என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உருவம்"

    • பெண் ஒருவர் கதறி அழும் அலறல் சத்தம் கேட்டுள்ளது.
    • ஒரு இளம்பெண் உருவம் 'வா' என சைகை காண்பித்து அவரை அழைத்துள்ளது.

    ஆரணி:

    ஆரணி பாளையம் டவுன் பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (வயது 35).

    இவர், சொந்த வேலை காரணமாக தச்சூருக்கு சென்ற பின்னர், அங்கு வேலை முடிந்ததும், தனது பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 12 மணிக்கு வடுகசாத்து ஏரிக்கரை அருகே வந்தபோது திடீரென கொலுசு சத்தம் கேட்டுள்ளது.

    இதனால் அதிர்ச்சியடைந்த வாலிபர் பைக்கை நிறுத்தி என்ஜினை அணைத்தார்.

    இந்நிலையில், பெண் ஒருவர் கதறி அழும் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதனால், மேலும் பதட்டமான பாலாஜி, என்ஜினை 'ஆன்' செய்து முகப்பு விளக்கை ஒளிரவிட்டார்.


    அப்போது, 50 அடி தொலைவில் நின்றிருந்த ஒரு இளம்பெண் உருவம் 'வா' என சைகை காண்பித்து அவரை அழைத்துள்ளது.

    இதனால் பயந்துபோன அவர், பைக்கை வேகமாக திருப்பி வந்த வழியே திரும்பினார்.

    பின்னர், சில அடி துாரம் சென்றதும் மீண்டும் திரும்பி பார்த்தபோது, அந்த பெண் உருவம் வானில் மாயமாகி விட்டதாக கூறப்படுகிறது.

    இந்த காட்சிகளை, பாலாஜி தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து, வாட்ஸ்ஆப், உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.

    ×