search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோர்டீஸே"

    • பின்னணியில் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டடிருந்தார்.
    • தன்னை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவமதித்ததாக மெலோனி தொடர்ந்த வழக்கில் ராபர்ட்டோ சேவியானோ என்ற மற்றொரு பத்திரிகையாளருக்கு 1000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டது.

    இத்தாலி நாட்டின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் உயரம் குறித்து கிண்டலடித்த அந்நாட்டு பெண் பத்திரிகையாளருக்கு நீதிமன்றம் 5000 யூரோக்கள் அபராதம் விதித்துள்ளது. இத்தாலியில் சுயாதீன பத்திரிகையாளராக செயல்பட்டு வரும் கோர்டீஸே[Cortese] கடந்த 2021 இல் தனது எக்ஸ் [ட்விட்டர்] பக்கத்தில் தற்போதைய பிரதமர் மெலோனியின் பின்னணியில் இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு மெலோனியின்  உயரம் குறித்து கிண்டலடிக்கும் வகையில் பதிவிட்டடிருந்தார்.

     

    'நீ என்னை பயமுறுத்த முடியாது,மெலோனி.. நீ வெறும் 1.2 மீட்டர் [4 அடி] உயரம்தான். என்னால் உன்னை பார்க்க கூட முடியவில்லை' என்றும் கோர்ட்டிஸே எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருந்தார். எக்ஸ் தளத்தில் மட்டுமின்றி பல்வேறு சமூக ஊடகங்களிலும், உள்ளூர் ஊடகங்களிலும் அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.   இந்த கருத்து தொடர்பாக இருவருக்குமிடையில் சமூக  வலைதளத்தில் வாக்குவாதம் முற்றிய நிலையில்  மெலோனி கோர்டீஸே மீது நீதிமன்றத்தில் உருவ கேலி வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வந்த மிலான் நீதிமன்றம் தற்போது கோர்டீஸே -கு 5000யூரோக்கள் [ ரூ.4.5 லட்சம்] அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

     

    2021 இல் மெலோனியின் தீவிர இடதுசாரி சகோதரர்கள் கட்சி எதிர்க்கட்சியாக செயல்பட்டுக் கொண்டிருந்தது. அதன்பின்னர் 2022 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த அக்கட்சி சார்பில் மெலோனி இத்தாலி பிரதமர் ஆனார். தற்போது இந்த தீர்ப்பு குறித்து பேசியுள்ள கோர்டீஸே,'கருத்து சுதந்திரம் மற்றும் ஊடக சுதந்திரத்துக்கு எதிராக தீவிர பிரச்னையை இத்தாலி அரசு கொண்டுள்ளது. இது சுயாதீன பத்திரிகையாளர்களுக்கு கடுமையான காலம். வரும் காலத்தில் சிறந்த நாட்களுக்காக நாம் காத்திருப்போம். நாங்கள் மனம் தளரப் போவதில்லை' என்று தெரிவித்துள்ளார். 

    முன்னதாக ராபர்ட்டோ சேவியானோ என்ற பத்திரிகையாளர் தன்னை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் அவமதித்ததாக மெலோனி தொடர்ந்த வழக்கில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரோம் நீதிமன்றம் ராபர்ட்டோவுக்கு 1000 யூரோக்கள் அபராதம் விதித்தது குறிப்பிடத்தக்கது.

    ×