search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயிற்சி நிறுத்திவைப்பு"

    • பூஜா கேத்கர் மீது புகார் தெரிவித்ததை அடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
    • விசாரணை கமிட்டி முன் கருத்துகளை எடுத்து வைப்பேன் என பூஜா கேத்கர் தெரிவித்தார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் பயிற்சி பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகப் பணியாற்றிய பூஜா கேத்கர் தனது சொந்த ஆடி காரில் சைரன் மற்றும் மகாராஷ்டிர அரசு என ஸ்டிக்கர் ஒட்டிச் சென்றுள்ளார்.

    பயிற்சி அதிகாரிகளுக்கு இல்லாத வசதியை அவர் அலுவலகத்தில் கேட்டுள்ளார். இதுகுறித்து தலைமை செயலாளருக்கு புனே ஆட்சியர் சுகாஸ் திவாசே புகார் தெரிவித்ததை அடுத்து அவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

    பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர், தனக்கு பார்வை மற்றும் மன இறுக்க குறைபாடு உள்ளதாக தெரிவித்து மாற்றுத்தினாளிகளுக்கான பிரிவில் (பி.டபிள்யூ.பி.டி) இவர் வேலைக்கு சேர்ந்தார் என குற்றம்சாட்டப்பட்டது. அவரது தந்தையின் சொத்து மதிப்பு, அவரது தாய் துப்பாக்கியால் மிரட்டினது என தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்ததால், இதுகுறித்து விசாரணை நடத்த கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

    விசாரணையில், அவர் செய்தது தவறு என கண்டறியப்பட்டால் அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. அவர் பயன்படுத்தி வந்த கார் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே, விசாரணை கமிட்டி முன் கருத்துகளை எடுத்து வைப்பேன் என பூஜா கேத்கர் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், பூஜா கேத்கரின் பயிற்சியை நிறுத்தி வைத்த மகாராஷ்டிர அரசு, விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    ×