என் மலர்
நீங்கள் தேடியது "ஒன்பிளஸ் நார்டு 4"
- ஆறு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட் வழங்குவதாக ஒன்பிளஸ் அறிவித்துள்ளது.
- இந்த ஸ்மார்ட்போன் 5500 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.
ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய நார்டு சீரிஸ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் நார்டு 4 என அழைக்கப்படுகிறது.
அம்சங்களை பொருத்தவரை ஒன்பிளஸ் நார்டு 4 மாடலில் 6.74 இன்ச் curved AMOLED ஸ்கிரீன், 120Hz வேரியபில் ரிப்ரெஷ் ரேட் மற்றும் ப்ரோ XDR வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 7 பிளஸ் ஜென் 3 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
இத்துடன் ஆண்ட்ராய்டு 14 சார்ந்த ஆக்சிஜன் ஓஎஸ் 14 உள்ளது. இந்த ஸ்மார்ட்போனிற்கு 4 ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்களும், ஆறு ஆண்டுகள் செக்யூரிட்டி அப்டேட்களும் வழங்குவதாக ஒன்பிளஸ் அறிவித்து இருக்கிறது.
புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 16MP செல்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் இடதுபுறம் அலெர்ட் ஸ்லைடர் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5500 எம்ஏஹெச் பேட்டரி, 100 வாட் சூப்பர்வூக் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது. இது ஸ்மார்ட்போனை 28 நிமிடங்களில் முழு சார்ஜ் ஏற்றிவிடும்.
ஒன்பிளஸ் நார்டு 4 ஸ்மார்ட்போன் மெர்குரியல் சில்வர், அப்சிடியன் மிட்நைட் மற்றும் ஓயாசிஸ் கிரீன் என மூன்று நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 32 ஆயிரத்து 999 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 35 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.