என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செரிமான பிரச்சனை"

    • வாய்வுத் தொல்லை, மாரடைப்பைத் துல்லியமாக வேறுபடுத்திப் பார்க்க முடியாது.
    • தீவிரமான வலியையோ, அசவுகரியத்தையோ ஏற்படுத்தும்.

    லேசாக நெஞ்சு வலித்தால்கூட அது மாரடைப்பின் அறிகுறியாக இருக்குமோ, இதயக் கோளாறாக இருக்குமோ என்கிற அச்சம் பலருக்கும் உள்ளூர எழுகிறது. அது மாரடைப்புதான் என்கிற பயம் வரத்தான் செய்கிறது. ஆனால், சாதாரண வாய்வுத் தொல்லையால்கூட நெஞ்சுவலி ஏற்படலாம்.

    நெஞ்சுவலிக்கு வாய்வுத் தொல்லையும் காரணமாக இருக்கலாம், மாரடைப்பும் காரணமாக இருக்கலாம். இவற்றை எப்படி வேறுபடுத்திப் பார்ப்பது என்று பார்க்கலாம்.

    வாய்வுத் தொல்லை, மாரடைப்பைத் துல்லியமாக வேறுபடுத்திப் பார்க்க முடியாது. ஆனாலும், அறிகுறிகளை வைத்து ஓரளவு வகைப்படுத்தலாம்.

    மாரடைப்பாக இருந்தால், குறிப்பிட்ட இடத்தில் மட்டுமல்லாமல், சுற்றியுள்ள பகுதிகளுக்கும் அவை பரவும். உதாரணமாகத் தோள்பட்டை, கை, முதுகுத் தண்டுவடம், கழுத்து, பற்கள், வாயின் தாடைப் பகுதிக்கு வலி பரவும். குறிப்பிட்ட ஒரே பகுதியில் மட்டும் தீவிரமான வலியையோ, அசவுகரியத்தையோ ஏற்படுத்தும்.

    வாய்வுத் தொல்லை, நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகள் அப்படியல்ல. வாய்வுத் தொல்லை அல்லது நெஞ்செரிச்சலின்போது குறிப்பிட்ட பகுதியின் உள்ளே இருந்து யாரோ குத்துவது போன்ற உணர்வும், இழுப்பதுபோன்ற உணர்வும் ஏற்படும். அதேபோல் மூச்சுத்திணறலோ, தோள்பட்டையில் வலியோ, தொண்டையில் அழுத்தமோ ஏற்படாது.

    வாய்வுத் தொல்லையின்போது வாய்நாற்றம், பற்சிதைவு, உணவு விழுங்குவதில் சிக்கல், வாந்தி, எதுக்களித்தல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். சிலருக்கு, நெஞ்சுப் பகுதியில் இல்லாமல், பின்முதுகு அல்லது குறிப்பிட்ட ஒரு பகுதியில் உள்ளே இருந்து ஏதோவொன்று இழுப்பதுபோன்ற உணர்வு ஏற்படலாம்.

    நெஞ்செரிச்சலின்போது, புளித்த ஏப்பம் அதிகமாக ஏற்படும். மூச்சுக் குழாயில் ஏற்படும் எரிச்சலால், உடலில் அமிலத்தன்மை அதிகரிப்பதை உணர முடியும். அதேபோல நெஞ்செரிச்சல், சாப்பிடுவதற்கு முன் அல்லது சாப்பிடாத நேரங்களில்தான் அதிகம் ஏற்படும். அமிலத்தன்மை அதிகம் இருக்கும் என்பதால், ஆரோக்கியமான உணவு உண்டதும் இந்தப் பிரச்னை உடனடியாகச் சரியாகிவிடும்.

    இவற்றை அடிப்படையாக வைத்து, உங்களுக்கு ஏற்படும் நெஞ்சு வலி மாரடைப்பா அல்லது வாயுத் தொல்லையா என்பதை நீங்களாகவே கணித்துக்கொள்ளலாம். சிலருக்குப் பதற்றம் அதிகரிக்கும்போது, அதன் காரணமாகக்கூட நெஞ்சு வலி ஏற்படலாம். இது, மருத்துவ மொழியில் பேனிக் அட்டாக் (Panic Attack) எனப்படும்.

    நெஞ்சுப்பகுதியின் நடுப்பகுதியில் வரக்கூடிய வலி இதயத்தில் ஏற்படும் வலியாக இருக்கும். இடது பக்கம் வரக்கூடிய வலி பெரும்பாலும் வாயுப்பிடிப்பாகத்தான் இருக்கும். ஏனென்றால் இதயத்துக்கும், இரைப்பைக்கும் இடையில் டயாப்ரம் என்ற ஒரு சவ்வு தான் இருக்கும். இது நாம் இரவு நேரம் கடந்து சாப்பிடும் போதோ அல்லது நிறையை தண்ணீர் குடிக்கும் போதோ அல்லது வயிறு நிறைய சாப்பிடும் போதோ இந்தமாதிரி வாயுப்பிடிப்பு ஏற்படும். சாப்பிட்ட சாப்பாடு சரியாக செரிமானம் ஆகாத போது கூட வாயுப்பிடிப்பு ஏற்படும்.

    இதற்கு சிறந்த வழி என்னவென்றால் ஆரோக்கியமான சாப்பாடு, அளவான தண்ணீர் தான். இந்த வாயுப்பிடிப்பு பிரச்சனை இருப்பவர்கள் கடைகளில் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதுவும் இரவு சாப்பாடு 7 மணியில் இருந்து 7.30 மணிக்குள் முடித்துவிட வேண்டும். அதுவும் அளவான தண்ணீர் மட்டுமே அருந்த வேண்டும், வயுறு முட்ட நீர் அருந்தக்கூடாது. இவ்வாறு செய்தால் மட்டுமே வாயுப்பிடிப்பை தவிர்க்க முடியும்.

    • நெய்யில் கலோரிகள் அதிகம் இருப்பது உண்மை தான்.
    • நெய்யில் நிறைய வைட்டமின்கள் உள்ளன.

    இந்தியாவில் உணவின் சுவையை அதிகரிக்க சேர்க்கப்படும் உணவுப் பொருட்களில் ஒன்று தான் நெய். இந்த நெய்யானது வெண்ணெயில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இத்தகைய நெய்யை பலர் உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளமாட்டார்கள். ஏனெனில் இதனை சாப்பிட்டால், உடலில் கொலஸ்ட்ராலின் அளவு அதிகரிக்கும் என்பதால் தான்.

    உணவில் நல்லெண்ணெய் அதிகம் சேப்பீங்களா? அப்ப நீங்க ஆரோக்கியசாலி தான்… ஆனால் உண்மையில் நெய் சாப்பிட்டால், கொலஸ்ட்ராலின் அளவு குறையும் என்பது தெரியுமா? இதுபோன்று நெய்யில் நிறைய நன்மைகள் நிறைந்துள்ளன.


    அதேசமயம் இதில் கலோரிகள் அதிகம் இருப்பது உண்மை தான். ஆனால் அளவாக சாப்பிட்டால், அனைத்துமே நல்லது தான். செரிமான மண்டலம் செரிமான பிரச்சனை உள்ளவர்கள் உணவில் எண்ணெய்க்கு பதிலாக நெய்யை சேர்த்தால், செரிமான பிரச்சனையில் இருந்து விடுபடலாம். நெய்யில் நிறைய வைட்டமின்கள் உள்ளன.

    அதில் வைட்டமின் ஏ, டி, ஈ மற்றும் கே போன்றவை குறிப்பிடத்தக்கவை. எனவே தினமும் சிறிது நெய்யை உணவில் சேர்த்து கொண்டால், உடலுக்கு வேண்டிய வைட்டமின்களைப் பெறலாம். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் நெய் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும்.

    அதிலும் வளரும் குழந்தைகளுக்கு நெய்யை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, அவர்கள் நோய்வாய் படாமல் இருப்பார்கள்.


    இதயத்திற்கு நல்லது. நெய்யில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் கொழுப்பை கரைக்கக்கூடிய வைட்டமின்கள் அதிகம் இருப்பதால், இது இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.

    மற்றோரு ஆச்சரியமான நன்மை என்னவென்றால், நெய்யானது கொலஸ்ட்ராலை குறைக்க உதவும். எப்படியெனில் இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகப்படியான கொலஸ்ட்ராலை கரைத்து குறைத்துவிடும்.

    தசைகளுக்கு நல்லது. வயதானவர்கள் உணவில் நெய்யை அளவாக சேர்த்து வந்தால், தசைகள் மற்றும் மூட்டுகளில் தேய்மானம் எதுவும் ஏற்படாமல், அவைகள் நன்கு செயல்படுவதற்கு உதவும். இதனால் வயதாவதால் ஏற்படும் மூட்டு சம்பந்தமான பிரச்சனைகளைத் தவிர்க்கலாம்.

    லாக்டோஸ் சகிப்புத்தன்மையால் நிறைய மக்களுக்கு பால் பொருட்கள் என்றால் அலர்ஜி ஏற்படும். அத்தகையவர்கள் நெய்யை பயமின்றி உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் பால் பொருட்களின் மூலம் கிடைக்கக்கூடிய சில நன்மைகளானது நெய்யின் மூலம் கிடைக்கும்.

    பெரும்பாலானோர் நெஞ்செரிச்சலால் அவதிப்படுவார்கள். குறிப்பாக கர்ப்பிணிகள் பலருக்கு இந்த பிரச்சனை ஏற்படும். ஆகவே இப்படி நெஞ்செரிச்சல் ஏற்படும் போது, 1 டேபிள் ஸ்பூன் நெய்யை உணவில் சேர்த்து சாப்பிட்டால், நெஞ்செரிச்சல் உடனே தணியும்.

    ×