என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "கன்ஷி ராம்"
- பாராளுமன்றத்தின் மக்களவை இன்று காலை கூடியது.
- கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது அளிக்கவேண்டும் என பா.ஜ.க. எம்.பி. கோரினார்.
புதுடெல்லி:
முன்னாள் பிரதமர்களான பி.வி.நரசிம்மராவ், சவுத்ரி சரண்சிங், முன்னாள் துணை பிரதமர் எல்.கே.அத்வானி, தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன், பீகார் முன்னாள் முதல் மந்திரி கர்ப்பூரி தாக்கூர் ஆகிய 5 பேருக்கு பாரத ரத்னா விருதை மத்திய அரசு வழங்கியது.
இந்நிலையில், பாராளுமன்றத்தின் மக்களவை இன்று காலை கூடியது. கேள்வி நேரத்தின்போது எழுந்து பேசிய உத்தர பிரதேசத்தின் ஷாஜஹான்பூர் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. எம்.பி. அருண் குமார் சாகர், பகுஜன் சமாஜ் கட்சி நிறுவனரான கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
மேலும், தலித்துகள் மற்றும் பிற புறக்கணிக்கப்பட்ட மக்கள் சுயமரியாதையுடன் வாழவும், சொந்த காலில் நிற்கவும் காரணமானவர் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷி ராம். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
ஏற்கனவே பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் கன்ஷி ராமுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.