என் மலர்
நீங்கள் தேடியது "அபர்நிதி"
- `நாற்கரப்போர்' படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில் நடைபற்றது.
- புரமோஷனுக்கு நடிகைகள் வருவதில்லை.
வி6 பிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் வேலாயுதம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் `நாற்கரப்போர்'. இயக்குனர் ஸ்ரீவெற்றி இப்படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் இறுகப்பற்று படம் மூலம் மக்களிடம் கவனம் ஈர்த்த நடிகை அபர்ணதி கதாநாயகியாக நடித்துள்ளார்.
`சேத்துமான்' படத்தில் நடித்த அஸ்வின் நடித்துள்ளார். மேலும் முக்கிய வேடத்தில் லிங்கேஷ், வில்லனாக சுரேஷ் மேனன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தின் புரமோஷன் விழா சமீபத்தில் நடைபற்றது. அதில் இயக்குனர் பேசியதாவது:-
தொடர்ந்து தமிழ் சினிமாவில் ஒரு சாபக்கேடு நிலவி வருகிறது. அது என்னவென்றால் படத்தின் புரமோஷனுக்கு நடிகைகள் வருவதில்லை. இந்த படத்தில் நடித்த அபர்ணதி புரமோஷன் விழாவிற்கு வரவேண்டும் என்று தயாரிப்பாளர் அழைத்துள்ளார். அதற்கு அவர் நான் வர முடியாது என்றும் மேலும் பல கண்டிஷன்களையும் அடுக்கியுள்ளார்.
புரமோஷன் விழாவிற்கு வரவேண்டுமானால் ரூ.3 லட்சம் தர வேண்டும், விழா மேடையில் யாருடன் உட்கார வேண்டும் என்று முன்கூட்டியே கூற வேண்டும் என்பது போல் பல கண்டிஷன்களை கூறியுள்ளார்.
மேலும் பட புரமோஷன் விழாவிற்கு வரவில்லை. இவரைப் போன்ற நடிகைகள் தமிழ் சினிமாவுக்கு தேவையா என்றும் அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.