என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நீட்டா அம்பானி"
- முகேஷ் அம்பானி சுவிட்சர்லாந்துக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
- முகேஷ் அம்பானி, நீட்டா அம்பானி தம்பதியினர் வாக்கிங் சென்றனர்.
முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீட்டா அம்பானி சுவிட்சர்லாந்தில் வாக்கிங் சென்ற சம்பவம் அரங்கேறியது. இது தொடர்பான வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.
வீடியோவின் படி நீட்டா அம்பானி சிவப்பு நிற ஆடையிலும், முகேஷ் அம்பானி ஃபார்மல் சூட் அணிந்து காணப்படுகின்றனர். பாதுகாப்பு குழுவினர் யாரும் இன்றி இருவர் மட்டும் தெருவில் நடந்து செல்வதை வீடியோவில் பார்க்க முடிகிறது.
அம்பானி குடும்பத்தினர் சுவிட்சர்லாந்தில் விடுமுறையை கொண்டாடும் சம்பவங்கள் ஏற்கனவே அரங்கேறியுள்ளன. மேலும் விடுமுறை காலத்தில் அவர்கள் அங்குள்ள ஒபுலன்ட் பர்கென்ஸ்டாக் ரிசார்டில் தங்குவர். சுவிட்சர்லாந்தின் விலை உயர்ந்த தங்கும் விடுதி இது ஆகும்.
இந்த தங்கும் விடுதியில் ஒரு இரவுக்கு அதிகபட்சம் ரூ. 62 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதில் நான்கு ஓட்டல்கள், இரண்டு ஸ்பாக்கள், பத்து உணவகங்கள் மற்றும் பொழுதுபோக்கு இடங்கள் உள்ளன.
- சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் சேர்ந்த முதல் இந்திய பெண் நீட்டா அம்பானி.
- பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளை தொடங்கவுள்ளது.
பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் நாளை முதல் தொடங்க உள்ள நிலையில், சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் இந்திய உறுப்பினராக ரிலைன்ஸ் அறக்கட்டளை நிறுவனர் நீட்டா அம்பானி 100% வாக்குகள் பெற்று ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக பேசிய நீட்டா அம்பானி, " சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு நான் பெருமைப்படுகிறேன். என் மீது நம்பிக்கை வைத்து தேர்ந்தெடுத்த அனைவருக்கும் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு ரியோ டி ஜெனிரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியின் போது சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியின் உறுப்பினராக நீட்டா அம்பானி முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியில் சேர்ந்த முதல் இந்திய பெண் என்ற சாதனையை அவர் அப்போது படைத்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்