என் மலர்
நீங்கள் தேடியது "சாம்பியன்ஸ் கோப்பை 2025"
- 2021 நவம்பர் மாதம் ஐசிசி தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்றார்.
- ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் 19-ந்தேதி தொடங்குகிறது.
துபாய்:
8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை தொடர் அடுத்த மாதம் 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது
இந்நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் ஆரம்பமாக உள்ள நிலையில் ஐசிசி தலைமை செயல் அதிகாரி ஜெப் அலர்டிஸ் தனது பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்துள்ளார். இவர் 2021 நவம்பர் மாதம் ஐசிசி தலைமை செயல் அதிகாரியாக பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைமை அதிகாரியாக செயல்பட்டது எனக்கு பெருமை அளிக்கிறது. என்னால் முடிந்தவரை இந்த பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டுள்ளேன். ஓய்வு பெறுவதற்கு இதுதான் சரியான நேரமாக இருக்கும் என்று கருதுகிறேன்.
என்று ஜெப் அலர்டிஸ் கூறினார்.
- சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான், துபாயில் நடைபெறுகிறது.
- முதல் போட்டி பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறுகிறது.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி தொடங்கி மார்ச் 9-ம் தேதி வரை நடக்கிறது. இந்தத் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இந்தியா மோதும் போட்டிகள் மட்டும் துபாயில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான நடுவர்கள் குழுவில் இந்தியர்கள் இடம்பெறவில்லை. ஐ.சி.சி.யின் நடுவர்கள் குழுவில் இந்தியாவை சேர்ந்த நிதின் மேனன் மற்றும் போட்டி நடுவர்கள் குழுவில் முன்னாள் வேகப்பந்து வீரரான ஜவகல் ஸ்ரீநாத்த் இடம் பெற்றனர். இந்த இருவரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளனர்.
தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னால் பாகிஸ்தான் செல்ல இயலாது என்று நிதின் மேனன் அறிவித்து விட்டார். தொடர்ந்து நான்கு மாதங்களாக பணியாற்றி வருவதால் தனக்கு விடுப்பு அளிக்குமாறு ஸ்ரீநாத் கேட்டுக் கொண்டார். இதை ஐ.சி.சி. ஏற்றுக்கொண்டது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் கள நடுவர்கள் மற்றும் போட்டி நடுவர்கள் விவரம்:
நடுவர்கள்: தர்மசேனா (இலங்கை), கிறிஸ் கபானி (நியூசிலாந்து) மைக்கேல் காப், ரிச்சர்டு கெட்டில் போரோ, அலெக்ஸ் ஹர்ப் (இங்கிலாந்து) அட்ரியன் ஹோல்ஸ்டாக் (தென் ஆப் பிரிக்கா) பால் ரீபெல், ரோட்னி டக்கர் (ஆஸ்திரேலியா), அசன் ராசா (பாகிஸ்தான்) ஷர்பதுல்லா (வங்கதேசம்), ஜோயல் வில்சன் (வெஸ்ட் இண்டீஸ்).
போட்டி நடுவர்கள்: டேவிட் பூன் (ஆஸ்திரேலியா), ரஞ்சன் மதுகல்லே (இலங்கை), ஆண்ட்ரூ பைகிராப்ட் (ஜிம்பாப்வே).
- நட்சத்திர வீரர்களில் ஒருவர் மார்கஸ் ஸ்டோய்னிஸ்.
- வேறொரு வீரர் இடம்பெறுவார் என்று தெரிகிறது.
உலகக் கோப்பை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்ற மார்கஸ் ஸ்டோய்னிஸ் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். எனினும், தொடர்ச்சியாக டி20 கிரிக்கெட் போட்டியில் கவனம் செலுத்துவதாக அறிவித்து இருக்கிறார்.
இன்னும் சில வாரங்களில் பாகிஸ்தான் மற்றும் துபாயில் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ள நிலையில், ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஓய்வு அறிவித்து இருக்கிறார்.
முன்னதாக சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் இடம்பெற்று இருந்தார். இந்த நிலையில் இவர் ஓய்வை அறிவித்துள்ளார். இதையடுத்து சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் ஸ்டோய்னிஸ்-க்கு பதில் வேறொரு வீரர் இடம்பெறுவார் என்று தெரிகிறது.
35 வயதான மார்கஸ் ஸ்டோய்னிஸ் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் டி20 கிரிக்கெட் தொடரில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். சமீபத்திய போட்டிகளின் போது ஸ்டோய்னிஸ் காயத்தில் அவதியுற்றதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த நிலையில், நட்சத்திர வீரர் ஸ்டோய்னிஸ் ஓய்வு அறிவித்து இருப்பது அந்த அணிக்கு மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
- சாம்பின்ஸ் கோப்பை தொடர் பாகிஸ்தான், துபாயில் நடைபெறுகிறது.
- இந்திய போட்டிகள் அனைத்தும் துபாயில் நடைபெறுகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்-இன் (ஐசிசி) சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது.
இந்த தொடருக்கான இந்திய அணியில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெற்றுள்ளார். முன்னதாக ஆஸ்திரேலிய சுற்றுப் பயணத்தின் கடைசி டெஸ்ட் போட்டியின் போது பும்ரா காயமடைந்தார். முதுகு பகுதியில் ஏற்பட்ட காயத்தால் அவர் கடைசி டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் பந்து வீசவில்லை. அதன் பின்னர் அவர் எந்தவித போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.
பெங்களூருவில் உள்ள இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) சிறப்பு மையத்தில் பும்ராவுக்கு சமீபத்தில் ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு தொடர்பாக பி.சி.சி.ஐ.யின் மருத்துவக் குழுவினர், தேர்வுக்குழு மற்றும் இந்திய அணி நிர்வாகத்துடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. ஆனால் இது தொடர்பாக அதிகாரப்பூர்வ மாக எதுவும் தெரிவிக் கப்பட வில்லை.
இந்த நிலையில் சாம்பி யன்ஸ் டிராபி போட் டிக்கான வீரர்களின் இறுதி பட்டியலை அறிவிப்பதற்கான காலக்கெடு இன்றுடன் முடிகிறது. இதனால் ஜஸ்பிரீத் பும்ரா பங்கேற்பது குறித்த முடிவை இந்திய தேர்வுக் குழுவினர் இன்று அறிவிக்கலாம் என்று தெரிகிறது.
ஒருவேளை ஜஸ்பிரித் பும்ரா உடல் தகுதி இல்லாமல் இடம்பெறாமல் போனால் அவர் இடத்தில் தமிழகத்தை சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்திக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அதே நேரத்தில் வேகப்பந்து வீரர் ஹர்ஷித் ராணாவும், பும்ராவுக்கான இடத்தில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.
- அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை.
- யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு மாற்றாக இடம்பெற்றுள்ளார்.
ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் தொடங்குகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி நேற்றிரவு உறுதிப்படுத்தப்பட்டது. பி.சி.சி.ஐ. வெளியிட்ட உறுதிப்படுத்தப்பட்ட இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா இடம்பெறவில்லை.
கடந்த ஆண்டு இறுதியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடும் போது காயமுற்ற ஜஸ்பிரித் பும்ரா இன்னும் குணமடையவில்லை. இதன் காரணமாக அவர் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் பங்கேற்கவில்லை.
இது குறித்து பி.சி.சி.ஐ. வெளியிட்டுள்ள அறிக்கையின் படி, "முதுகு பகுதியில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 2025 ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்கு மாற்றாக ஹர்ஷித் ராணா அணியில் இடம்பெறுகிறார். மேலும், இந்திய அணியில் வருண் சக்கவர்த்தியும் இடம்பெற்றுள்ளார். இவர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு மாற்றாக இடம்பெற்றுள்ளார்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாம்பியன்ஸ் கோப்பைக்கான இந்திய அணி உறுதிப்படுத்தப்பட்ட பட்டியல்:
ரோகித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயஸ் அய்யர், கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், ஹர்ஷித் ராணா, முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவீந்திர ஜடேஜா மற்றும் வருண் சக்கரவர்த்தி.
பயணம் செய்யாத மாற்று வீரர்கள்: யஷஸ்வி ஜெய்ஸ்வால், முகமது சிராஜ் மற்றும் சிவம் துபே. மூன்று வீரர்களும் தேவைப்படும்போது துபாய் செல்வார்கள்.
- இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-3 என தோற்றாலும் கவலையில்லை.
- பென் டக்கெட் இவ்வாறு பேசியதற்கு கெவின் பீட்டர்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் கதொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டி20 கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி 4-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது.
இதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டு ஒருநாள்போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில், இந்தியாவுடன் ஒருநாள் தொடரை இழந்தது குறித்து பேசிய இங்கிலாந்து வீரர் பென் டக்கெட், "எங்களின் நோக்கம் சாம்பியன்ஸ் டிராபியை வெல்வதுதான். இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-3 என தோற்றாலும் கவலையில்லை. நாங்கள் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்துவோம். எல்லாம் சரியான நேரத்தில் சிறப்பாக விளையாடுவதில் உள்ளது" என்று தெரிவித்தார்.
பென் டக்கெட் இவ்வாறு பேசியதற்கு முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், "இங்கிலாந்து இந்தியாவிடம் 3-0 என தோற்றாலும் கவலையில்லை என்று டக்கெட் சொல்வது மிகவும் மோசமானது. இவ்வாறு ஒருபோதும் அவர் சொல்லிருக்க கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.
- குடும்பத்தினரை வீரர்கள் உடன் அழைத்து செல்லலாம்.
- மூத்த வீரர் கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி கடந்த ஆண்டு இறுதியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியாவிலும், ஆஸ்திரேலியா சுற்றுப் பயணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் தோல்வியை சந்தித்தது. இதன் காரணமாக இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முடியாமல் போனது.
இதையடுத்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) இந்திய அணிக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. அதில் 45 நாட்களுக்கு அதிகமான வெளிநாட்டு சுற்றுப் பயணத்தின் போது மட்டும் இரண்டு வாரங்கள் குடும்பத்தினரை வீரர்கள் உடன் அழைத்து செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடக்கிறது. இந்தத் தொடர் 19 நாட்கள் நடப்பதால் வீரர்கள் தங்களது குடும்பத்தினரை அழைத்து செல்ல முடியாது. இந்த நிலையில் இந்திய அணி மூத்த வீரர் ஒருவர் தனது குடும்பத்தை சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் போது உடன் அழைத்து செல்ல கிரிக்கெட் வாரியத்திடம் அனுமதி கேட்டுள்ளார்.
தனது குடும்பத்திற்கு விதிவிலக்கு அளிக்க முடியுமா என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஆனால் அதை கிரிக்கெட் வாரியம் திட்டவட்டமாக நிராகரித்து விட்டது. இதுகுறித்து கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் கூறும்போது, இந்த சுற்றுப் பயணத்திற்கு வீரர்கள் தங்கள் மனைவிகளை உடன் அழைத்து வர வாய்ப்பில்லை.
இதில் விதிவிலக்கு கேட்டு மூத்த வீரர்களில் ஒருவர் கோரிக்கை விடுத்தார். ஆனால் அவரிடம் கொள்கை முடிவு பின்பற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சுற்றுப்பயணம் ஒரு மாதத்திற்கும் குறைவானது என்பதால், வீரர்களுடன் அவர்களது குடும்பத்தினர் செல்ல அனுமதி இல்லை. ஒருவேளை விதிவிலக்குகள் அளிக்கப்பட்டால் கிரிக்கெட் வாரியம் எந்த செலவையும் ஏற்காது. சம்பந்தப்பட்ட வீரர்தான் முழு செலவுகளையும் ஏற்க வேண்டி இருக்கும்.
ஆனால் எங்கள் நிலைப்பாட்டில் நாங்கள் மிகவும் தெளிவாக இருக்கிறோம். தற்போதைய நிலவரப்படி, சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் போது வீரர்களுடன் குடும்பத்தினர் இருக்க மாட்டார்கள் என்று தெரிவித்தனர். கிரிக்கெட் வாரியத்திடம் கோரிக்கை வைத்த மூத்த வீரர் யார்? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
- சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது.
- இந்திய அணி தனது போட்டிகளை துபாயில் விளையாடுகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடருக்கான பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மார்ச் 9-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு 2.24 மில்லியன் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 19.45 கோடி வழங்கப்படும் என்று ஐ.சி.சி. அறிவித்துள்ளது.
இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கான பரிசுத் தொகை 1.12 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 9.72 கோடி வழங்கப்படுகிறது. அரையிறுதி சுற்றில் தோல்வியை தழுவும் ஒவ்வொரு அணிக்கும் 5.6 லட்சம் அமெரிக்க டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 4.86 கோடி வழங்கப்படுகிறது. இதன் மூலம் நடக்கவிருக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் மொத்த பரிசுத் தொகை 6.9 மில்லியன் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 60 கோடி ஆகும்.
க்ரூப் சுற்று போட்டிகளில் ஒவ்வொரு அணியும் பெறும் வெற்றிக்கு (ஒரு போட்டி) 34 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 30 லட்சம் வழங்கப்படும். ஐந்து மற்றும் ஆறாவது இடத்தை பிடிக்கும் அணிகளுக்கு 3.5 லட்சம் டாலர்கள் இந்திய மதிப்பில் ரூ. 3 கோடி வழங்கப்படுகிறது. ஏழு மற்றும் எட்டாவது இடம் பிடிக்கும் அணிகளுக்கு தலா 1.4 லட்சம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1.2 கோடி வழங்கப்படும்.
2025 சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. இந்த தொடரில் இந்திய அணி தனது போட்டிகளை துபாயில் விளையாட இருக்கிறது. வருகிற 19-ம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசம் அணியை எதிர்கொண்டு விளையாடுகிறது. இந்தப் போட்டி வருகிற 20-ம் தேதி நடைபெற இருக்கிறது.
- சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் எட்டு அணிகள் இடம்பெற்றுள்ளன.
- எட்டு அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்-இன் (ஐசிசி) சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறுகிறது. இதில் இந்திய அணி விளையாடும் போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடரில் எட்டு அணிகள் இரு பிரிவுகளின் கீழ் விளையாடுகின்றன. க்ரூப் ஏ பிரிவில் இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. க்ரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த தொடரில் விளையாடும் அணிகள் தங்களது வீரர்களின் பட்டியலை ஏற்கனவே ஐ.சி.சி.-யிடம் சமர்பித்து இருந்தன. இந்த நிலையில், அணிகள் தங்களது வீரர்கள் அடங்கிய இறுதிப் பட்டியலை சமீபத்தில் தான் சமர்பித்தன. அந்த வகையில், சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விளையாடும் எட்டு அணிகளின் வீரர்கள் இறுதிப் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.
இந்தியா:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் (துணை கேப்டன்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் அய்யர், கே.எல்.ராகுல் (விக்கெட் கீப்பர்), ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்த்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, வருண் சக்கரவர்த்தி.
நியூசிலாந்து:
மிட்செல் சாண்ட்னெர் (கேப்டன்), மார்க் சாம்ப்மென், கேன் வில்லியம்சன், வில் யங், டெவான் கான்வே (விக்கெட் கீப்பர்), டாம் லாதம் (விக்கெட் கீப்பர்), டேரில் மிட்செல், ரச்சின் ரவீந்திரா, மைக்கேல் பிரேஸ்வெல், க்ளென் பிலிப்ஸ், நாதன் ஸ்மித், வில்லியம் ஓ ரூர்க், லாக்கி ஃபெர்குசன், பென் சீயர்ஸ், மேட் ஹென்றி.
பாகிஸ்தான்:
முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர், கேப்டன்), பாபர் அசாம், ஃபகார் ஜமான், தையப் தாஹிர், குஷ்தில் ஷா, உஸ்மான் கான் (விக்கெட் கீப்பர்), கம்ரான் குலாம், சவூத் ஷகீல், சல்மான் ஆஹா, பஹீம் அஷ்ரப், அப்ரார் அகமது, ஹாரிஸ் ரவூப், முகமது ஹஸ்னைன், நசீம் ஷா, ஷாகீன் அஃப்ரிடி.
வங்கதேசம்:
நஜ்முல் ஹூசைன் ஷாண்டோ (கேப்டன்), மெஹதி ஹசன் மிராஸ் (துணை கேப்டன்), சவுமியா சர்கா, தவ்ஹித் ஹ்ரிடோய், தன்சித் ஹசன், மஹ்மதுல்லா, முஷ்ஃபிகுர் ரஹீம் (விக்கெட் கீப்பர்), ஜேக்கர் அலி (விக்கெட் கீப்பர்), பர்வேஸ் ஹொசைன் எமோன் (விக்கெட் கீப்பர்), ரிஷாத் ஹொசைன், முஸ்தாஃபிசுர் ரஹ்மான், தஸ்கின் அகமது, நஹித் ராணா, நசும் அகமது, தன்சிம் ஹசன் சகிப்.
ஆஸ்திரேலியா:
ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஜேக் பிரேசர்-மெக்கர்க், டிராவிஸ் ஹெட், மார்னஸ் லபுஷேன், மேத்யூ ஷார்ட், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), ஜோஷ் இங்கிலிஸ் (விக்கெட் கீப்பர்), ஆரோன் ஹார்டி, க்ளென் மேஸ்வெல், சீன் அபோட், பென் துவார்ஷியஸ், நாதன் எல்லீஸ், ஸ்பென்சர் ஜான்சன், தன்வீர் சங்கா, ஆடம் ஜாம்பா.
இங்கிலாந்து:
ஜாஸ் பட்லர் (கேப்டன்), ஹாரி புரூக், பென் டக்கட், ஜோ ரூட், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), பில் சால்ட் (விக்கெட் கீப்பர்), லியாம் லிவிங்ஸ்டன், பிரைடன் கார்ஸ், ஜேமி ஓவர்டன், கஸ் அட்கின்சன், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷித், ஷகிப் மஹ்மூத், மார்க் வுட்.
தென் ஆப்பிரிக்கா:
தெம்பா பவுமா (கேப்டன்), எய்டன் மார்க்ரம், டோனி டி ஜோர்ஜி, ராஸி வான் டெர் டுசென், டேவிட் மில்லர், ரியான் ரிக்கெல்டன் (விக்கெட் கீப்பர்), ஹென்றிச் க்ளாசென் (விக்கெட் கீப்பர்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (விக்கெட் கீப்பர்), மார்கோ யான்சென், வியான் முல்டர், கார்பின் போஷ், ககிசோ ரபாடா, கேசவ் மஹாராஜ், தப்ரைஸ் ஷம்சி, லுங்கி நிகிடி.
ஆப்கானிஸ்தான்:
ஹஸ்மத்துல்லா ஷாகிதி (கேப்டன்), ரஹ்மத் ஷா, செடிகுல்லா அடல், இப்ராகிம் ஜட்ரான், ரஹ்மனுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), இக்ராம் அலிகில் (விக்கெட் கீப்பர்), குலப்தீன் நயிப், அஸ்மத்துல்லா ஓமர்சாய், முகமது நபி, ரஷித் கான், நங்கெய்லியா கரோட்டி, பசல்ஹக் ஃபரூக்கி, பரீத் அகமது மாலிக், நூர் அகமது, நவீத் ஜத்ரான்.
- முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாடுகிறது.
- இந்திய அணி போட்டிகள் துபாயில் நடைபெறுகிறது.
8 அணிகள் மோதும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை (பிப்ரவரி 19) தொடங்குகிறது. இந்த தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொண்டு விளையாடுகிறது. இந்தப் போட்டி வருகிற 20-ம் தேதி நடைபெறுகிறது.
இந்த நிலையில், இந்திய அணி வீரர்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான ஜெர்சி அணிந்தபடி எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. புகைப்படங்களின் படி இந்திய அணி ஜெர்சியில் "சாம்பியன்ஸ் டிராபி 2025 பாகிஸ்தான்" என்று அச்சிடப்பட்டு இருக்கிறது. இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
முன்னதாக வெளியான தகவல்களின் படி இந்திய அணி ஜெர்சியில் பாகிஸ்தான் பெயர் இடம்பெறாது என கூறப்பட்டது. எனினும், தற்போது பாகிஸ்தான் பெயர் இடம்பெற்றுள்ளதை அடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. சீருடை சார்ந்த ஐ.சி.சி. விதிகளை ஏற்றுக் கொண்டுள்ளதை உணர்த்தியுள்ளது.
இது குறித்து பேட்டியளித்த பி.சி.சி.ஐ. செயலாளர் தேவ்ஜித் சைகா, "சாம்பியன்ஸ் டிராபியில் சீருடை சார்ந்து ஐ.சி.சி. பிறப்பிக்கும் அனைத்து விதிகளையும் பி.சி.சி.ஐ. பின்பற்றும்," என்று தெரிவித்தார்.
ஐ.சி.சி.-யின் சீருடை விதிகளின் படி ஐ.சி.சி. நிகழ்வில் கலந்து கொள்ளும் ஒவ்வொரு அணியும் அந்த தொடரை நடத்தும் நாட்டின் பெயரை தங்களது ஜெர்சியில் இடம்பெற செய்ய வேண்டும். இது தொடர்பான போட்டிகள் தொடரை நடத்தும் நாட்டை தவிர்த்து பொதுவான இடத்தில் நடந்தாலும், இந்த விதிமுறையை பின்பற்றுவது அவசியம் ஆகும்.
முன்னதாக வெளியான தகவல்களின் படி இந்திய கேப்டன் ரோகித் சர்மா சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான கேப்டன்கள் போட்டோஷூட்டில் கலந்து கொள்ள பாகிஸ்தான் செல்ல மாட்டார் என்று கூறப்பட்டது. எனினும், இதர காரணங்களால் அதிகாரப்பூர்வ போட்டோஷூட் அல்லது கேப்டன்கள் போட்டோஷூட் நடத்தப்படாது என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.
- இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
- அனைத்து போட்டிகளும் பகல் இரவு ஆட்டங்களாக நடைபெறுகின்றன.
9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்க இருக்கிறது. நாளை (பிப்ரவரி 19) கராச்சியில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த முறை சாம்பியன்ஸ் கோப்பை தொடரை பாகிஸ்தான் நடத்துகிறது. நாளை தொடங்கும் தொடரின் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி கராச்சியில் நடைபெறுகிறது. இந்திய அணி தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி நாளை மறுநாள் (பிப்ரவரி 20) நடைபெறுகிறது.
சாம்பியன்ஸ் கோப்பை தொடர் பங்கேற்கும் அணிகள்:
குரூப் ஏ: பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து மற்றும் வங்கதேசம்
குரூப் பி: தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்து
முழு அட்டவணை:
பிப்ரவரி 19: பாகிஸ்தான் v நியூசிலாந்து, கராச்சி (பாக்.)
பிப்ரவரி 20: வங்கதேசம் v இந்தியா, துபாய்
பிப்ரவரி 21: ஆப்கானிஸ்தான் v தென் ஆப்பிரிக்கா, கராச்சி (பாக்.)
பிப்ரவரி 22: ஆஸ்திரேலியா v இங்கிலாந்து, லாகூர் (பாக்.)
பிப்ரவரி 23: பாகிஸ்தான் v இந்தியா, துபாய்
பிப்ரவரி 24: வங்கதேசம் v நியூசிலாந்து, ராவல்பிண்டி (பாக்.)
பிப்ரவரி 25: ஆஸ்திரேலியா v தென் ஆப்பிரிக்கா, ராவல்பிண்டி (பாக்.)
பிப்ரவரி 26: ஆப்கானிஸ்தான் v இங்கிலாந்து, லாகூர் (பாக்.)
பிப்ரவரி 27: பாகிஸ்தான் v வங்கதேசம், ராவல்பிண்டி (பாக்.)
பிப்ரவரி 28: ஆப்கானிஸ்தான் v ஆஸ்திரேலியா, லாகூர் (பாக்.)
மார்ச் 1: தென் ஆப்பிரிக்கா v இங்கிலாந்து, கராச்சி (பாக்.)
மார்ச் 2: நியூசிலாந்து v இந்தியா, துபாய்
மார்ச் 4: அரையிறுதி 1, துபாய்
மார்ச் 5: அரையிறுதி 2, லாகூர், பாகிஸ்தான்
மார்ச் 9: லாகூர் (இந்தியா தகுதிபெற்றால் துபாயில் நடக்கும்)
மார்ச் 10: ரிசர்வ் நாள்
போட்டி நேரம்:
சாம்பியன்ஸ் டிராபி 2025-இன் போட்டிகள் அனைத்தும் பகல் இரவு ஆட்டங்களாக நடைபெறும். போட்டிக்கான டாஸ் இந்திய நேரப்படி மதியம் 2.00 மணிக்கு போடப்படும். போட்டி மதியம் 2.30 மணிக்கு தொடங்கும்.
தொலைகாட்சி மற்றும் வலைதளங்களில் பார்ப்பது எப்படி?
சாம்பியன்ஸ் டிராபி 2025 போட்டிகள் அனைத்தையும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் சேனல்களில் பார்க்கலாம். இதுதவிர ஆன்லைனில் ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் நேரலையில் கண்டுகளிக்கலாம்.