search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தேசிய கிரிக்கெட் அகாடமி"

    • ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்படும் அளவில் நீச்சல் குளம் உள்ளது.
    • அதிநவீன பயிற்சி மற்றும் விளையாட்டு அறிவியல் வசதிகள் கொண்டவையாக அமைந்துள்ளது.

    பிசிசிஐ-யின் தேசிய கிரிக்கெட் அகாடமி பெங்களூருவில் உள்ள சின்னசாமி வளாகத்தில் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் புதிய கிரிக்கெட் அகாடமியை பெங்களூருவில் பிசிசிஐ உருவாக்கி வந்தது. இந்த புதிய அகாடமியின் கட்டுமான வேலைகள் உள்ளிட்ட அனைத்து வேலைகளும் முடிவடையும் தருவாயில் உள்ளது. விரைவில் இந்த அகாடமி திறக்கப்படும் என பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தெரிவித்துள்ளார். இதை அறிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி என எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இந்த அகாடமியில் மூன்று உலத்தரம் வாய்ந்த மைதானங்கள் உள்ளன. அத்துடன் 45 பயிற்சி ஆடுகளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிக்காக அமைக்கப்படும் அளவில் நீச்சல் குளம் அமைக்கப்பட்டுள்ளது. அதிநவீன பயிற்சி, காயத்தில் இருந்து மீணடு வருவதற்கான பயிற்சி மற்றும் விளையாட்டு அறிவியல் வசதிகள் கொண்டவையாக அமைந்துள்ளது.

    சிறந்த சூழ்நிலையில் தற்போதைய வீரர்கள் மற்றும் எதிர்கால வீரர்கள் தங்களுடைய திறமைகளை வளர்த்து கொள்ள முடியும் எனத் தெரிவித்துள்ளது.

    தற்போதைய தேசிய கிரிக்கெட் அகாடமி சின்னசாமி மைதான வளாகத்தில் அமைந்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களிலும் தேசிய கிரிக்கெட் அகாடமி தொடங்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

    ×