search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரேட்டிங்"

    • உலக தலைவர்களில் 69 சதவீத ஆதரவுடன் பிரதமர் மோடி முதலிடத்தில் நீடிக்கிறார்.
    • மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் லோபசுக்கு 2-வது இடத்தில் உள்ளார்.

    புதுடெல்லி:

    உலக அளவில் புகழ்பெற்ற தலைவர்கள் குறித்த கருத்துக்கணிப்பை மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் தொடர்ந்து நடத்தி வருகிறது.

    இந்நிலையில், மார்னிங் கன்சல்ட் என்ற நிறுவனம் உலகளாவிய பிரபல தலைவர்கள் யார் என்ற கருத்துக் கணிப்பை சமீபத்தில் நடத்தியது.

    இதில், பிரபலமான உலக தலைவர்களில் 69 சதவீத ஆதரவுடன் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் முதலிடத்தில் நீடிக்கிறார்.

    இந்திய பிரதமர் மோடிக்கு 69 சதவீதம் பேர் ஆதரவு அளித்திருந்தனர். மெக்சிகோ அதிபர் ஆன்ட்ரஸ் மானுவேல் லோபசுக்கு 63 சதவீதம் பேர் ஆதரவளித்ததால் 2-ம் இடம் பிடித்தார்.

    அர்ஜென்டினா அதிபர் ஜாவிர் மிலே 60 சதவீதம் பேர் 3-ம் இடத்திலும், சுவிட்சர்லாந்தின் வையோலா அம்ஜெர்ட் 52 சதவீதத்துடன் 4-ம் இடத்திலும் உள்ளார்.

    அயர்லாந்து பிரதமர் சைமன் ஹாரிஸ் 47 சதவீதத்துடன் 5வது இடத்திலும், பிரிட்டன் பிரதமர் கெய்ரி ஸ்ட்ராமர் 45 சதவீதத்துடன் 6-வது இடத்திலும் உள்ளனர்.

    போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்க் 45 சதவீதத்துடன் 7-ம் இடத்திலும், ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பனேசி 42 சதவீதத்துடன் 8-ம் இடத்திலும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் 40 சதவீதத்துடன் 9-ம் இடத்திலும், இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி 40 சதவீதத்துடன் 10-வது இடத்திலும் உள்ளனர்.

    கடந்த ஆண்டும் பிரதமர் மோடி முதலிடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×