என் மலர்
நீங்கள் தேடியது "பிரீபெயிட் ரீசார்ஜ்"
- மூன்று புது ரீசார்ஜ்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
- இரு ரீசார்ஜ்கள் 84 நாட்கள் வேலிடிட்டி கொண்டுள்ளன.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் சமீபத்தில் தான் தனது ரீசார்ஜ்களின் விலையை உயர்த்தியது. விலை உயர்வு காரணமாக பாதிக்கப்பட்ட பயனர்களில் பலர் வேறு நெட்வொர்க்குகளுக்கு மாறி வருகின்றனர். இந்த நிலையில், ஜியோ நிறுவனம் புதிய பிரீபெயிட் ரீசார்ஜ்களை அறிவித்து இருக்கிறது.
புதிய ரீசார்ஜ்கள் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், சோனிலிவ், ஜீ5 போன்ற ஓடிடி தளங்களுக்கான சந்தா வழங்குகிறது. இத்துடன் ஜியோ சாவன் ப்ரோ சந்தாவும் வழங்கப்படுகிறது. ஜியோவின் புதிய ரீசார்ஜ்களின் விலை ரூ. 329, ரூ. 949 மற்றும் ரூ. 1049 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
பலன்களை பொருத்தவரை ஜியோ ரூ. 329 சலுகையில் தினமும் 1.5 ஜிபி 4ஜி+டேட்டா, ஜியோ சாவன் ப்ரோ சந்தா உள்ளிட்ட பலன்கள் 28 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ஜியோ ரூ. 949 சலுகை தினமும் 2 ஜிபி 4ஜி+, அன்லிமிட்டெட் 5ஜி+ டேட்டா, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் சந்தா உள்ளிட்டவை 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது.
ஜியோ ரூ. 1049 சலுகையில் தினமும் 2ஜிபி 4ஜி+ மற்றும் அன்லிமிட்டெட் 5ஜி+ டேட்டா, சோனிலிவ், ஜீ5 சந்தா உள்ளிட்ட பலன்கள் 84 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ரீசார்ஜ்களில் வழங்கப்படும் இலவச டேட்டா தீர்ந்து போகும் பட்சத்தில் டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்பட்டு விடும்.