search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டீன் ஏஜ் பருவம்"

    • குழந்தை பருவத்தில் தாயுடனான பந்தம் உணர்வுப்பூர்வமாக விளங்கும்.
    • டீன் ஏஜ் பருவத்தில்தான் தாயிடம் மகள் மீதான அக்கறையும் கூடும்.

    எல்லா பெண்களும் தங்கள் முதல் ரோல் மாடலாக கருதும் நபர் தாயாகத்தான் இருப்பார். ஏனெனில் சிறு வயது முதலே ஒவ்வொரு விஷயத்தையும் தாயை பார்த்தே செய்ய தொடங்குவார்கள்.

    எந்தவொரு புது முயற்சியை மேற்கொள்வதாக இருந்தாலும் அதில் தாயின் சாயல் வெளிப்படும். அந்த அளவுக்கு அவர்களின் ஒவ்வொரு செயல்பாடுகளும் தாயின் நடவடிக்கைகளை சார்ந்தே அமையும்.


    குழந்தை பருவத்தில் தாயுடனான பந்தம் உணர்வுப்பூர்வமாக விளங்கும். ஆனால் டீன் ஏஜ் வயதை எட்டும்போது அந்த உறவு பந்தத்தில் சற்று தடுமாற்றம் ஏற்படக்கூடும்.

    தாய் சொல்லும் சில விஷயங்களை கேட்கும் மன நிலையில் மகள் இருக்க மாட்டார். அதனால் மகள் தன்னிச்சையாக செயல்படுவது போன்ற உணர்வு தாயிடம் தோன்றும்.

    மற்ற பருவத்தை விட டீன் ஏஜ் பருவத்தில்தான் தாயிடம் மகள் மீதான அக்கறையும் கூடும். அதுவே மகளுக்கு எதிர்மறை எண்ணங்களை தோற்றுவித்துவிடும்.

    தன்னுடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப மகள் நடந்து கொள்ள வேண்டும் என்று தாயார் விரும்புவார். அந்த எதிர்பார்ப்புகள் நிறைவேறாவிட்டாலோ, எதிர்பார்த்தபடி நடந்து கொள்ளாவிட்டாலோ மகள் மீது கடும் கோபத்தை வெளிப்படுத்துவார்கள்.

    மகளை தங்களுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு முயற்சி செய்வார்கள். அவர்களது நோக்கம் மகளை நல்வழிப்படுத்துவதாகவே இருக்கும். ஆனால் அதை மகள் புரிந்துகொள்ளாத பட்சத்தில் தேவையற்ற பிரச்சினைகள் இருவருக்கும் இடையே எட்டிப்பார்க்கும். அது தாய்-மகள் உறவில் விரிசலை ஏற்படுத்தும். அதனை தவிர்ப்பதற்கு செய்ய வேண்டிய முக்கியமான விஷயங்கள் இவை...


    * டீன் ஏஜ் பருவத்தில் அழகுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஆர்வம் எல்லா பெண்களிடமுமே மேலோங்கும். ஆடை, அணிகலன் தேர்வுக்கு ரொம்பவே நேரம் செலவளிப்பார்கள். தங்களை மெருகேற்றுவதற்கான அத்தனை முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். பிடித்தமான அழகு சாதனப்பொருட்களையும் அதிகம் பயன்படுத்த ஆர்வம் காட்டுவார்கள்.

    அதனை கண்டிக்கும் மனோபாவமே பெரும்பாலான தாய்மார்களிடம் இருக்கிறது. அதைவிடுத்து இந்த அழகு சாதனப் பொருட்களையெல்லாம் தன்னிச்சையாக உபயோகிக்கக்கூடாது. சரும நல நிபுணர்களிடம் ஆலோசித்து பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க வழிகாட்ட வேண்டும்.

    அழகுக்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதை கண்டிக்காமல் மகள் மனம் நோகாதவாறு எடுத்துக்கூற வேண்டும். பணத்தை வீண் விரயம் செய்வதாக கடிந்து கொள்ளவும் கூடாது. எவையெல்லாம் அழகை மெருகேற்ற பொருத்தமாக இருக்கும் என்பதை பக்குவமாக எடுத்துக்கூற வேண்டும்.

    * மகளின் செயல்பாடுகளில் சில தவறுகள் இருக்கலாம். அதனை பக்குவமாக புரியவைக்க வேண்டுமே தவிர, குடும்பத்தினர், மற்றவர்கள் முன்னிலையிலோ, பொது வெளியிலோ திட்டக்கூடாது.

    அப்படி பிறர் முன்பு திட்டுவது மகளுக்கு அவமானத்தையும், தாழ்வு மனப்பான்மையும் உண்டாகிவிடும். தாய்-மகள் உறவில் விரிசல் ஏற்படவும் காரணமாகிவிடும்.

    * மகளின் படிப்பு விஷயத்திலும் கடுமை கொள்ளக்கூடாது. மற்றவர்களுடன் ஒப்பிடுவதோ, மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வதோ கூடாது. 'உன் மகளுடன் ஒப்பிடும்போது என் மகள் படிப்பில் சுமார்தான்' என்ற ரீதியில் பேசக்கூடாது.

    மகளின் குறைகளை அவரிடமே நேரில் சுட்டிக்காட்டி திருத்துவதற்கு முயற்சி செய்ய வேண்டுமே தவிர கடுமையாக நடந்து கொள்ளக்கூடாது.

    * அன்பு, தியாகம், பணிவு, இரக்கம், உதவும் மனப்பான்மை உள்ளிட்ட அனைத்து குணாதிசயங்களையும் கொண்டவராக மகளை வளர்த்தெடுக்கும் பொறுப்பு தாய்க்கு உண்டு.

    அதேவேளையில் சூழ்நிலைக்கு ஏற்ப குணாதிசயங்களை வெளிப்படுத்தும் பக்குவம் கொண்டவராகவும் மகளை வளர்த்தெடுக்க வேண்டும்.


    * மகளின் திருமணம் விமரிசையாக நடைபெற வேண்டும் என்ற விருப்பம் ஒவ்வொரு தாய்மார்களிடமும் இருக்கும். அதே எதிர்பார்ப்பும், ஆர்வமும் மகளிடமும் வெளிப்படும் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். மகளின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கு முயற்சிக்க வேண்டுமே தவிர முட்டுக்கட்டை போடக்கூடாது.

    நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயங்களை பக்குவமாக விளக்கி புரிய வைக்க வேண்டும். ஒருவேளை மகளுக்கு திருமணத்தில் நாட்டம் இல்லை என்றால், அதற்கான சூழல் உருவாகும் வரை அமைதி காக்க வேண்டும்.

    • பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது வெட்கம்.
    • வெட்கப்படுவதற்கு இணையாக கோபப்படும் போதும் கன்னங்கள் சிவக்கின்றன.

    பெண்களின் அழகுக்கு அழகு சேர்ப்பது வெட்கம். குறிப்பாக திரைப்படங்களிலும், கதை புத்தகங்களிலும் வெட்கப்படும்போது முகம் சிவக்கும் அழகை வர்ணிக்காதவர்களே இல்லை. அதேவேளையில், வெட்கப்படுவதற்கு இணையாக கோபப்படும் போதும் கன்னங்கள் சிவக்கின்றன.

    குறிப்பாக டீன் ஏஜ் பருவம் என கூறப்படும் இளம்பெண்களுக்கு வெட்கத்தில் கன்னங்கள் சிவப்பாக மாறும். இது அவர்களின் அழகை மெருகூட்டுவதாக அமைந்துள்ளது.

    சிலருக்கு சிலரை பார்த்தால் இந்த வெட்கம் ஏற்படுகிறது. இந்த வெட்கத்தின் போது முகம் சிவப்பு நிறத்தை அடைகிறது. அது ஏன் அப்படி சிவப்பு நிறத்தை அடைகிறது என்ற ஆராய்ச்சியில் நெதர்லாந்தை சேர்ந்த அம்ஹர் டாம் பல்க லைக்கழகத்தில் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

    40 டீன் ஏஜ் பருவ இளம் பெண்களை ஆய்விற்காக எடுத்துக் கொண்டனர். சினிமா பாடல்களை ஒளிபரப்பி அதனோடு இளம்பெண்களை பாடுமாறு கூறினார்கள். அவ்வாறு பாடும் போது அவர்களின் கன்னங்கள் வெப்பம் மற்றும் மூளையில் ஏற்பட்ட சந்தோசத்தால் சிவப்பது கண்டறியப்பட்டது. மேலும் பெண்கள் தங்களுக்குள் பாடல்களை பாடும் போது கன்னங்கள் தானாகவே சிவந்ததை கண்டனர்.

    பாடல் வரிகளை கேட்டு வெட்கத்தில் பெண்களுக்கு கன்னம் சிவப்பதையும் கண்டனர். கூச்சத்தின் முக்கிய பங்கான வெட்கத்தை கண்டு ஆராய்ச்சியாளர்கள் வியந்தனர்.

    இந்த ஆராய்ச்சியில் வெட்கத்தில் கன்னம் சிவப்பதற்கான முழுமையான காரணத்தை அவர்கள் வெளியிடவில்லை.

    ×