என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "அடையாளம் தெரியாத உடல்கள்"
- நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 380-ஐ கடந்துள்ளது.
- இறந்து 72 மணிநேரம் ஆன பிறகும் அடையாளம் காணப்படாத உடலை அரசே அடக்கம் செய்யலாம்.
கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த 29 ஆம் தேதி கொட்டித்தீர்ந்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டதில் பல நூறு குடும்பங்களை சேர்ந்தவர்கள் மண்ணில் புதைந்து போயினர்.
நிலச்சரிவில் சிக்கி இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 380-ஐ கடந்துள்ளது. மேலும் பலர் மண்ணில் புதைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.
குறிப்பாக, சூரல்மலை, முண்டக்கை ஆகிய பகுதிகளில் இருந்தும், பாதிப்பு ஏற்பட்ட பகுதியில் இருந்து 35 கிமீக்கு மேல் தொலைவில் உள்ள சாலியார் ஆற்றில் இருந்தும் உடல்கள் கிடைத்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில், அடையாளம் காணப்படாத 31 உடல்கள் 158 உடல் பாகங்களும் புதுமலையில் உள்ள 64 சென்ட் இடத்தில் அடக்கம் செய்யப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.
இறந்து 72 மணிநேரம் ஆன பிறகும் அடையாளம் காணப்படாத உடலை புதைக்க சட்டம் இருந்தாலும், இறுதிச் சடங்குகளுக்கு முன்னதாகவே உறவினர்கள் அடையாளம் கண்டு கொண்டு செல்ல அரசு அவகாசம் அளித்திருந்தது.
அடையாளம் தெரியாத உடல்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தாலும் இறந்தவர்களின் டி.என்.ஏ.வும் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடமும் அரசால் பதிவு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.