search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சோமேட்டோ"

    • உணவு டெலிவரி நிறுவனங்கள் பல புதிய முயற்சிகளை இந்தியாவில் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
    • ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களில் மதுபானங்கள் ஹோம் டெலிவரிக்கு அனுமதி உள்ளது.

    புதுடெல்லி:

    இந்தியா மட்டுமின்றி உலக அளவில் ஆன்லைன் புட் ஆர்டர் மற்றும் டெலிவரி என்பது பொதுமக்கள் வாழ்க்கையின் ஓர் அங்கமாக மாறியுள்ளது. இந்தத் துறையில் இருக்கும் பல்வேறு நிறுவனங்கள் தொடர்ந்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துவருகின்றன.

    இந்த நிறுவனங்கள் உணவுக் கட்டணம் போக தங்களின் சேவைக்கான கட்டணத்தையும் வாடிக்கையாளர்களிடமிருந்து வசூலித்துக் கொள்கின்றன.

    மேலும், உணவு டெலிவரி நிறுவனங்கள் தங்களது முதலீட்டாளர்களுக்கு அதிகப்படியான லாபத்தையும், வருமானத்தையும் காட்ட வேண்டும் என்ற இலக்கை வைத்து செயல்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு புதிய முயற்சிகளை இந்தியாவில் தற்போது இந்நிறுவனங்கள் நடைமுறைப்படுத்தி வருகின்றன.

    இதையடுத்து பீர், ஒயின் உள்ளிட்ட ஆல்கஹால் குறைவாக சேர்க்கப்பட்ட மதுபான வகைகளை ஆன்லைன் ஆர்டர் மூலம் ஹோம் டெலிவரி செய்ய சோமேட்டோ, ஸ்விக்கி மற்றும் பிக் பாஸ்கட் உள்ளிட்ட நிறுவனங்கள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    ஏற்கனவே ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களில் மதுபானங்கள் ஹோம் டெலிவரிக்கு அனுமதி உள்ளது.

    இந்நிலையில், கர்நாடகா, அரியானா, தமிழ்நாடு, பஞ்சாப், கோவா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிள் அனுமதி பெற்று மதுபானங்கள் ஹோம் டெலிவரியை நடைமுறைப்படுத்த நிறுவனங்கள் திட்டமிட்டு வருகின்றன.

    ×