அணியின் கேப்டனாக இருந்தவர் மன்பிரித் சிங் ஆவார்.

    புதுடெல்லி:

    ஹாக்கி இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மன்பிரித் சிங். இவரது தலைமையின் கீழ் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா பதக்கம் வென்றது நினைவு கூரத்தக்கது.

    இந்நிலையில், இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் மன்பிரித் சிங் கூறியதாவது:

    நான்கு ஒலிம்பிக்கில் விளையாட முடியும் என நான் நினைக்கவே இல்லை. ஒலிம்பிக்கில் விளையாடி பதக்கம் வெல்லவேண்டும் என்பது ஒவ்வொரு வீரரின் கனவாகும். இது எனது நான்காவது ஒலிம்பிக் என்பதால் மிகவும் அதிர்ஷ்டசாலியாக கருதுகிறேன்.

    இது எனது கடைசி ஒலிம்பிக் என நினைத்து பாரிஸ் செல்கிறேன். என்னால் முடிந்ததை கொடுக்கவேண்டும். நான் இன்னும் விளையாட்டை விட்டு வெளியேறுவது பற்றி யோசிக்கவில்லை. எனது முழு கவனமும் பாரிஸ் ஒலிம்பிக்சில் உள்ளது.

    மோசமான காலங்களில் குடும்பம் மற்றும் குழுவின் ஆதரவு மிகவும் முக்கியமானது. ஏனெனில் அந்த நேரத்தில் வீரர் தன்னை மிகவும் தனிமையாக உணர்கிறார். அணி ஒன்றாக நிற்கும்போது அது மிகுந்த ஊக்கத்தை அளிப்பதோடு, மீண்டு வருவதற்கு உதவுகிறது. சமீபத்தில் ஹர்திக் பாண்டியாவின் ஒரு சிறந்த மறுபிரவேசத்தைப் பார்த்தோம்.

    இப்போது நான் கேப்டனாக இல்லாவிட்டாலும் அதில் எந்த மாற்றமும் இல்லை. ஹாக்கியில் ஒவ்வொரு வீரருக்கும் அவரவர் பங்கு உண்டு. அனைவரையும் அழைத்துச் செல்வதே முயற்சி. மூத்தவராக இருப்பதால் இளைஞர்களை ஊக்குவிக்க வேண்டும்.

    டோக்கியோவில் இருந்த 11 வீரர்கள் ஒரே மாதிரியாக இருப்பதால் நாங்கள் அதையே தொடர்வோம். 5 அறிமுக வீரர்களுடன் எங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் குழு கடினமானது. எந்த அணியையும் எங்களால் எளிதாக எடுத்துக்கொள்ள முடியாது.

    நல்ல அணிகளுக்கு எதிராக எங்களுக்கு குறைவான வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் 50-50 வாய்ப்புகளை மாற்றுவது ஒரு சாம்பியனின் அடையாளமாகும். பாரிசில் இதைச் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம் என தெரிவித்தார்.

    ×