search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தமிழ்ப் புதல்வன் திட்டம்"

    • நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கும் இளைஞர்களின் வாக்குகளை பெறவே தமிழ் புதல்வன் திட்டம் என குற்றம் சாட்டினார்.
    • தமிழ்ப் புதல்வன் என்பதற்கு பதிலாக திராவிட புதல்வன் என்று வைக்க முடியுமா என கேள்வி கேட்டுயுள்ளார்.

    தருமபுரி:

    கோவை அரசு கலைக்கல்லூரியில் இருந்து, நேற்று தமிழ்ப் புதல்வன் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கருத்தினை தெரிவித்தார்.

    உலக பழங்குடியினர் தினத்தை ஒட்டி, தருமபுரி மாவட்டம் அரூரில் நாம் தமிழர் கட்சி பழங்குடியினர் பாதுகாப்பு பாசறையின் சார்பில் நடைபெற்ற பொது கூட்டத்தில் அவர் பேசினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்கும் இளைஞர்களின் வாக்குகளை பெறவே தமிழ்ப் புதல்வன் திட்டம் என குற்றம்சாட்டிய சீமான், தமிழ்ப்புதல்வன் என்பதற்கு பதிலாக திராவிட புதல்வன் என்று வைக்க முடியுமா என கேள்வி எழுப்பினார்.

    திராவிட கட்சிகள் காசே இல்லாமல் கூட்டத்தை கூட்டினால் கட்சியை கலைத்துவிட்டு செல்வதாக சவால் விட்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். நாதக, பாஜகவின் B டீம் அல்ல என்றும் திமுக தான் பாஜகவின் மெயின் டீம் என்றார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகம் முழுவதும் தமிழ்ப் புதல்வன் திட்டம் இன்று தொடங்கப்பட்டது.
    • சென்னையில் முதல்வர் ஸ்டாலின் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம்:

    தமிழகம் முழுவதும் தமிழ்ப் புதல்வன் திட்டம் இன்று தொடங்கப்பட்டது. கோவையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

    இந்நிலையில், ராமநாதபுரத்தில் தமிழ்ப் புதல்வன் தொடக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பங்கேற்றுப் பேசினார்.

    அப்போது அவர் பேசுகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என கூறினார். உடனே, இப்போது சொல்லக்கூடாது. ஆகஸ்ட் 19-ம் தேதிக்குப் பிறகு தான் அவர் துணை முதலமைச்சர் என விளக்கம் அளித்தார்.

    இதையடுத்து, உதயநிதி ஸ்டாலின் வரும் 19-ம் தேதி துணை முதலமைச்சராகப் பொறுப்பு ஏற்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

    • அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
    • தமிழ்ப் புதல்வன் திட்டத்தால் 3 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.

    சென்னை:

    புதுமைப்பெண் திட்டம் போல உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் 'தமிழ்ப் புதல்வன்' திட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.

    இந்த திட்டத்தின் பயன்களை எப்படி பெற வேண்டும்? என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

    அரசுப் பள்ளி (ஆங்கிலம் மற்றும் தமிழ் மீடியம்), அரசு உதவி பெறும் பள்ளிகளில் (தமிழ் மீடியம் மட்டும்) படித்துள்ள மாணவர்கள் தங்களின் இளங்கலை பட்டம், தொழிற்பயிற்சி, பட்டயக் கல்வி ஆகியவற்றை பெறும் காலம் வரை ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்தை அரசு செயல்படுத்துகிறது.

    இந்நிலையில் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்துக்கு ரூ.401 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

    6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் பயின்று உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு ரூ.1000 வழங்குவதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் ரூ.1000 மாணவர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.

    தமிழ் புதல்வன் திட்டத்தால் 3 லட்சத்து 20 ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள்.

    ×