search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்லோவாகியா"

    • ஸ்லோவாகியா நாட்டின் சார்பில் 21 வயதான நீச்சல் வீராங்கனை தமரா போடோகா [Tamara Potocka ] கலந்துகொண்டார்
    • தமராவுக்கு சீராக மூச்சுவிடுவதற்கான ஆச்சிஜன் மாஸ்க் அணிவித்து ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் சென்றனர்

    பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் தங்களின் திறமையை உலக அரங்கில் வெளிப்படுத்தி பாராட்டுகளைக் குவித்து வருகின்றனர். சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாமலேயே ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடந்து வருகிறது.

    தோல்வியின் தாக்கமும் தவிர்க்க முடியாததாகவே உள்ளது. இந்நிலையில் ஸ்லோவாகியா நாட்டின் சார்பில் கலந்துகொண்ட 21 வயதான நீச்சல் வீராங்கனை தமரா போடோகா [Tamara Potocka ] 200 மீட்டர் பெண்கள் ஒற்றயர் பிரிவில் நேற்று நடைபெற்ற அரையிறுதிக்கு தகுதி பெறும் சுற்றில் கனேடிய வீராங்கனையுடன் விளையாடினார்.

     

    2 நிமிடங்கள் 14.20 நொடிகளில் 200 மீட்டரைக் கடந்து நீச்சல் குளத்தில் இருந்து வெளியேறிய தமரா, திடீரென மயங்கி விழுந்தது அங்குள்ளவர்களைப் பரபரப்பில் ஆழ்த்தியது. துரிதமாக செயல்பட்ட மருத்துவக் குழு, தமராவுக்கு சீராக மூச்சுவிடுவதற்கான ஆச்சிஜன் மாஸ்க் அணிவித்து ஸ்ட்ரெச்சரில் தூக்கிக்கொண்டு மருத்துவ உதவிக்காக அழைத்துச் சென்றது.

     

     

    தற்போது மருத்துவக் கண்காணிப்பில் உள்ள தமரா, சுயநினைவுக்கு திரும்பியுள்ளதாக ஒலிம்பிக் அதிகாரிகளால் தெரிவிக்கப்பட்டுள்ளது. தன்னோடு போட்டியிட்ட கனேடிய வீராங்கனை சம்மர் மெக்லண்டோஷ் -ஐ Summer McIntosh விட 4.3 நொடிகள் தாமதமாக தமரா இலக்கை அடைந்ததால் காலிறுதிக்கு அவர் தகுதி பெறவில்லை.   

     

    ×