என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பாங்காங் நதி"
- இந்த கிராமத்தில் 70 நிரந்தர கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன.
- பயன்படுத்தப்படாத இந்த பகுதிகளில் மக்களைக் குடியேற்ற சீனா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவின் எல்லைப் பகுதிகளைச் சீனா ஆக்கிரமித்து வருவதாக குற்றசாட்டுகள் இருந்துவரும் நிலையில் தற்போது எல்லையில் பாங்காங் ஏறி அருகே சீன குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ள சாட்டிலைட் ஆதாரங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக கிழக்கு லடாக்கில் இந்திய - சீன எல்லைப்பகுதியில் உள்ள பாங்காங் ஏறியின் [Pangong Lake] குறுக்கே பாலம் ஒன்றையும் சீனா கட்டி முடித்தது. இதில் சீன ராணுவ வாகனங்கள் பயணிக்கும் சாட்டிலைட் ஆதாரங்கள் கிடைத்திருந்தன. இந்த நிலையில் அமெரிக்காவை சேர்ந்த மேக்சார் தொழில்நுட்ப நிறுவனம் செயற்கைக்கோள் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படத்தின்படி பான்காங் ஏரியின் வடக்கே, புதிய கிராமம் ஒன்றையே சீனா உருவாக்கியுள்ளது.
எல்லையில் இருந்து 36 கிலோமீட்டர்கள் தொலைவில் அமைந்துள்ள இந்த கிராமத்தில் 70 நிரந்தர கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொன்றிலும் 6 - 8 ராணுவ வீரர்கள் தங்க முடியும். மேலும் இந்த பகுதியைச் சுற்றிய ராணுவ கட்டமைப்பையும் சீனா வலுப்படுத்தி வருகிறது. இந்த கிராமத்தை விரிவுபடுத்தும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளது. இதற்கு முன் பயன்படுத்தப்படாத இந்த பகுதிகளில் மக்களைக் குடியேற்ற சீனா திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும் அவசியம் ஏற்பட்டால் ராணுவ தளமாகவும் சீனா இதைப் பயன்படுத்தும் அபாயம் உள்ளது. பாங்கோங் ஏரி அருகே மொத்தமாக 17 ஹெக்டேர் அளவுக்குச் சீன கட்டுமானங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 4,347 மீட்டர் தூரம் சாலை அமைக்கப்பட்டு கருவிகளும் நிறுவப்பட்டுள்ளது. கடந்த 2020 வாக்கில் பாங்காங் ஏரியின் தெற்கு பகுதியில் சீன ராணுவம் ஊடுருவ முயன்றது குறிப்பிடத்தக்கது.
- 50 - 100 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க வேண்டிய நேரத்தைக் குறைத்து எளிதாக ராணுவத்துருப்புகள் சென்று வருவதற்கு வழிவகை செய்கிறது.
- பாலத்தின்மீது வாகனம் கடக்கும் சேட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லடாக்கில் இந்திய - சீன எல்லைப்பகுதியில் உள்ள பாங்காங் நதியின் [Pangong Lake] குறுக்கே 400 மீட்டர் பாலத்தைச் சீனா கட்டி முடித்தது. இந்த பலமானது சீன துருப்புகள் பாங்காங் நதியின் வடக்கு மற்றும் தெற்கு கரைகளுக்கு எளிதாகச் சென்று வர உதவும் வகையில் திட்டமிடப்பட்டு கட்டப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. இந்திய எல்லையில் கட்டப்பட்டுள்ள இந்த பாலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகுந்த அச்சுறுத்தலாக அமைத்துள்ளது என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
பாலம் கட்டப்பட்டுள்ள பகுதியானது கடந்த 1958 முதல் சீனாவின் ஆக்கிரமிப்பில் இருந்து வருகிறது. ஆனால் அந்த இடத்தின்மீது சீனா உரிமை கொண்டாடுவதற்கு எதிரான நிலைப்பதிலேயே இந்தியா இருந்து வருகிறது. தற்போது கட்டப்பட்டுள்ள இந்த பாலமானது நதியைக் கடக்க 50 - 100 கிலோமீட்டர்கள் வரை பயணிக்க வேண்டிய நேரத்தைக் குறைத்து எளிதாக ராணுவத்துருப்புகள் சென்று வருவதற்கு வழிவகை செய்கிறது.
பலமானது கட்டப்பட்டது முதல் பயன்பாட்டில் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது பாலத்தின்மீது வாகனங்கள் கடக்கும் சேட்டிலைட் புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் பகுதிகளுக்கு சீனா தங்களின் வரைபடத்தில் புதிய பெயர்களை சூட்டியும், எல்லையில் ராணுவ நடவைடிகைகளை அதிகப்படுத்தியும் வருவது இந்தியாவுக்குச் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வாங் இ [ Wang Yi] மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர் சந்திப்பில் எல்லையில் உள்ள படைகளைத் திரும்பப் பெறுவதற்கான பேச்சுவார்த்தை நடந்துள்ளது. ஆனால் இப்போது வெளியாகியுள்ள இந்த சாட்டிலைட் புகைப்படங்கள் பல்வேறு சந்தேகங்களை கிளப்பியுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்