என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மெட்ரோ நிலையம்"

    • பல்வேறு வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
    • சண்டையை நிறுத்துவதற்காக விலக்கிவிட்ட போது அவரை ஒருவர் அறைந்தார்.

    டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் பயணிகள் இருக்கைக்காக சண்டையில் ஈடுபட்ட காட்சிகள், இளம்ஜோடிகளின் அத்துமீறல், ஆபாசமாக உடை அணிந்து வந்த பயணிகள் என பல்வேறு வீடியோக்கள் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

    இந்நிலையில், தற்போது இணையத்தில் பரவி வரும் ஒரு வீடியோவில், டெல்லி மெட்ரோ ரெயில் நிலையத்தில் டோக்கன் கவுண்டரில் 2 பயணிகளுக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அவர்கள் ஒருவரை ஒருவர் தாக்கி கொள்ளும் காட்சிகள் வைரலாகி வருகிறது.

    அப்போது சக பயணி ஒருவர், அவர்களின் சண்டையை நிறுத்துவதற்காக விலக்கிவிட்ட போது அவரை ஒருவர் அறைந்தார்.

    இதுதொடர்பான வீடியோ எக்ஸ் தளத்தில் வைரலாகி 10 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. இதைப்பார்த்த பயனர்கள் கேலியான கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

    • பிற்பகல் 2.01 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது
    • ஜங்கிள் ஜம்போரி உணவகத்தில் இந்த தீவிபத்தானது ஏற்பட்டுள்ளது.

    மேற்கு டெல்லியின் ரஜோரி கார்டன் பகுதியில் உள்ள உணவகத்தில் இன்று மதியம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

    பிற்பகல் 2.01 மணியளவில் டெல்லி, ரஜோரி கார்டன் ரயில் நிலையம் அருகே உள்ள ஜங்கிள் ஜம்போரி உணவகத்தில் இந்த தீவிபத்தானது ஏற்பட்டுள்ளது.

    தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு தீயணைப்புத் துறையினர் விரைந்துள்ளனர். மளமளவென பரவிய தீயை அணைக்கும் பணியில் 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

    தீ விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது. தங்கள் கடைக்கும் தீ பரவக் கூடும் என அருகில் இருக்கும் கடைக்காரர்கள் மத்தியிலும் பீதி ஏற்பட்டுள்ளது.

    கடையை சுற்றி நின்று தீயை அணைக்கும் வீடியோவை டெல்லி தீயணைப்பு துறை பகிர்ந்துள்ளது. உணவக கட்டிடத்தில் சிக்கியவர்கள் மாடி வழியாக கீழே இறங்க முயற்சிப்பதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. 

    ×