search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "NTA நீட்"

    • அரியானா மாநிலத்தில் 6 பேர் 720 மதிப்பெண் பெற்றிருந்தனர்.
    • அந்த மையத்தில் அதிகபட்ச மதிப்பெண் 682 என இன்று வெளியிட்ட முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    நீட் தேர்வு முடிவில் அரியானாவில் உள்ள ஹர்தயாள் பப்ளிக் பள்ளியில் தேர்வு எழுதிய 494 மாணவர்களில் 6 பேர் 720-க்கு 720 மதிப்பெண்களும், இரண்டு பேர் 718 மற்றும் 719 மதிப்பெண்களும் பெற்றனர். நீட் தேர்வில் 719 மதிப்பெண்கள் பெற முடியாது. மேலும் 6 பேர் 720 மதிப்பெண் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    அதன்பின் கருணை மதிப்பெண் 1563 பேருக்கு வழங்கப்பட்டது என தேசிய தேர்வு முகமை தெரிவித்தது. இதனால் நீட் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக மாணவர்கள் குற்றம்சாட்டினர்.

    இதனால் பல மாணவர்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது நீதிமன்றம் கருணை மதிப்பெண்ணை ரத்து செய்தது. விருப்பம் உள்ள மாணவர்கள் மீண்டும் தேர்வு எழுதலாம் எனத் தெரிவித்தது.

    இந்த நிலையில் நீட் தேர்வு முடிவுகளை மையம் வாரியாக வெளியிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தேசிய தேர்வு முகமை இன்று முடிவுகளை வெளியிட்டது.

    இதில் ஏற்கனவே 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்ற ஹர்தயாள் பள்ளிக் பள்ளியில் தேர்வு எழுதிய 494 மாணவர்களில் ஒரேயொரு மாணவர்தான் 682 மதிப்பெண் பெற்றுள்ளார். மேலும, 13 மாணவர்கள் 600 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.

    உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 800 மாணவர்கள் மீண்டும் நீட் தேர்வை எழுதினார்கள். முழு மதிப்பெண் பெற்ற அவர்கள் மீண்டும் தேர்ச்சி பெற்றார்களா? என்பது தெரியவில்லை. அவர்களுக்கு எவ்வளவு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டது என்பதும் தெரியவில்லை.

    பீகார் மாநிலம் ஹஜாரிபாக்கில் உள்ள ஒயாசிஸ் பொது பள்ளியில் 701 பேர் தேர்வு எழுதினர். இதில் அதிகபட்ச மதிப்பெண் 700-க்கு குறைவாகும். ஏழு மாணவர்கள் 650-க்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 23 மாணவர்கள் 600-க்கு அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 46 பேர் 550-க்கு அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். இந்த பள்ளியின் முதல்வர் பேப்பர் லீக் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

    குஜராத்தின் கோத்ராவில் உள்ள ஜலராம் சர்வதேச பள்ளியில் 1,838 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதிலும் 700-க்கு அதிகமான மதிப்பெண் யாரும் பெறவில்லை. ஐந்து மாணவர்கள் 650 மதிப்பெண்ணுக்கு அதிகமாக பெற்றுள்ளனர். 14 மாணவர்கள் 600-க்கு அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். 31 மாணவர்கள் 55-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    ராஜஸ்தானில் உள்ள சிகர் மாவட்டத்தில் உள்ள மையங்களில் தேர்வு எழுதிய மாநிலங்களில் 149 மாணவர்கள் 700-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 2037 மாணவர்கள் 650-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். மொத்தமாக 4297 மாணவர்கள் 600-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    தமிழகத்தில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பாவை பொறியியல் கல்லூரியில் 1017 மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் இரண்டு மாணவர்கள் 700-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர். 52 மாணவர்கள் 650-க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    ×