என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஜன் சுராஜ்"

    • பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.
    • பிரசாந்த் கிஷோர், தனது கட்சி மக்கள் அரசாங்கத்தை அமைக்கும்.

    தேர்தல் வியூக நிபுணர்களில் முதன்மையானவராக கருதப்படுபவர், பீகார் மாநில ரோஹ்தாஸ் மாவட்டத்தை சேர்ந்த "பிகே" என அழைக்கப்படுபவர் பிரசாந்த் கிஷோர்.

    பீகார் மாநிலத்தில் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது.

    இதைமுன்னிட்டு, அம்மாநிலத்தை சேர்ந்த பிரசாந்த் கிஷோர் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வகையில் புதிய கட்சி ஒன்றை தொடங்கி உள்ளார். அவரது கட்சிக்கு ஜன் சூராஜ் கட்சி என பெயர் சூட்டியுள்ளார்.

    அதன்படி, பீகார் தலைநகர் பாட்னாவில் தனது அமைப்பான ஜன் சூராஜ் அபியான் நிர்வாகிகள் மத்தியில் அவர் பேசினார்.

    அப்போது அவர் கூறுகையில், "புதிய கட்சி வரும் அக்டோபர் மாதம் 2-ம் தேதி தொடங்கப்படும். தனது கட்சி மக்கள் அரசாங்கத்தை அமைக்கும். கட்சி தொடங்கிய முதல் நாளிலேயே ஒரு கோடி உறுப்பினர்களை கொண்ட முதல் கட்சியாக ஜன் சூராஜ் கட்சி இருக்கும். புதிய கட்சி வரலாற்றில் இடம் பிடிக்கும்.

    இந்தக் கட்சி எந்தவொரு குறிப்பிட்ட சாதி, குடும்பம் அல்லது சமூகத்துக்குள் நின்றுவிடாது. இது பீகார் மக்களின் கூட்டு முயற்சி" என்றார்.

    • 2014 மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு வியூகம் வகுத்துக்கொடுத்தவர் பிரசாந்த் கிஷோர்
    • பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஒட்டு மொத்த தேசத்தின் செல்வமும் குஜராத் பக்கம் திரும்பியது.

    அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் வியூகங்களை வகுக்கும் நிபுணர் பிரசாந்த் கிஷோர் தனது சொந்த மாநிலமான பீகாரில் நேற்று முன்தினம் காந்தி ஜெயந்தி அன்று ஜென் சுராஜ் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கியுள்ளார். பீகாரில் ஆளும் நிதிஷ் குமாரின் ஜனதா தளம் மற்றும் லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் மீது கடுமையான விமர்சனங்களைத் தெரிவித்து வரும் பிரசாந்த் கிஷோர் பிரதமர் மோடி மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

     

    2014 மக்களவை தேர்தலில் பாஜகவின் வெற்றிக்கு வியூகம் அமைத்து குஜராத் முதல்வராக இருந்த மோடி இந்தியப் பிரதமர் ஆவதில் முக்கிய பங்காற்றிய பிரசாந்த் கிஷோர் தற்போது மோடி குறித்து கூறியுள்ள கருத்துக்கள் கவனம் பெற்று வருகிறது.

    கட்சி தொடக்க விழாவின்போது அவர் பேசியதாவது, குஜராத்தின் வளர்ச்சிக்கு மோடி நிறைய செய்திருக்கிறார் என்ற எண்ணத்தில்தான் அவரது பேச்சுகளைக் கேட்டு என்னைப் போன்றவர்கள் பாஜகவுக்கு வாக்களித்தோம்.

     

    ஆனால் பாஜக ஆட்சிக்கு வந்த பின்பு ஒட்டு மொத்த தேசத்தின் செல்வமும் குஜராத் பக்கம் திரும்பியது. பீகார் மக்கள் வேலை வேறு மாநிலங்களுக்குப் படையெடுத்துச் செல்கின்றனர். குஜராத்தின் வளர்ச்சிக்காக மக்கள் வாக்களித்தால் பீகார் மக்கள் எப்படி வளர்ச்சி பெற முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். 

    • 30 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது
    • 4 தொகுதிகளில் மட்டும் 100க்கும் மேற்பட்ட தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்தினார்.

    ஜார்கண்ட், மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல் மற்றும் பல்வேறு மாநிலங்களில் நடந்த மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் பீகாரில் காலியாக இருந்த தராரி,ராம்கர், இமாம்கன்ஜ், பெலாகன்ஜ் ஆகிய 4  சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த நவம்பர் 13 ஆம் தேதி நடந்தது. இதன் வாக்குகள் இன்று எண்ணப்பட்ட நிலையில் முடிவுகள் வெளியாகி உள்ளன.

    பிரபல அரசியல் வியூக வகுப்பாளரான பீகாரை சேர்ந்த பிரசாத் கிஷோர் புதிதாக தொடங்கிய ஜன் சுராஜ் கட்சி முதல்முதல் முறையாக தேர்தல் களம் கண்டது. பீகாரின் 4 தொகுதிகளின் இடைத்தேர்தலில் ஜன் சுராஜ் கட்சி சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.

    தராரி தொகுதியில் கிரண் சிங், ராம்கரில் சுஷில் குமார் சிங், இமாம்கன்ஜ் தொகுதியில் ஜிதேந்திர பாஸ்வான், பெலாகன்ஜ் தொகுதியில் முகமத் அமாஜத் ஆகியோரை வேட்பாளர்களாகவும் அறிவித்தார்.

    கடந்த காந்தி ஜெயந்தி அன்று கட்சி தொடங்கிய பிரசாத் கிசோர் பீகாரில் ஆளும் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், லாலு பிரசாத்தின் ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.

     

    பிரதமர் மோடி பீகாரின் வளங்களை குஜராத் பக்கம் திருப்புவதாக விமர்சித்தார். 30 ஆண்டுகால ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது, உங்களுக்கு நல்லது செய்யவே வந்துள்ளேன் என்று வாக்குறுதி அளித்தார். 4 தொகுதிகளில் மட்டும் 100க்கும் மேற்பட்ட தேர்தல் பிரசார கூட்டங்களை நடத்தினார்.

    ஆனாலும் இந்த நான்கு தொகுதிகளிலும் பிரசாத் கிசோர் கட்சி படுதோல்வியை சந்தித்துள்ளது. மற்ற கட்சிகளை விட வாக்கு வித்தியாசத்திலும் பின் தங்கி உள்ளது. 4 தொகுதி இடைத்தேர்தலிலும் பாஜகவின் என்டிஏ கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

    பிரசாத் கிஷோர் வகுத்துக் கொடுத்த வியூகங்கள் மூலம் இந்தியாவில் பல அரசியல் கட்சிகளின் தேர்தலில் வெற்றிக்கு காரணமானவர். கடந்த 2014 ஆம் ஆண்டில் பாஜக மத்தியில் ஆட்சியை பிடிக்க முக்கிய பங்காற்றினார்.

    அதுவரை இருந்த தேர்தல் பிரசார மாடல்களை உடைத்து பப்ளிசிட்டி, கூட்டணி கணக்கு, வாக்கு வங்கி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்தினாலே வெற்றி பெறலாம் என்ற டிசைனை அறிமுகப்படுத்தியவரும் இவரே. இந்நிலையில் தற்போது அவரது கட்சி பங்கேற்ற முதல் தேர்தலில் படுதோல்வியை சந்தித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது. 

    ×