என் மலர்
நீங்கள் தேடியது "வகுப்பறையில் நீர் கசிவு"
- பள்ளி வகுப்பறையின் மேற்கூறையில் நீர்க்கசிவு.
- கல்வி அதிகாரி உள்பட 2 பேர் சஸ்பெண்டு.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் நென்னல் மண்டலத்தில் உள்ள குஷ்னேபள்ளி கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் உள்ள வகுப்பறையின் மேற்கூறையில் நீர்க்கசிவு ஏற்பட்டது.
தொடர் மழை காரணமாக பள்ளி வகுப்பறையில் தண்ணீர் தேங்கியது. மழை பெய்யும் போது பள்ளி வகுப்பறையில் மாணவர்கள் குடை பிடித்து அமர்ந்தபடி பாடம் கவனிக்கும் வீடியோ ஒன்று சமூக வலை தளங்களில் வெளியானது.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த மாவட்ட கலெக்டர் குமார் தீபக் மற்றும் கல்வி அதிகாரிகள் பள்ளியை ஆய்வு செய்தனர்.
அப்போது பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் மேற்கூறையில் கசிவு இருப்பதை கண்டனர். மேலும் அந்த பள்ளியில் பாடம் நடத்துவதற்கு வகுப்பறைகள் இருந்தாலும் கூரையில் கசிவு உள்ள வகுப்பறையில் மாணவர்களை வேண்டுமென்றே அமர வைத்து குடைபிடித்து வீடியோ எடுத்ததாக தெரிவித்தனர்.
இது தொடர்பாக நென்னல் மண்டல கல்வி அலுவலர் மற்றும் பள்ளி உதவியாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர்.