search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலகப் பட்டினிக் குறியீடு"

    • அறிக்கைப்படி, இந்தியாவின் பட்டினிக் குறியீடானது மிகவும் பின்தங்கிய நிலையில் 111வது இடத்தில் தீவிரமான அளவில் உள்ளது.
    • ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது மட்டுமே பட்டினியோடு நேரடியாகத் தொடர்புடையது என்று அன்னபூரணா தேவி விளக்கமளித்துள்ளார்.

     2023 ஆம் ஆண்டுக்கான உலகப் பட்டினிக் குறியீடு Global Hunger Index (GHI) அறிக்கை கடந்த வருடம் அக்டோபர் மாதம் வெளியிடப்பட்டது. இந்த குறியீட்டில் மொத்தம் உள்ள 121 நாடுகளில் 111 வது இடத்தில் இந்தியா உள்ளது. அயர்லாந்தைச் சேர்ந்த கன்சர்ன் வேர்ல்ட்வைட் என்ற நிறுவனமும், ஜெர்மனியைச் சேர்ந்த வெல்ட் ஹங்கர் ஹில்ஃபே என்ற நிறுவனமும் இந்தப் பட்டியலை வெளியிட்டு வருகின்றன.

    அதன் அறிக்கைப்படி, இந்தியாவின் பட்டினிக் குறியீடானது மிகவும் பின்தங்கிய நிலையில் 111வது இடத்தில் தீவிரமான அளவில் உள்ளது. இது அரசியல் களத்தில் பேசுபொருளான நிலையில் இதுகுறித்து தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்குத் தனது பதிலை மக்களவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அன்னபூர்ணா தேவி எழுத்துப்பூர்வமாகச் சமர்ப்பித்துள்ளார்.

     

    அதில் அவர், GHI -யின் அறிக்கை இந்தியாவின் உண்மை நிலையை விவரிக்கவில்லை. GHI பயன்படுத்தும் பட்டினியை அளக்கும் காரணிகள் குறைபாடுடையதாகும். எனவே அந்த அறிக்கை face value கொண்டதல்ல. மேலும் இந்தியாவின் பட்டினி அளவைப் பொறுத்தவரை GHI உடைய மதிப்பீடு தவறானது.

     

    GHI பட்டினிக் குறியீட்டை ஊட்டச்சத்துக் குறைபாடு, 5வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் சத்துணவு குறைபாட்டால் தங்கள் உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல் இருத்தல், வயதுக்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல், 5 வயதுக்கு உட்பட்ட குழந்தை உயிரிழப்புகள் ஆகிய காரணிகளை அடிப்படையாக வைத்து உலக பட்டினி குறியீடு கணக்கிடப்படுகிறது. இவற்றில் ஊட்டச்சத்துக் குறைபாடு என்பது மட்டுமே பட்டினியோடு நேரடியாகத் தொடர்புடையது என்று அன்னபூரணா தேவி விளக்கமளித்துள்ளார்.  

    ×