search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒலிம்பிக் ஜோதி"

    • இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ள பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் கொடியை ஏந்திச் சென்றனர்.
    • பிரான்ஸ் தடகள வீராங்கனை மேரி ஜோஸ் பியர்ஸ் மற்றும் ஜூடோ வீரர் டெடி ரைனர் ஆகியோர் கைகளுக்கு வந்தது

    பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் 2024 ஒலிம்பிக் தொடர் நேற்று ஜூலை 26 ஆம் தேதி பிரம்மாண்டமாகத் தொடங்கியது. இந்திய நேரப்படி நேற்று இரவு 11 மணி அளவில் ஒலிம்பிக் விழா கோலாகலமாக தொடங்கியுள்ளது. முதலாவதாக சீன் நதியில் படகுகளில் விளையாட்டு வீரர்கள் அணிவகுப்பு நடந்தது.

    இந்த அணிவகுப்பில் மொத்தம் 205 நாடுகளைச் சேர்ந்த 6,800 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். இன்றைய ஒலிம்பிக்ஸ் போட்டிகளுக்கு அச்சாரமாக 1896 ஆம் ஆண்டு முதல் மாடர்ன் கேம்ஸ் தொடங்கப்பட்ட கிரீஸ் நாட்டை கவுரவிக்கும் விதமாக அந்நாட்டு வீரர்கள் அணிவகுப்பில் முதன்மை வகித்தனர்.

    இரவு சுமார் 12.30 அளவில் இந்திய வீரர்களின் அணிவகுப்பு நடைபெற்றது. இந்தியா சார்பில் டேபிள் டென்னிஸ் வீரர் சரத் கமல் மற்றும் ஒலிம்பிக்கில் இரு முறை பதக்கம் வென்றுள்ள பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் கொடியை ஏந்திச் சென்றனர். அணிவகுப்பில் இவர்கள் இருவரும் ஒலிம்பிக்கில் தேசியக் கொடியை ஏந்திச் செல்வது இதுவே முதன்முறை. இதற்கு முன்னர் இல்லாத வகையில் இந்த முறை பிரதான மைதானத்துக்கு வெளியில் தொடக்க விழா கொண்டாட்டங்கள் நடைபெற்றுள்ளது. வாணவேடிக்கைகள் விழாவிற்கு மேலும் ஒளியைக் கூடியது.

     

    நதியில் அமைக்கப்பட்ட சிறப்பு மேடைகளிலிருந்து 3 லட்சம் பேர் இந்த அணிவகுப்பைக் கண்டுகளித்தனர்.மேலும் அடுக்குமாடி கட்டிடங்கள் மற்றும் வீடுகளின் பால்கனிகளில் இருந்து 2 லட்சம் பேர் விழாவை கண்டுகளித்தனர். விழாவின் போது கடும் மழை பெய்த நிலையிலும் விழா தொடர்ந்து நடைபெற்றது. லேடி காகாவின் இசை நிகழ்ச்சியையும் பார்வையாளர்கள் கண்டு களித்தனர்.

    இதனைத்தொடர்ந்து தொடர்க்கவிழாவின் முக்கிய நிகழ்வான ஒலிம்பிக் ஜோதியை ஏற்றும் சடங்கு தொடங்கியது. பிரஞ்சு கால்பந்து ஜாம்பவான் ஜினாதினே ஜின்டேன் முதலில் ஜோதியை ஏந்திய நிலையில் ஜோதியானது ரபேல் நடால், செரினா வில்லாமஸ், நாடியா கோமானேசி என பலர் கைகளுக்கு மாறி இறுதியாகப்  பிரான்ஸ் தடகள வீராங்கனை மேரி ஜோஸ் பியர்ஸ் மற்றும் ஜூடோ வீரர் டெடி ரைனர் ஆகியோர் கைகளுக்கு வந்தது. அவர்கள் இருவரும் கூட்டாக இணைந்து பாரிஸ் ஐபில் கோபுரம் அருகே ராட்சத பலூனில் அமைக்கப்பட்ட  கால்ட்ரனில் [cauldron] ஜோதியை ஏற்றினர்.

     

    ×