என் மலர்
நீங்கள் தேடியது "இஸ்தான்புல்"
- இஸ்தான்புல் நகரில் வைத்து நாம் விவாதிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
- . ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு தனது முதல் எக்ஸ் கணக்கை தொடங்கியுள்ள யூசுப் வெளியிட்ட இரண்டாவது பதிவு இது
துப்பாக்கி சுடுதலில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் கலப்பு இரட்டையர் பிரிவில் கடந்த ஜூன் 1 ஆம் தேதி நடந்த போட்டியில் மனுபாக்கர்-சரப்ஜோத் சிங் ஜோடி வெண்கல பதக்கத்தை வென்றது. இந்த போட்டியில் வெள்ளிப் பதக்கத்தைத் துருக்கி ஜோடி யூசுப் டிகேக் - செவ்வல் இலைதா தர்ஹான் வென்றனர்.
ஒரு கையை பாக்கெட்டில் விட்டுக்கொண்டு, ஒற்றைக் கையில் எந்த விதமான சிறப்பு சாதனங்களையும் பயன்படுத்தாமல் வெறும் கண் கண்ணாடியுடன் சர்வ சாதாரணமாக 51 வயதான யூசுப் வெள்ளிப் மெடலை தட்டிச் சென்ற விதம் அனைவரையும் கவர்ந்துள்ளது. சமூக வலைத்தளங்களை யூசுப் பற்றிய விவாதமே ஆக்கிரமித்துள்ளது.
இந்நிலையில் தனது எக்ஸ் பக்கத்தில் யூசுப், எக்ஸ் உரிமையாளர் எலான் மஸ்கிடம் ஒரு கேள்வியை முன்வைத்துள்ளார். அதாவது, எதிர்காலத்தில் வரவுள்ள ரோபோட்கள், ஒரு கையை பாக்கெட்டில் வைத்துக்கொண்டு ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்ல வாய்ப்பிருக்கிறதா? இதைப்பற்றி கண்டங்களை ஒன்றிணைக்கும் கலாச்சார தலைநகரமான துருக்கியின் இஸ்தான்புல் நகரில் வைத்து நாம் விவாதிக்கலாம் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
முன்னதாகவே யூசுபின் ஒலிம்பிக் ஸ்டைலை வியந்து பாராட்டிய எலான் மஸ்க் தற்போது அவரது பதிவுக்கு உடனே பதில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில்,எ திர்கால ரோபோட்கள் பலகையின் மையத்தைக் குறிவைத்தே சுடும் திறன் கொண்டிருக்கும். நான் இஸ்தான்புல் வரும் நாளை எதிர்நோக்கி இருக்கிறேன், உலகின் சிறந்த நகரங்களில் ஒன்று அது என்று பதிலளித்துள்ளார்.
Robots will hit the center of the bullseye every time
— Elon Musk (@elonmusk) August 4, 2024
இவர்களின் உரையாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஒலிம்பிக் வெற்றிக்குப் பிறகு தனது முதல் எக்ஸ் கணக்கை தொடங்கியுள்ள யூசுப் வெளியிட்ட இரண்டாவது பதிவு இது என்பது குறிப்பிடத்தக்கது.
- தலைநகர் இஸ்தான்புல்லில் சுல்தான்பெய்லி மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டின் 5 வது மாடியில் இருந்து குதித்து அய்குட் தற்கொலை செய்துகொண்டுள்ளார்
- அய்குட் உடலின் அருகே கிடைத்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டதாக அறிவித்த துருக்கியை சேர்ந்த இளம் இன்ஸ்டா பிரபலம் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக பிரபலமடையத் தொடங்கியுள்ள தன்னைத் தானே திருமணம் செய்து கொள்ளும் சோலோகேமி [SOLOGAMY] திருமண முறைப்படி கடந்த வருடம் [2023] தான் திருமணம் செய்து கொண்டதாக துருக்கியை சேர்ந்த இன்ஸ்ட்டா பிரபலம் குப்ரா அய்குட் (வயது 26) அறிவித்திருந்தார்.

இந்நிலையில் நேற்றய தினம் தலைநகர் இஸ்தான்புல்லில் சுல்தான்பெய்லி [Sultanbeyli] மாவட்டத்தில் உள்ள அவரது வீட்டின் 5 வது மாடியில் இருந்து குதித்து அய்குட் தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் கடைசியாக இன்ஸ்டாவில் வெளியிட்டிருந்த வீடியோவில், உடல் எடையை அதிகரிப்பது சவாலாக உள்ளது.
நான் மிக விரைவில் எடையை அதிகரித்தே ஆகவேண்டும். ஆனால் தினமும் ஒருகிலோ எடை குறைந்துகொண்டே வருகிறேன் என வேதனையுட தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது தற்கொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அய்குட் உடலின் அருகே கிடைத்த கடிதத்தை வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
- பயணிகளுக்கு தங்கும் வசதி, உணவு வழங்கப்படவில்லை.
- இண்டிகோ சார்பில் யாரும் விமான நிலையம் வரவில்லை.
துருக்கியில் இருந்து டெல்லி மற்றும் மும்பை வரவிருந்த சுமார் 400 இண்டிகோ பயணிகள் இஸ்தான்புல் விமான நிலையில் சிக்கித் தவித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
முதலில் விமானம் தாமதமாவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டு விட்டது என பயணிகள் தங்களின் எக்ஸ் மற்றும் லின்க்டுஇன் தளங்களில் பதிவிட்டுள்ளனர். விமான பயணிகளில் ஒருவர் தனது பதிவில், "முதலில் விமானம் இரண்டு முறை தாமதமானது, பிறகு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. எனினும், 12 மணி நேரம் கழித்து விமானம் புறப்பட தயாராகும் என்று அறிவிக்கப்பட்டது.
இதனால் விமான நிலையத்தில் சிக்கித்தவிக்கும் விமான பயணிகளில் சிலருக்கு உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளது. மேலும், பயணிகளுக்கு தங்கும் வசதி, உணவு எதுவும் வழங்கப்படவில்லை. இண்டிகோ நிறுவனம் சார்பில் யாரும் விமான நிலையம் வரவும் இல்லை, பயணிகளை அனுகவும் இல்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னதாக ஏர்ஹெல்ப் ஸ்கோர் வெளியிட்ட அறிக்கையின் படி உலகின் மோசமான விமான நிறுவனங்கள் பட்டியலில் இண்டிகோ இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.